Friday, December 18, 2009

சிலிர்க்கிற நினைவுகள்

அன்று : 
கதை பேசிக்கொண்டு
தூரியாடிய சுகம் -

அது தண்ணீரில் எழுத்து ..!!

இன்று :

கட்டிலில் படுத்து
அதை நினைத்து
பார்க்கும் சுகம்.,

இது - இதயத்தில் கல்வெட்டு !!

கோபமில்லையேல் காதலில்லை

நீயும்நானும் வளர்த்த காதலை விட ,  நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் தான் அதிகம் 
என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் , பிரதிபலிக்கும் கண்ணாடி - கோபம்!! 


கோபப்படுகிற ஒவ்வொரு நொடியும் நம்மை நாம் அதிகமாய் புரிந்துகொண்டிருப்பதை உணர்  !

கோபமில்லையேல் காதலில்லை !

Thursday, December 17, 2009

கேள்வி இல்லா தேர்வு                               கேள்வியை  நானும் கேட்கவில்லை,
                                      பதிலை  நீயும் சொல்லவில்லை .,
                                                         இருந்தும்
                                               முடிந்து விட்டது
                                                        நமக்கான
                                                   காதல் தேர்வு ..!!

கல்லறை கடிதம்

*இதோ .,
 இவள் .,
 திறக்காமலேயே
 கிழித்தெறிந்த
 என் காதல் கடிதத்தை ,
 ஓட்டுப் போட்டு
 வைத்திருக்கிறேன்!!


*என்னோடு  உயிரில்லாமல்நான்  
 மண்ணோடு மண்ணாகிப்
 போன பின்பு ,
 என் வலிகள் சுமந்த
 இவ்வெள்ளைத்தாளாவது
 உயிர் பெற்று வாழட்டும் ..!!

*என் உயிருக்கு நெருக்கமானவர் எவரேனும்  .,
  இதை என் கல்லறை மீது
  செதுக்கி வையுங்கள் .,

யாருக்கும் தெரியாமல்
அதை படித்து விட்டு
என்றாவது  ஓர்நாள்
காதலித்தாலும் காதலிப்பாள் - என்னை !!

பேதைப் பெண் !! பணக்காரக் காதலி !!

Friday, December 11, 2009

மரணத்தில் ஆறுதல்


சப்தமின்றி தோன்றிடும் உன்
அத்துனை வார்த்தைகளும்,

சொல்லமுடியாத உன் காதலை
சொல்லிக்கொண்டிருந்ததே!

திறக்காத உன்  இதழ்கள் கூட
திருடிவிட்டுப்போனதே -
என் இதயத்தை அன்று !

இன்று யார் களவாடியது ...??

எங்கே தொலைத்தாய் ?
எனக்கான உன் வாத்தைகளை ??

உன் வார்த்தைகள் கிடைக்காத போது
கண்ணீரில் ஆறுதல் தேடினேன்..,

இனி உன் மௌனங்களும்
கிடைக்காமல் போனால் மரணத்தில் தேடவோ ??
.
.
.
ஆறுதல் !!  மரணத்தில்  ஆறுதல்  

Nowadays i miss ur words di azhagi.!!
mis u so much

Sunday, November 15, 2009

நிழலாகும் நிலவு


ஏதுமில்லா பகலிலும் இரவிலும் ,
எல்லாவுமாய் வந்த முழுமை -நீ !


அழுகை மட்டும் பழகிய உதட்டில்
புன்னகை விதைகளை விதைத்த அன்னை !!- நீ !


சோகம் மட்டுமே சுமந்திருந்த வயிற்றில்,
சுகங்களையும் சுமந்து கொண்டிருக்கிறாள் - என்
கவிதை புத்தகத் தாய் !


நிலவு மட்டும் நிறைந்திருந்த வானத்தில்,
நீ வந்தது முதல் நிலவு நிழலானது !!


சினங்களை சலிக்காமல் வெளிப்படுத்தும் என்
பழக்கங்களை , உன்
ஈர உதட்டின் இனிய முத்தங்களால் மாற்றியவள் ! நீ!!


வார்த்தை வாராமல் அழுது , மறுகனம்
வார்த்தை வராமல் சிரிக்க வைக்க யாரால் முடியும் ..!!?


