அழுகிற முகமெலாம்
கோழைத்தனத்தின் முகவரி தான்!
கோழைத்தனத்தின் முகவரி தான்!
யார் இல்லையென்றது ?
நாம் அருகிலிருந்த நொடி எல்லாம்
காற்றில் தூசியாகி கைவிட்டே போய்விட்டது.!
நகர்கிற நிசிகளில் தூக்கமென்பது
தொடரும் பகல் கனவாகி விட்டது.!
தொலைவுகள் கடத்திசென்ற அழகியின் குரல்
அரைமாதத்திற்கு ஒருமுறை கேட்கிறது!
"கிறுக்கா.! .....
என்று தொடங்கும் அந்த வீணையோசை
எனக்கே தெரியாமல் என் கண்களை அறுத்து
இதயத்தை கோழையாக்கிவிடுகிறது..!!!
ஆம்.!
அழுதுவிட்டேன்! அன்புக்கோழை .!
என்னசெய்ய நான் ?
உப்புக்கண்ணீரும் உனக்காக அழும்போது
இனிக்கத் தானே செய்கிறது! அழகி!