என்னை நேற்றொரு புன்னகைப் போருக்கு
அழைத்திருந்தது !
அத்தனை பெரிய நிலவிற்கே
அசராத செருக்குடன்
எத்தனை பேர் வந்தாலும்
வாருங்கள் என்றேன் !
நாள்முழுதும் நீடித்த போரினில்என்
நிலைமை என்னவோ தலைகீழ் !
கோடி நிலவு வந்தாலும்
கொஞ்சம்கூட அசராத நானோஓர்
குட்டிநட்சத்திரத்தினால்
வீழ்த்தப் பட்டேன் !
என் கர்வச்சிரிப்பு அத்தனையும்
இன்றவள்
கள்ளசிரிப்பிர்க்கு முன்
மண்டியிட்டுக் கிடக்கிறது !
விண்மீன்கள் வியக்குமவள்
புன்னகை சிரிப்பை
முன்னூறு வருஷம் வாழ்ந்தாலும்
ஒருபோதும் நான் மறவேன் !
Dedicated to Bubbly's(என் புன்னகை எதிரி)smile !