வயிற்றில் சுமக்க விதியில்லாமல் , இதயத்திலேயே  என்
குழந்தையை சுமந்துகொண்டிருக்கும்
உன் ஒருத்தியால் மட்டுமே முடியுமடி!!! - என்
அத்தனை துடிப்பிற்கும் மொத்தமான சொந்தக்காரியே !!


Love u azhagi !!

Monday, November 9, 2009

நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு

பேருந்துப் படிகளில் நான்
நின்றுகொண்டே தவமிருப்பதை 
பார்த்தோ என்னவோ !


நிழற்குடையில் அமர்ந்திருக்கும்
நிலவு ~ நெஞ்சை
கொள்ளையிட்டுப் போகிறது !


ஆம் ,
எனக்கே சொந்தமான இருவரிக்கவிதை -
அவள் ஈரஇதழ்களிலிருந்து தெறிக்கும்
புன்னகை - என் கன்னங்களை
முத்தமிடும் போது


இதயம் ஒரு கனம் உறைகிறது !!
இன்னும் நம் காதல் விரிகிறது !!!

Sunday, November 8, 2009

சுவர்களின் எதிரொலி


  மாடிப்படிகளின் குறுகிய வளைவுகளில்,
  இப்போழ்தெல்லாம் கொஞ்சம்
  மெதுவாகவே கடந்து போகிறேன் !                                       

  ஆம், அன்று                                        
  நாம் முத்தமிட்ட சப்தங்களை ,
  சுவர்கள்,
  இன்றும் எதிரொலித்து கொண்டுதான்
 இருக்கிறது அழகி !!
                                         
  உயிரில்லாத சுவருக்குக்  கூடக்
 கேட்கிறதே நம் அன்பின் சப்தம்!

  உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் ஏன்
  அது கேட்பதில்லை  !!?

  உன்னை தொலைக்கப்போகும்
  அத்துனை நொடிகளையும்
  திட்டிக்கொண்டே , உன்
  பிரபா !

                                      

Sunday, October 25, 2009

புதுசாய் பட்ட வெட்கம்
ஊரே பார்த்துக்
கண்வைக்கும்
போதெல்லாம்,
மேகத்திறைக்குள்
மறைந்துகொள்ளும்,
நிலவை - பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்,
எனக்கு ஞாபகம்
வருகிறதடி !!
"பூப்படைந்த போதுநீ
புதுசாய் பட்ட வெட்கம்!!"

நிர்ணயிக்கப்பட்ட முடிவு


எப்படித்
தொடங்கினாலும்
இப்படித்தான் வந்து 
முடிந்து போகிறது !
என் கவிதைகள் ....!.
..
..
"ஏனடி நீஎனை விட்டுப்போனாய் ? "
என்று !

நிறைவேறாத உறுதிமொழி :தினமும்
உன்னை
நினைத்து
நான்
எடுத்துக்கொள்ளும்
உறுதிமொழி :

நாளை முதல்
உன்னை,
அடியோடு
"மறந்துவிடவேண்டும்"

நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிற இதயம்யார் சொன்னது
உன்னை நான்
மறக்கவில்லை என்று !!?
இன்றும்கூட ஒவ்வொரு
நிமிடத்திற்கும்
72 முறை
உன்னை மறந்து
கொண்டுதானே
இருக்கிறேன் !!?

உன் சிரிப்பொலி சிதறிவிட்ட உண்மை :என்னால்நீ சிரிக்கும்
ஒவ்வொரு சிறு நொடியும் ,
உன் சிரிப்பொலி என்
செவிகளை முத்தமிட்டுச்
சின்னதாய் ஒரு
உன்னத உண்மையை
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போகிறது !!
ஆம்,
என் கல்லறையில் அழுவதற்கு
உன் இதழ்களும் இறக்கம் காட்டுமென்று !!

Tuesday, October 20, 2009

அதிகாலை உளறல்கள்

ஏழு சுவரங்களிலும்
எத்தனையோ கோடி
ராகங்களிலும்,
எங்கிருக்கிறது இந்த
இனிமை !?

எங்கும் காணமுடியாத
ரீங்காரமாய் ,
எழ மனமில்லாமல் என்னிடம்
தொலைபேசியில்
உளறிக் கொண்டிருக்கு-மென்
அழகியின்
அதிகாலை உளறல்கள் !
ஏனோ அத்தனை அழகு !!

