Showing posts with label abc of love. Show all posts
Showing posts with label abc of love. Show all posts

Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Thursday, December 29, 2011

ஜிம்மியும் காதலும் . . . .


மழையையும் மரங்களையும்
நாய்க்குட்டிகளையும்,
ஆட்டுக்குட்டிகளையும்,
குருவிகளையும் , குயில்களையும்,
பார்பி பொம்மைகளையும் ,
பஞ்சுமுட்டாய்களையும் மட்டுமே
ஒரு தரப்புப் பெண்கள்
ரசித்துக் கொண்டிருக்க,

இன்னொரு பக்கம் நீ மனிதர்களை
நேசிப்பதற்கே நேரமில்லை என்கிறாய் !,
பிடித்து வைத்தும்
அடங்க மறுத்துப்போகிற நெஞ்சோ
இதைப் பிடித்துப்போய்
உனை வந்து சேர்ந்தது !

இன்று , நீயும் உன் அன்பிற்கும் முன்
மழையோ , மின்னலோ ,
ஆட்டுக்குட்டியோ, நாய்க்குட்டியோ
எனக்கு ஒருபோதும்
அழகாகத் தெரிவதே இல்லை அழகி!
உன்னை நேசிப்பதற்கே நேரம்
சரியாய் போகிறதடி !

Thursday, November 17, 2011

காதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்


இருவர் மீதும் தவறுகளிருந்தும் , 
இருவர்க்கும் அது தெரிந்திரிந்தும், 

என் தவறுகளை நீ 
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான் 
என் நம்பிக்கையில் மறைப்பதும்! 
 படைத்த சாமிக்கே 
கிடைக்கப் பெறாத வரம்  ! 

சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப் 
புரிந்து அணைக்காத ஆண்களும் 
காதலுக்கென்றே எழுதப்பட்ட 
சாபங்களாய் இருக்கையில் ! 

நீ சினந்து சிவக்கிறாய் ! 
நான் புரிந்து அணைக்கிறேன் ! 
♥ நாம்தான் காதலுக்கென்றே 
படைக்கப் பட்ட உண்மையான 
வரங்கள் அழகி !


The kinda trust which binds us is 
a heavenly treasure !
 I jus love it ♥ 

Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !