Sunday, October 25, 2009

புதுசாய் பட்ட வெட்கம்
ஊரே பார்த்துக்
கண்வைக்கும்
போதெல்லாம்,
மேகத்திறைக்குள்
மறைந்துகொள்ளும்,
நிலவை - பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்,
எனக்கு ஞாபகம்
வருகிறதடி !!
"பூப்படைந்த போதுநீ
புதுசாய் பட்ட வெட்கம்!!"

நிர்ணயிக்கப்பட்ட முடிவு


எப்படித்
தொடங்கினாலும்
இப்படித்தான் வந்து 
முடிந்து போகிறது !
என் கவிதைகள் ....!.
..
..
"ஏனடி நீஎனை விட்டுப்போனாய் ? "
என்று !

நிறைவேறாத உறுதிமொழி :தினமும்
உன்னை
நினைத்து
நான்
எடுத்துக்கொள்ளும்
உறுதிமொழி :

நாளை முதல்
உன்னை,
அடியோடு
"மறந்துவிடவேண்டும்"

நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிற இதயம்யார் சொன்னது
உன்னை நான்
மறக்கவில்லை என்று !!?
இன்றும்கூட ஒவ்வொரு
நிமிடத்திற்கும்
72 முறை
உன்னை மறந்து
கொண்டுதானே
இருக்கிறேன் !!?

உன் சிரிப்பொலி சிதறிவிட்ட உண்மை :என்னால்நீ சிரிக்கும்
ஒவ்வொரு சிறு நொடியும் ,
உன் சிரிப்பொலி என்
செவிகளை முத்தமிட்டுச்
சின்னதாய் ஒரு
உன்னத உண்மையை
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போகிறது !!
ஆம்,
என் கல்லறையில் அழுவதற்கு
உன் இதழ்களும் இறக்கம் காட்டுமென்று !!

Tuesday, October 20, 2009

அதிகாலை உளறல்கள்

ஏழு சுவரங்களிலும்
எத்தனையோ கோடி
ராகங்களிலும்,
எங்கிருக்கிறது இந்த
இனிமை !?

எங்கும் காணமுடியாத
ரீங்காரமாய் ,
எழ மனமில்லாமல் என்னிடம்
தொலைபேசியில்
உளறிக் கொண்டிருக்கு-மென்
அழகியின்
அதிகாலை உளறல்கள் !
ஏனோ அத்தனை அழகு !!

நிசமாகும் பொய்கள்


 நீ இல்லையெனில்
உலகமே இல்லை ! ,
என்று
கவிதைகளுக்காக நான்
எழுதிய பொய்களெல்லாம்
இன்று
நிஜங்களாகி விட்டதே
அழகி!

Wednesday, October 14, 2009

உனக்குள் தொலைகிறேன்உன்னையே கட்டிக்கொண்டு

சுற்றியலையும் என் நினைவுகளுக்கு

என்ன பதில் சொல்ல போகிறாய் அழகி?

"
உன் வாழ்க்கையில் நான் "

என்று தொடங்கியது நம் உறவு !

"
எனக்குள் நீ " என்று வளர்ந்தது !

"
உனக்குள் நான்" என்றும் அது படர்ந்தது !!

இன்று

"
நமக்காக நாம்" என்றாகிவிட்டோம் !!

உன்னையே என் உலகம் என்று

இப்போழ்தெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் !!

இல்லை., இல்லை , " உன்னைமட்டும் "!

கிறுக்குத்தனமாய் எங்கோ தொலைந்து போவதும் ,

பின் சாமர்த்யமாய் உனக்குள் கிடைப்பதும்

இன்றெனக்கு வாடிக்கையாகிவிட்டதடி அழகி !

இன்றும் அப்படிதான் தொலைந்துவிட்டேன் !

உனக்குள் தேடிக்கொடடி அழகி !!

Tuesday, October 13, 2009

மறைய மறுக்கும் நிலவு


கூப்பிடும் தொலைவில்
அலைபேசியில் என் அழகி..
இருவீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்தும்,
இவனும் அவளும்
நிலாரசிக்கும்
சன்னல் மட்டும் இன்னும்
திறந்தே இருக்கிறது...!!

முகத்திரையை கதவுகள் மறைப்பினும்,
மனத்திரையை சுக்குநூறாய்
கிழித்தெரிகிறோம் நாம்!-
பெயர் வைக்க தெரியாத ஓர்
உறவு ஜன்னலின் வழியே !!