நிசமாகும் பொய்கள்


 நீ இல்லையெனில்
உலகமே இல்லை ! ,
என்று
கவிதைகளுக்காக நான்
எழுதிய பொய்களெல்லாம்
இன்று
நிஜங்களாகி விட்டதே
அழகி!

Wednesday, October 14, 2009

உனக்குள் தொலைகிறேன்உன்னையே கட்டிக்கொண்டு

சுற்றியலையும் என் நினைவுகளுக்கு

என்ன பதில் சொல்ல போகிறாய் அழகி?

"
உன் வாழ்க்கையில் நான் "

என்று தொடங்கியது நம் உறவு !

"
எனக்குள் நீ " என்று வளர்ந்தது !

"
உனக்குள் நான்" என்றும் அது படர்ந்தது !!

இன்று

"
நமக்காக நாம்" என்றாகிவிட்டோம் !!

உன்னையே என் உலகம் என்று

இப்போழ்தெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் !!

இல்லை., இல்லை , " உன்னைமட்டும் "!

கிறுக்குத்தனமாய் எங்கோ தொலைந்து போவதும் ,

பின் சாமர்த்யமாய் உனக்குள் கிடைப்பதும்

இன்றெனக்கு வாடிக்கையாகிவிட்டதடி அழகி !

இன்றும் அப்படிதான் தொலைந்துவிட்டேன் !

உனக்குள் தேடிக்கொடடி அழகி !!

Tuesday, October 13, 2009

மறைய மறுக்கும் நிலவு


கூப்பிடும் தொலைவில்
அலைபேசியில் என் அழகி..
இருவீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்தும்,
இவனும் அவளும்
நிலாரசிக்கும்
சன்னல் மட்டும் இன்னும்
திறந்தே இருக்கிறது...!!

முகத்திரையை கதவுகள் மறைப்பினும்,
மனத்திரையை சுக்குநூறாய்
கிழித்தெரிகிறோம் நாம்!-
பெயர் வைக்க தெரியாத ஓர்
உறவு ஜன்னலின் வழியே !!

கண்களில் சொருகும் தூக்கத்தை மறந்து
நிலாக்குளிர் நீளும் வரை நீள்கிறது
நம் உரையாடல்கள் !

உயிர் நடுக்கும் குளிரிலும் குளிர்காய்கிறோம்
நீ என் பேச்சிலும் நான் உன் மூச்சிலும் ..!!

விடியல்கள் தொடங்கும் முன்னொடி வரை
விடாமல் தொடரும் நம் பேச்சை
ரசித்துக்கொண்டே மறைய மறுக்கும் நிலவிற்கு
நான் என்ன பதில் சொல்ல முடியும் !?
"ச்ச்ச்ச்சீ" ரசித்துவிட்டுப்போ
என்பதைத் தவிர?

