Monday, January 23, 2012

ரெண்டு பைத்தியக்காரக் காதலர்கள்உலகத்தின் இரண்டு பெரிய பைத்தியங்கள்
ஒரு காலத்தில் காதலில்
கொடி கட்டிப் பறந்தது என்று
இனி வரலாறு சொல்லக் கூடுமானால்...
அந்தப் பட்டத்தையும் நாம்
நமக்கானதாக்கிக் கொள்வோம் அழகி!
பின் என்ன?
கணக்குப் போட்டுக் காதலிக்கும்
உலகத்தோர் மத்தியில்
எதையும் எதிர்பாரா
பைத்தியங்களின் அன்பு
எவ்வளவு சுத்தம்?! 


Wednesday, January 11, 2012

ஹிட்லரும் ரோஜாக்களும் !

Fragrant Roses and Falling Hitlers 

உலகத்தின் ஒட்டுமொத்த
ரோஜாக் கூட்டங்களும்
ஒன்று சேர்ந்து போர் தொடுத்ததில்
உன் உதடுகளால்
குத்தப்பட்டு வீழ்ந்த
குறுநில
காதல் ஹிட்லர்
நான் மட்டும் தான்!

World's entire mass of Roses
called up a war.
By the time it was started,
The very first Man to die
at the feet of a Rosy lipped flower
is ME ! ,
The Notable Town Hitler !

Monday, January 2, 2012

காதலும் நீங்களும்


 01 
*உறவுகளுக்கும் அதற்கு மனிதர்கள் வைத்த பெயர்களுக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு ! ஆம் ., காதல் உறவுகளையும் பெயர்களையும் கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் மறுக்கப்படுகிற உண்மை !
Love , never ever toy with relationships and their names kept by predecessors ! If a guys heart steadfastly believes in his love He will surely GO FOR IT !  

 02
*ஒரு பெண்ணின் நெஞ்சில் சாய்ந்து கிடக்கும் ஆணின் மனதில், சதைக்கு உள்ளிருக்கும் துடிப்பு ஓடிக் கொண்டிருப்பின் அது அன்பு ! அது காதல் !
Whenever a guy inclines with his girl's heart , and if only the rhythm of her heart fills all over his mind instead of queerness ! Its a PROFOUND PLATONIC SUPERB LOVE !

 03
*நல்ல காதல் சூழ்நிலைகளால் பிரிந்த போதிலும் சந்திக்கிற ஒவ்வொரு முகத்திலும் காதலன் காதலி முகம் பார்க்கும் , முழுவதும் நினைக்கும் , அலைமோதுகிற நினைவுகள் அவ்வப்போது மூச்சடைக்கும் ! அது ஆரோக்யமான காதல் !
Love, separated by destiny is merely a physical fall apart and a mind-boggling Reunion ! Love never ever parts , It all upon lovers who work with it ! 

 04
*அழுவதோ புலம்புவதோ காதலில் வீண்வேலை , உங்கள் மனதில் ஒருவரோ  இன்னொருவர் மனதில் நீங்களோ இல்லாமல் போனதற்குக் காரணம் ( யார் மறுத்தாலும் அது உண்மையில் குறைபாடே )
Weeping and prattling has never proved to be a healing technique in love ! If You fail to fill up your lover's mind and heart, Clearly its your fault ! KINDLY RENOVATE YOUR LOVE !

 05
* ஒரு பெண்ணுக்காக தன சுயத்தை மாற்றிக் கொள்கிற ஆண் , ஒரு நல்ல காதலனாக இருக்கிறான் , ஒரு ஆணாக இருக்கத் தவறியும் போகிறான் !
When a guy adapts his girl's wishes He becomes a GREAT LOVER and when he changes his ORIGINALITY for a girl , he fails to be a perfect male as well ! 

 06
*தன் வனப்பினை ஆயுதமாக எடுக்கும் பெண்ணின் தலைகனம் உலக அழகியாய் இருப்பினும் ஒவ்வொரு ஆணிடம் மனதளவில் தோற்றுப் போகிறது ! அழகு ஆபத்து ! அதைவிட ஆபத்து அழகிலிருந்து அரும்பும் காதல்!
Whenever a ravishing girl uses her fairness against the love of a man , it manages to draw the attention of his mind but fails to impress his heart ! So,Start from heart and cope with the mind ! Thats the Beautiful way to love <3 

♥ 07
*விரல் நுனியில் விழுந்து கிடப்பதும் , விழுந்து விழுந்து முத்தமிடுவதும் , அன்பில் தொடங்கி அன்பில் நிலைத்து அன்பில் முடிப்பது காதல் ! இடையில் மற்றது என்னவாக இருந்தாலும் அத்தனையும் ஆக்கமே !
Napping at her feet , and and cuddling her from end to end is a top-notch kinda love ! When you start . survive , and uphold everything in LOVE , There's no need to worry about any thing ! Just keep going !  


♥ 08
*முத்தத்தில் தொடங்கி இருப்பின் பரவாயில்லை , இனியாவது அன்பைப் பேசுங்கள் ஆசையிலிருந்து அன்பு முரண் ! அன்பிலிருந்து ஆசை புனிதநியதி !
Love which originated from infatuation is a hunky-dory ! To attain a stable prospective future, Practice Love and live it ,  for Queerness to Love is controvert , and Love to Queerness is a Right Path !  


♥ 09
* உங்கள் இதழும் மனமும் ஏமாற்றும் காதலை கண்களில் புரிந்துகொண்டு வார்த்தையில் ஏமாற்றுவான் ... பெண்ணுக்கு அவன் திமிர்பிடித்த காதலன்.... ஆணுக்கோ அது பொறுமையாய் வளர்க்கிற காதல் !
A Splendid Monsieur , is the one who understands every move of a girl and stay quiet in his words ! He would be a cunning person for her ! for him , He is enjoying all those deeds of her and slowly adds fuel to their love !

♥ 10
* நீ என் தம்பி /அண்ணன் மாதிரி என்று ஒரு பெண் காதலை சூசகமாய் எதிர்க்க நினைக்கையில் ஒரு பெண் தனக்குத் தெரியாமலேயே அந்த ஆணின் கவனத்தை மேலும் ஈர்க்கிறாள் !
When its been destined, No Such words could actually drive away these men as they are highly motivated towards the love of such gurlZ  ! Girls, Dont try this stunt ever ! ;) If you choose to follow this technique , then keep ur mind , heart , soul to lose it to that same Mr.Brother! ;)