Showing posts with label A true love. Show all posts
Showing posts with label A true love. Show all posts

Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Friday, March 30, 2012

ஜெயிக்கவே பிறந்தது காதல்


செல்ல சண்டைகளில் 
நம் இருவரையுமே 
வீழ்த்திவிட்டு 
ஜெயித்துவிடுகிறது 
காதல் !

Sunday, March 25, 2012

என்னை அவ்வளவு பிடிக்குமோ ?


எத்தனையோ வழிகளில்
எனக்குள் வந்து நிறைகிறாய் நீ 
உன்னைத் தடுத்து நிறுத்தினால் 
தான் என்ன ஆகிவிடப்
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
 தலையணை எடுத்தேன்
முகத்தில் கிடத்திப் புதைத்தேன்  
நிசப்தத்தில் திணறிக் கிடந்தேன் 
ஓரிரு நிமிடம் கடந்திருக்கும்...
     
உன்  ஒட்டுமொத்த ஆற்றலையும் 
திரட்டி எத்தனை  வீரியமாய்
என் கைகளைப் தட்டிவிட்டுத்
தலையணை தூக்கி எரிந்து 
எனக்குள் வந்து நிறைகிறாய்!

என் மூச்சே , 
என்னை அவ்வளவு 
பிடிக்குமா உனக்கு ?
 

Wednesday, February 22, 2012

இது கவிதையல்ல உண்மை


♥ நீயும் நானும் காதலித்ததால்
நம் இருவர் வீடும்
சந்தோஷம் ததும்பும் பூக்களால்
நிரம்பிக் கிடக்கிறது !
♥ நம்மைப் போலவே
ஒவ்வொருவரும் காதலித்தால்
அவனியில் ஒவ்வொரு வீடும்
எத்தனை அழகான பூக்களாலும்,
அதன் வாசங்களாலும்
சூழப்பட்டிருக்கும் !
இது ரசிக்க மட்டும்
எழுதப்பட்ட கவிதையல்ல
என்று ஊர் உணர வேண்டுமே அழகி !
Our profound love on each other ,
decorated our entire home
with grinning flowers !
Likewise, if every human being
in this world would
love as we do ,
how colorfully even they would get
decorated as well !
It's a fact that
everyone should know !