Friday, October 2, 2009

லவ் லெட்டர் # அத்தியாயம் ஒன்று !
என் கறுப்பு இரவுகளை ர் கனவுகளில் நனைத்தவள் நீ! தண்ணீருக்குள் அழுதழுதே பழகிப்போன என் கண்ணீர் துளிகளுக்கு உறைவிடம் தந்து ஆறுதல் சொன்னவள் நீ!! கற்பனையில் கூட சாத்தியப்படாத இந்த உறவை அத்தனை உண்மையாக்கி உயிர் செய்தவள் நீ!! எதையும் என்னிடம் இருந்து எதிர்பார்த்ததில்லை ! ஆனாலும் கொடுத்து கொண்டே இருக்கிறாய் ..!! எல்லையில்லாத ஈடு இணையற்ற உன் அன்பை !! அதுதான் நீ !! உன் இதய ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அத்தனை ரகசியங்களையும் என் செவிகளுக்கு விருந்தாக்க மறந்ததில்லை நீ!! சுகமகிழ்வுகள், சோகங்கள், சிலசமயம் கோபங்கள் , பைத்தியக்காரத்தனங்கள் !! இத்தனையும் பகிர்ந்திருக்கிறோம் நாம்...!! விதி நம்மை சேர்த்த விதம் வியப்பின் உச்சம் அழகி!! நாட்கடிகாரம் தொடங்கும் முன்னரே உன் நினைவோடு சுற்ற தொடங்கிடுது என் நிழல்கள்!!  இத்தனையும் நினைத்து பார்த்து சிலிர்க்கிற நொடிகளில், உன் பிரிவின் நினைவும் ஏனோ குறுக்கிட்டுத் தொலைக்கிறது...!! உன்னில் பின்னிக்கொண்ட என் விதியை மீட்க வழியிருப்பினும் மனமில்லையே என்னிடம்!! செத்துப்போன என் கண்ணீருக்கு ஏன் மறுபிறவி கொடுத்தாய்?? உன் அழுகையால்.!!! யார்க்கும் தராத அழுகையை ஏன் எனக்காக பரிசாக்கினாய்??! நீ எத்தனை முறை என்னை அழ வைத்தாயோ அத்தனை முறைக்கு மேல் ஒருகோடி தடவை நினைத்திருக்கிறேன் உன்னை சிரிக்க வைக்க என்ன செய்வதென்று??!! அதுசரி ! எதிர்பாராது மழை எதிர்பாராமலே பெய்து ஓய்ந்திடுமே... அது போல் நீயும் எனை தவிக்கவிட்டு சென்றிடாதடி சகி ... நீயில்லாத நொடிகளில் நெருப்பிலிட்ட காகிதமாய்த்தான் எரிகிறது என் இதயம்!! இன்று , நொடிஎங்கும் என்னுள் நிறைந்து கிடப்பது உன் பிரிவின் நினைவு மட்டும் தான் !! என்ன நினைக்கிறதோ இப்போழ்து உன் மனம் ? அதை கண்டிப்பாய் நான் மாற்ற முடியாது...!! வேண்டுமானால் என் சட்டைக் காலரை பிடித்து கொண்டு என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் !! ஏன் நீ என்மேல் இவ்வளவு அன்பு வைத்தாய் ? ஏன் நான் உனக்குமேல் உன்னிடம் அன்பு வைத்தேன்??!!  எது எப்படியோ , சேமித்து வைத்திரு உன் செல்லச்சிரிப்பினை ! செத்தாலும் கேட்பேன் உன் சின்னகனவுகளில் தினம் நுழைந்து...!!  நீ அப்பிவிட்டுப் போன அத்தனை இன்பக் கலர்களோடே இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் உன் இனிய நண்பன் பிரபா ...!! 
 Love you so much

Sunday, September 27, 2009

சாய்ந்தகிலையின் சப்தமில்லாத உண்மை


"சாய்ந்து போன
மரக்கிளைகள் கூட
சப்தமின்றி ஓர்
உண்மை சொல்கிறது ,
வெறுத்தாலும்
கட்டியனைத்துகொண்டதே
மண் !!"


வெறுக்க தொடங்கும்
போதுதான் நம்மை
விரும்பி ஏற்கிறது-அன்பு !!

விட்டுகொடுக்கப்பட்ட உயிர்இருவிதமானது
என் வாழ்க்கை !
ஆம்,
ஒன்றில் உனக்காகக்
கொடுக்கிறேன் ..
மற்றொன்றில்
உன்னையே (விட்டு)
கொடுக்கிறேன்
..!!
அழகி.!!

Monday, September 7, 2009

உன் கண்ணீராய் பிறக்க ஆசை !


அடுத்த பிறவி என்று
ஒன்றிருந்தால் ,
அதில் உன் கண்ணீராய்
பிறக்க வேண்டும் !!
ஆம் ! ..... உன்
இதயத்தில் தோன்றி ,
கண்களில் பிறந்து ,
கன்னங்களில் உறைந்து,
இதழ்களுக்கிடையில்
இறந்துவிட வேண்டும் !!!

உலகிலேயே மிகப்பெரிய பாவி-நான்உன்னை காதலிப்பது
பாவமெனில்,
நினைவில் வைத்துகொள் !
உலகம் அழியும் போது
என்னை விட அதிகமாய் இங்கு
பாவம் செய்தவர் எவரும்
இருக்கமாட்டார் !!!

மனங்கள் ஒருமித்ததை
மனிதம் வெறுத்துவிட்டது !!
மதக் கோட்பாட்டில்
ஒன்று சேர்ந்து ..!!
நம் எண்ணங்கள் எல்லாம்
கண்ணீரில் கப்பலானது !!
எல்லாம் இந்த எளவு சாதியால் ..!!

