Showing posts with label எதிர்கால வியூகம். Show all posts
Showing posts with label எதிர்கால வியூகம். Show all posts

Wednesday, June 2, 2010

எதிர்கால வியூகம்

மொட்டைமாடித் திட்டில் என் 
முழு உடற் பதித்துப் படுத்திருக்கிற
வேலை இது !
வழக்கம் போலவே இன்றும்
என்னை வெறித்துப்
பார்த்துக்கொண்டே இருக்கிறது
வெள்ளைநிலா!
 இன்று என்ன கவிதை எழுதி 
என்னை அசிங்கப் படுத்தப்போகிறாய் 
என்பது போல் சிலநேரம் 
சிவந்து போகிறது கோபத்தில்!
"ச்ச்சீ போ வெள்ளைவட்டமே!"
என்று நானும் முகம் திருப்பிக்கொண்டேன்!
இடப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்த நிலவு ,
வலப்பக்கச் சுவற்றில்
என் அமைதி நிலையை
கருப்பு நிழலாய் வெளிச்சம்
போட்டுக் காட்டிக்கொண்டிருந்தது ! 
செத்தவன் எப்படி படுத்திருப்பானோ
அப்படி ஒரு தோற்றமாய் இருந்தது
அந்நிழல் ! நல்லது !
நாளை நான் உன் வார்த்தைகளால் 
கொள்ளப்பட்டு சாகும் போது 
ஒரு வேலை இப்படித்தான் படுத்திருப்பேனோ ?!!