Monday, February 27, 2012

கனவில் திருடிய கவிதை


ஏ தன்னலமிகுந்த கனவே !
எத்தனை முறை 
சொல்லி இருக்கிறேன் உன்னிடம் 
அவளைப் பற்றி 
 நாம் எழுதும் கவிதைகளை எல்லாம் 
காலையில் பத்திரமாக 
என்னிடமே  கொடுத்து 
விட வேண்டுமென்று !?

எங்கு நான் எழுதி பெருமை 
சேர்த்துக் கொள்வேனோ  
என்று அத்தனையும்  நீயே
வைத்துக் கொள்வது 
எந்த விதத்தில் நியாயம் ?  

தயவு செய்து கொடுத்து விடு
கவிதையின் முடிவில் 
வேண்டுமானால் இப்படி 
எழுதி விடுகிறேன்!
காணீர் மக்காள்! 
இவைகள் நான் 
எழுதியவை அல்ல
என் "கனவுகளில் திருடியவை" என்று ! 
 Oh my Sweet Night dreams,
How many times Did i told you 
not to be so selfish
By keeping all the 
poems with you
  that we Write about her !
and denies me the access
of it in the morning !
Please, Do give that all 
back to me in the morning
for i would give you the credits
as... Dear people, 
The above Poem is not 
my very own thought
But
 "AN INSPIRATION 
FROM MY DREAMS"

Wednesday, February 22, 2012

இது கவிதையல்ல உண்மை


♥ நீயும் நானும் காதலித்ததால்
நம் இருவர் வீடும்
சந்தோஷம் ததும்பும் பூக்களால்
நிரம்பிக் கிடக்கிறது !
♥ நம்மைப் போலவே
ஒவ்வொருவரும் காதலித்தால்
அவனியில் ஒவ்வொரு வீடும்
எத்தனை அழகான பூக்களாலும்,
அதன் வாசங்களாலும்
சூழப்பட்டிருக்கும் !
இது ரசிக்க மட்டும்
எழுதப்பட்ட கவிதையல்ல
என்று ஊர் உணர வேண்டுமே அழகி !
Our profound love on each other ,
decorated our entire home
with grinning flowers !
Likewise, if every human being
in this world would
love as we do ,
how colorfully even they would get
decorated as well !
It's a fact that
everyone should know !


Monday, February 20, 2012

நீயா ? நட்சத்திரங்களா ?♥ ஒரு நூறு நட்சத்திரங்கள்
விண்ணிலிருந்து பெயர்ந்து
என் மேல் விழுந்தால்
எப்படி இருக்குமோ ?
அப்படித்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறை
நீ என்னை ஆர்ப்பரித்து
அணைக்கும்போதும் !

For every time u give me a warm hug,

  It will be like a hundred gleaming stars

 that shower down  all its light over me ! 

Sunday, February 19, 2012

நீ நிலவு நான் சூரியன்

You-The pretty Moon And I - the Hottest Sun !

அந்தியில் என்
வெப்பம் தனித்து
அரவமில்லா நடுநிசியில்
என்னுள் கரைந்து
அடுத்த விடியலிலும்
என் அணைப்பிலேயே
குளிர்காய்கிறாய்...
நீ நிலவு
நான் சூரியன்
நம் காதலும் அன்பும்
நட்சத்திரங்களின்
ரசனைக்காக
மட்டும் படைக்கப்பட்டவை !
மனிதர்களின்
விமர்சனப்
பொழுதுபோக்கிற்காக
அல்ல !
 You chill me down 
at the twilight night set ,
By the mid night
You drowned into me,
and By the next dawn
You get chilled by me and 
adds warmth to your soul !
YOU, the Pretty MOON and
I , The hottest SUN !

The love that exists
between us is specially
made for the admiration of
stars in the universe
and not for the
Stupid critic of 
senseless people in land!

Saturday, February 18, 2012

மியாவ்களின் வயலின்கள்

Soon in my first book "Pearls of Platonic Love" 
பரண் மேல் ஒரு
பாட்டிசைக் கச்சேரி கேட்டேன்!
பூனைக்குட்டிகள் நேற்றிரவு
வாசித்த வயலினில்
முழுதும் நிறைந்து கிடந்தது
உன் குரல் !!
நீ பேசும் போது
என்னைப்போலவே அவைகளும்
குறிப்பு எடுத்துக் கொள்ளுமோ
ஒருவேளை?!
Last night, i heard some 
sweet violin voices of meow's... 
It resembled ur voice in every way ! 
It seems that those cats 
hide somewhere in your home 
and take notes of your 
sweet voice !