உனக்கான ஒருவன்
நானில்லை என்பது
எவ்வளவு உண்மையோ ?
அவ்வளவு உண்மை ..!!
உனக்காக
இல்லாதவர்க்குள்ளும்
நானில்லை என்பது ...!!!

அழ மறக்காத விழிகள் !!


நகர்கிற நொடிகளும் ,
நீள்கிற நாட்களும்,
உன்னை மறந்து விட்டதே ...?
ஏன் என் இமைகள் மட்டும்
இன்றும் உன் நினைவில்
அழ மறப்பதில்லை ..!!

எழுதப்படாத முடிவு !


தொடக்கத்திலேயே
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது!
முடிவு !
உனக்கொருநாள் - எனக்கொருநாள்
என்று....!!!
இருந்தும்
எத்தனை அதிசயம் ?
எழுதப்படாத முடிவாய்
இன்றும் தொடர்கிறதே ...!!
நம் காதல் !!

Sunday, September 6, 2009

விளையாட்டான நினைவுகள் !

நீ
தூக்கி எறிந்த இதயத்தை
ப்படியோ தேடி எடுத்து
வைத்திருக்கிறேன் !!
உன்கைகளால்
மறுபடி
ஒருமுறை
தொட்டுத்
தூக்கி
ஏறி..!!
விளையாட்டாகவாவது
உன்
நினைவுகள்
என்னோடு இருந்து விட்டு போகட்டுமே...!!!

மின்னல் காதல்

தொலைவில் இருந்து
பார்க்கையில்
அழகு !
தொட்டு பார்க்க
நினைத்தால்
அழிவு!!
தூரத்து மின்னலை போல் காதல் !!
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூற்றுக்கள் :
  • "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."
  • 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'
  • "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."
  • "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
  • "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."
  • "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."
  • "செய் அல்லது செத்துமடி."

Friday, August 21, 2009

கேட்காமல் கிடைத்த வரம்

பேசுவதற்கும் கேட்பதற்கும்
எத்தனையோ இருந்தும் கூட,
ஏனோ உன் இதழ் திறக்காத
மௌனங்களை
இரசிப்பதிலேயே என்
பாதிநேரம் ஓடிபோகிறது ..!!

கடமைக்குக் கொஞ்சநேரம்
வெட்கப்பட்டுவிட்டு,
கண்ணிமைக்கும் நேரத்தில்
வந்தமர்கிறாய் ...!!
உன்னுடல் என்னோடுரசி ..!!

கொஞ்சமாய் தீண்டத்தொடங்கி ,
நேரப்போக்கில் என் அத்தனை
விரல்களையும் பற்றிக்கொள்கிறது !
பூவிதழ் மிஞ்சும் உன் பிஞ்சு விரல்கள்..!!

அஞ்சுவிரல்கள் என்
உள்ளங்கை சிறையில்
அடைப்படிருக்கும் போழ்தும் .,
மீதமிருக்கும் அஞ்சு,
என் கண்ணகளை
வருடிக்கொண்டிருக்கிறது..!!

ஊடல்கொஞ்சம் கூடும்போது,
ஈரம்படாத இதழ்திறக்காத
முத்தம் கிடைக்கிறது..!!
என் கன்னங்களுக்கு வரமாய்..!!
நொடிகள் ஒவ்வொன்றிலும்
நீஎனை ரசிக்கும் போழ்துதான்
நெஞ்சினிக்கும் உண்மையொன்றை
உணர்கிறேனடி..!!

ஆம்... !

உன்னை போன்ற வரமொன்றை
இறைவனிடம் எத்தனை முறை
கேட்டாலும் கிடைக்காதடி ...!! அழகி !

Sunday, August 16, 2009

போர்வை இரகசியம்
'மணி ஆராச்சு ',
இன்னுமென்னடா தூக்கம் ?!

என்ற வேலைக்கு போகிற
அப்பாவின் அதட்டல்கள் ..!

'எதிர்த்த வீட்டு பையனெல்லாம்
குளித்து முடித்து கோயிலுக்குப் போகிறானாம்..!!
இது மட்டும் சோம்பேறிக்கனக்காய் சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது'..!!

என்ற அம்மாவின் கரிசல்கள் ...!!!

இதெல்லாம் உருப்படுவதாய் தெரியவில்லை !!

என்ற அண்ணனின் சாபங்கள்..,

இத்தனையும் கேட்டுக்கொண்டுதான்
விழித்திருக்கிறேன் ..!!

எங்கே போர்வை விலக்கினால் உன் பிரிவின் நினைவில் நான்
அழுதுகொண்டிருப்பதை யாரும் பார்த்திட நேருமோ என்று !!!!

நீயில்லாமல் !!


நீயில்லாமல்
நகர்கிற நொடிகளில்
நெருப்பாய்
வேகிறது
என்
இதயச்சுவர்கள் !!
இளைப்பாற உன்
தோள்கள் தாராயோ..!!?

கனவிலும் தொலைவு - காதல்


மழை மேகமும் இல்லை ,
அனல் வெயிலும் இல்லை ..!!
வந்து சேர்ந்த இரவில்
வழக்கம் போலவே வரவில்லை
தூக்கம் ..!
பூமியில் எந்த ஒரு மணிக்காட்டியும்
இப்படிச் சுழன்றதில்லை .!
அத்தனை விரைவாய் சுற்றியது
என் வீட்டுக் கடிகாரம்..!
இருள்விலகத் தொடங்கியதும் எப்படியோ
இமைகளை சூழ்ந்து கொண்டது
உறக்கம் ..!!
தூக்கம் தொடங்கியதுமே
துளிர் விடத்தொடங்கியது
கனவு ...!!
நேற்று ஏதோ மெல்லிடை பெண்ணொருத்தி
என் முழு கனவையும் ஆக்கிரமிதிருந்தாள் ..!!
எந்த ஒரு பெண்மையும்
எளிதில் பேசத்துனியாத
வார்த்தைகளை
என்னோடுபேசியிருந்தால்
அவள்..!!!
கனவிலும் நடந்திராத காதல்
நடந்து முடிந்தது நேற்றிரவு...!!
இன்று விடிந்து சூரியன்
சாய்ந்துவிட்ட போதிலும்
விலகாமல் நிற்கிறது
அவள்நினைவுகள்
நெஞ்சைவிட்டு நீளாமல் ...!!
நல்லது !
வழக்கம் போலவே மறந்து விட்டது ..,
கனவில் வந்தவளின் முகம்..!!
என்ன செய்வது ?
கனவில் கூட நமக்கு காதல் கொஞ்சம் தொலைவு தானே ..!!!?

முதற் பரிசு

365 உறுதிமொழிகள்

தினமும் உன்னை நினைத்து 
நான் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி :

நாளை முதல் உன்னை 
கண்டிப்பாக மறந்து விட வேண்டும் !

கண்ணீராய் நுழைந்தவள்


இமைகளை காற்று கூட நுழைய
முடியாதவாறு தான்
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?
சாமர்த்யக்காரியடி-நீ ..!!
எப்படியோ கண்ணீராய்
நுழைந்துவிட்டாய்..!!!
-பிரபா

யார் சொன்னது ,?
உன்னை நான் மறக்கவில்லை
என்று ...?
இன்றும் கூட ,
ஒரு நாளுக்கு
நூருமுறைக்கு மேல்
மறந்துகொண்டு தானே இருக்கிறேன்..!!!!

அனாதை- தாய்


பத்து மாதம் உனை
வயிற்றில் சுமந்தவள்
" தாய் " ஆனாலே....!!
பத்து வருடத்திற்கு மேல்
உனை நெஞ்சில் சுமக்கு
நான் மட்டும் ஏன் "அனாதை "
ஆனேன்...!!!??


ஊரே பார்த்துக் கண்வைக்கும் போதெல்லாம் ,
மேகத்திறைக்குள் மறைந்து கொள்ளும்
நிலவை
பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ,
எனக்கு
நினைவிற்கு வருகிறதடி ...!!!!
பூப்படைந்த
போதுநீ
புதுசாய்
பட்ட வெட்க்கம்...!!!

முதற் பரிசு

காதலில் வெற்றியை விட
காதல் தோல்வியே
எனக்கு மிகவும் பிடிக்கும் ..!!!
ஏனெனில்.,
அதுதான் என் காதலி 
எனக்காகக் கொடுத்த
முதற் பரிசு ..!!