Friday, April 30, 2010

தாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்


இருவரின் உணர்ச்சிகள்
ஒருமிக்கும் இடத்தில்
வாழ்கிறது காதல் !

இருவரின் உணர்வுகள்
ஒருமிக்கும் இடத்தினில்
நட்பு வாழ்கிறது !!

தாயின் கருவறை
தவிர வேறு எங்காவது
பிறந்துகொள்ள வழி இருந்தால்
உன் இதயத்தில் பிறப்பேன்
நண்பா..!!

கல்லறை தவிர வேறு
எங்காவது புதைக்க
மனிதன் அனுமதித்தால் ,
உன்காலடி சுவடுகளின்
கீழே புதைவேனடா..!!

மண்ணுக்குள் விதைபோல
மனதிற்குள் நட்பு !! 

பெண்ணுக்குள் தேடினேன் -
அதை சதை உணர்ச்சி
என்றார்கள்..!!

உனக்குள் தேடுகிறேன்!!
இன்று எவர் தூற்றக்கூடும்
நம் உறவை .?

வயது புரிந்ததும்
வாழ்க்கையும் பெண்களும்
பிடித்திருந்தது !!
வாழ்க்கை புரிந்ததும்
உன்னையும் நட்பையும் தானே
ரசிக்க தோன்றியது !! 

சட்டைப்பை கனத்தை கண்டால்
கட்டியணைக்கும் சொந்தங்கள்
மத்தியில்,

சட்டையே அணியக்கூட
வசதி இல்லாத போதும்
என்னோடு நீயிருந்தாய் !!
அன்று உன் நட்பு யாவும் என்
கற்பைக் கவர்ந்தது !! 

"காதலியின் மடியினில் சாவேன் !"
என்றெல்லாம் நான் , கவிதை எழுதிய
காலம் மலையேறிவிட்டது.. !!
உன் தோள்களை நீ
தரமாட்டேன் என்றா
சொல்லிவிடப் போகிறாய் ..??

-என் நெஞ்சுத்துடிப்பாய் நிலைத்திருக்கும்
அத்துனை நண்பனுக்கும் சமர்ப்பணம் !
"Dedicated to all my friends" "LOVE YOU ALL DA"

இதழ் ஈரத்தில் இப்படியும் !!


காட்டுத்தீயாய் எறிந்திடும்

கோபக்கனலை,

அனைத்திடக்கூடுமோ.,

ஒருசொட்டுநீர்..??

அனைத்துவிட்டதே அழகி!

நீ அப்பிவிட்டுப் போன உன்

 இதழ் முத்த ஈரம்

காதல் - ஒரு விபரீத விளையாட்டுஎமனும் நானம்
விளையாடிய
வாழ்க்கை
பரமபதத்தில்,

என்னை தோற்கடிக்க
அவன் உருட்டிய
பகடைக்காய்

உன் சிரிப்பு ..!!

சாய்ந்துபோன இதயஉணர்வுகள்

கனவினில் உன் மடிகிடைத்துத்
தூங்கிய போது ,
நான் உளறிய வார்த்தைகள் யாவும்
கவிதைகளாகி இருந்தது ..!

கையினில் விரல்கோர்த்து நீயென்
மடிசாய்திருந்த போது-நான்
உளறத் தொடங்கும் முன்பே
உதிரத்தில் நனைந்துவிட்டது
கண்கள் !!

ரத்தமும் கண்ணீரும் 
சப்தமின்றிக் கசிந்துகொண்டிருப்பது 
சுகமோ? துக்கமோ ?
தெரியவில்லை ..!

எதுவாய் இருந்தாலும்
எல்லாவற்றிற்கும் உன் பெயரையே
காரணமாக்கி மகிழ்கிறேனடி !

என்மடியில் நீசாய்ந்த நொடியிலேயே
சாய்ந்து விட்டதடி! -
உன்பக்கமாய் என்னுயிரும் !


இன்று 
எத்தனை வாய்ப்பு கிடைத்த போதும் !
என் அத்தனை 
உணர்வுகளையும்  வார்த்தைகளாக்கும்
தமிழ் இல்லையேடி என்னிடம் ..!!

தோள்களில் காதலாய் கிடந்தாய்


என்  தோள்களில் காதலாய் கிடந்தாய் !

மலர்கள் கூடி நந்தவனம் ஆனது..!!

உதிர்ந்து வீழ்ந்தாய் எங்கேயோ ...,

இன்று நந்தவனமே நான்கு மலராய்

சுருங்கிப் போனது..!!

Sunday, April 4, 2010

மடியினில் முடியட்டும் மரணநொடி

உன் அன்பு பேசும் மொழிகளை
என்னோடு பகிர்ந்துகொள் !

என்னோடு உனைசேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார் !
ஒருநொடியில் சிறுகனமாவது .!!

களவு போகாமல் பத்திரபடுத்திவை -
என்னை பைத்தியமாக்கிய  உன்
கண்களின் நட்சத்திரத்தை !!

எப்படியேனும் தொலைத்துவிடு
என்னை கலங்கவைத்த உன்
கண்ணீர் துளிகளை !!  

தனிமைக் கரைக்கு வந்துவிடு -
என்னோடு கைகோர்த்து கால்நனைக்க!!

புது அர்த்தம் தேடிக்கொடு ,
பழைமை மாறாத என் இன்பங்களுக்கு !!

எந்நேரமும் பிரிந்திருந்து
என்னசெய்ய போகிறது பாவம் !
இணைத்து வைக்க உதவி செய் .,
நம் இரு கைகளையும் .,கோடி துன்பங்களும் 
கால் தூசி தான்-
உன் மூச்சுக்காற்று என்னை 
முத்தமிடும் போது ..!!

அழவை ,அசிங்கப்படுத்து ,
ஆத்திரப்படுத்து , இன்னும் செய்துகொள்
என்னவேண்டுமோ ..!

எத்தனை செய்தாலும்
மறக்காமல் வைத்திரு!
என் மரண நொடிகளில்
உன் மடியினை கடன்கேட்க
வருவேன் !!

Saturday, April 3, 2010

என் மௌனத்தை படிக்கத்தெரிந்தவள்

உன் சிரிப்பை வர்ணிக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன் !
உன்னை தோற்கடித்து என்னை ஜெயிக்க வைக்கும்
நீயோ சொன்னாய். !
"என்னை ஒருநொடி அணைத்துக்கொள் !
நீ சொல்ல  நினைத்த வார்த்தைகளின் ஆழத்தை
நானே புரிந்துகொல்கிறேன்" என்றாய்!
அணைத்துக்கொண்டேன் !
புரிந்துகொண்டாய் !
வார்த்தைகள் கிடைக்காத எழைக்கவிஞனை
வருடிக்கொண்டே நீ வாழ்வளிக்கிறாய்
அழகி !!