Monday, February 13, 2012

Fantastic 5 - February 14 Special

கருப்பு நயாகராக்கள்


ஒளியில்லா ஒவ்வொரு
நடுநிசியிலும்
ஒரு கருப்பு
விழுந்து தொலைகிறேன் ..
தொலைத்தெடுக்கிற வாசத்தில்
சுவாசித்து ஜீவித்து
விடிந்ததும் கரை சேர்கிறேன்


|-கூந்தல்-|


ரெட்டைப் புள்ளி ஓவியம்
  

சாமி தன் நெற்றியில்
தானே ஒரு ரெட்டைப் புள்ளி
ஓவியம் வரைகிறது !
ஒரு சிகப்புப் புள்ளியும் ஒரு
வெள்ளைப் புள்ளியும்
வைத்து முடித்ததும்
உலகினில் அதைப் போல்
அழகுண்டோ என்றாகிறது !
|-ஒப்பற்ற ஓவியம் -உன்
நெற்றிக் குங்குமமும்
குட்டித்திருநீறும் !-|


நித்திரையில் ரெண்டுவில்கள்


நித்திரையில் இருக்கும்
ரெண்டு வில்லும்
சப்த்தமில்லாமல்
பார்த்தெனைக் கொள்கிறது ...
அம்பே இல்லை
அங்கேயே எப்படியோ
வீழ்ந்துவிட்டேன் நான் !

|- நெற்றிப்புருவம் -|மூன்று நிலவு


முதல் உலகப் போருக்கு
முன்னர் நடந்த
உரிமைப் போரில்
மூன்று நிலவு மட்டும்
உயிர்பிழைத்தது !
ஒன்று மேலேயே
தங்கிக் கொண்டது !
மற்றிரண்டும் உன் கண்களாய்
குடி பெயர்ந்துவிட்டது !

|- ரெண்டு கண்கள் -|


பூக்களுக்கான புன்னகைப் போட்டி


விண்வெளி நடத்திய
பூக்களுக்கான புன்னகைப்
போட்டியில்
ரோஜாக்களும்
மல்லிகைப் பூக்களும்
எதிரெதிரே நின்று
சிரித்துவிட்டு மறந்தவாறு 
அங்கேயே தூங்கிவிட்டது !


|- அதை இன்று உன்
கன்னங்கள் என்கிறார்கள் -|

Monday, February 6, 2012

இப்படியும் ஒரு கோபம்

Love <3 = Battlefield ! :)

என் ஊமைக் கோபங்களையும் சரி,
உண்மைக் கோபங்களையும் சரி,
நீ யார் மீதும்
போர்த்த விடுவதில்லை..
முகம் சிவக்கும் என்
சிறுபிள்ளைச் சினங்கள்
அத்தனையும்
உனக்கே சொந்தமாகிக் கொண்டு
" என்னங்க.... நீங்க இப்ப
என்னதான திட்டுனீங்க...!?"
என்று கேட்கும் போது
ஒரு காதல் ஹிட்லர் நான்
பூக்களின் இளவரசியிடம்
தோற்றுப் போகிறேன்!

Despite whatever Rage that i possess,
You Would grab that all for Your sake
and would ask me..
Prabha, " I am the one whom you are 
scolding about ! Right?"
Ah! Pretty crazy gurl, 
"YES", I acclaimed and chilled down !
Queen of masses of flowers, like you
Sometimes Defeats the Brave rages of 
Lovable Hitlers Like Me !
Love is pretty awesome !

Friday, February 3, 2012

அன்பின் கைப்பிடியில் - Love Leads


பல பொய்யான சுகங்களுக்கும்
உறவுகளுக்கும் முன்
சில உண்மையான அன்பு மட்டுமே 
வாழச்சொல்லி வற்புறுத்திக்
கூட்டிச்செல்கிறது....
வாழ்க்கையின் பாதையில்
என்னைத்தான் கையில்
இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு !
Before a plenty of  deceitful 
relationships and pleasures
some TRUE PROFOUND LOVE
which exists rarely in the world, 
is what is that obligates me to 
Sustain in this world !
Love, Rules My World, and Destiny !

Thursday, February 2, 2012

முன்னூறு டன் காதல்

from "PEARLS OF PLATONIC LOVE" My first book on air !

தேவையில்லாத வீண்வேலை காதல்
என்று அறிவு வழியப் பேசும்
இனிய மக்களே !
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்!
சுவாசிக்கத் தெரியாதவனுக்கு
மூச்சுக்காற்றும் முன்னூறு டன்
சுமையாகத் தான் இருக்கும் !
To the People who persuades
by saying  Love is an useless work
Dear people, you know what ?
For he who does not know 
how to breath properly 
It would be like 
a 300 ton weight even!