Showing posts with label prabha poems. Show all posts
Showing posts with label prabha poems. Show all posts

Wednesday, June 12, 2013

குழந்தையும் கடவுளும்...



Click on the pic to Zoom it

••
உன் செல்ல 
மிரட்டல்களுக்குமுன் 
நான் சிலநேரம் மழலை ..
என் செல்ல 
அதட்டல்களுக்கு முன் 
நீ சிலநேரம் குழந்தை..
யார் அதட்டலில் 
நியாயமிருப்பினும் 
ஒருவர் குழந்தையாகி 
மன்னிப்பு கேட்கிறோம் 
இன்னொருவர் கடவுளாகி 
மன்னித்து அணைக்கிறோம் !
குழந்தைக்கும் கடவுளுக்கும் 
மட்டுமே தெரிந்த 
இறைமொழி நம் காதல் !
••

                                                                       பிரபாகரன் சேரவஞ்சி