கண்களில் சொருகும் தூக்கத்தை மறந்து
நிலாக்குளிர் நீளும் வரை நீள்கிறது
நம் உரையாடல்கள் !

உயிர் நடுக்கும் குளிரிலும் குளிர்காய்கிறோம்
நீ என் பேச்சிலும் நான் உன் மூச்சிலும் ..!!

விடியல்கள் தொடங்கும் முன்னொடி வரை
விடாமல் தொடரும் நம் பேச்சை
ரசித்துக்கொண்டே மறைய மறுக்கும் நிலவிற்கு
நான் என்ன பதில் சொல்ல முடியும் !?
"ச்ச்ச்ச்சீ" ரசித்துவிட்டுப்போ
என்பதைத் தவிர?

Friday, October 2, 2009

லவ் லெட்டர் # அத்தியாயம் ஒன்று !
என் கறுப்பு இரவுகளை ர் கனவுகளில் நனைத்தவள் நீ! தண்ணீருக்குள் அழுதழுதே பழகிப்போன என் கண்ணீர் துளிகளுக்கு உறைவிடம் தந்து ஆறுதல் சொன்னவள் நீ!! கற்பனையில் கூட சாத்தியப்படாத இந்த உறவை அத்தனை உண்மையாக்கி உயிர் செய்தவள் நீ!! எதையும் என்னிடம் இருந்து எதிர்பார்த்ததில்லை ! ஆனாலும் கொடுத்து கொண்டே இருக்கிறாய் ..!! எல்லையில்லாத ஈடு இணையற்ற உன் அன்பை !! அதுதான் நீ !! உன் இதய ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அத்தனை ரகசியங்களையும் என் செவிகளுக்கு விருந்தாக்க மறந்ததில்லை நீ!! சுகமகிழ்வுகள், சோகங்கள், சிலசமயம் கோபங்கள் , பைத்தியக்காரத்தனங்கள் !! இத்தனையும் பகிர்ந்திருக்கிறோம் நாம்...!! விதி நம்மை சேர்த்த விதம் வியப்பின் உச்சம் அழகி!! நாட்கடிகாரம் தொடங்கும் முன்னரே உன் நினைவோடு சுற்ற தொடங்கிடுது என் நிழல்கள்!!  இத்தனையும் நினைத்து பார்த்து சிலிர்க்கிற நொடிகளில், உன் பிரிவின் நினைவும் ஏனோ குறுக்கிட்டுத் தொலைக்கிறது...!! உன்னில் பின்னிக்கொண்ட என் விதியை மீட்க வழியிருப்பினும் மனமில்லையே என்னிடம்!! செத்துப்போன என் கண்ணீருக்கு ஏன் மறுபிறவி கொடுத்தாய்?? உன் அழுகையால்.!!! யார்க்கும் தராத அழுகையை ஏன் எனக்காக பரிசாக்கினாய்??! நீ எத்தனை முறை என்னை அழ வைத்தாயோ அத்தனை முறைக்கு மேல் ஒருகோடி தடவை நினைத்திருக்கிறேன் உன்னை சிரிக்க வைக்க என்ன செய்வதென்று??!! அதுசரி ! எதிர்பாராது மழை எதிர்பாராமலே பெய்து ஓய்ந்திடுமே... அது போல் நீயும் எனை தவிக்கவிட்டு சென்றிடாதடி சகி ... நீயில்லாத நொடிகளில் நெருப்பிலிட்ட காகிதமாய்த்தான் எரிகிறது என் இதயம்!! இன்று , நொடிஎங்கும் என்னுள் நிறைந்து கிடப்பது உன் பிரிவின் நினைவு மட்டும் தான் !! என்ன நினைக்கிறதோ இப்போழ்து உன் மனம் ? அதை கண்டிப்பாய் நான் மாற்ற முடியாது...!! வேண்டுமானால் என் சட்டைக் காலரை பிடித்து கொண்டு என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் !! ஏன் நீ என்மேல் இவ்வளவு அன்பு வைத்தாய் ? ஏன் நான் உனக்குமேல் உன்னிடம் அன்பு வைத்தேன்??!!  எது எப்படியோ , சேமித்து வைத்திரு உன் செல்லச்சிரிப்பினை ! செத்தாலும் கேட்பேன் உன் சின்னகனவுகளில் தினம் நுழைந்து...!!  நீ அப்பிவிட்டுப் போன அத்தனை இன்பக் கலர்களோடே இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் உன் இனிய நண்பன் பிரபா ...!! 
 Love you so much