என் எல்லா கவிதைகளுக்கும்
சொந்தக்காரி நீயாக மட்டுமே
இருக்கவேண்டும் என்றேன் !
ஏன் உனக்கிந்த
குழந்தைத்தனமான ஆசை
என்றாய் ..
சரியாகச்சொன்னாய் அழகி !
குழந்தைகள் தான் அழுது
முரண்டு பிடிக்கும் !
அழுதபிள்ளைதான்
பால் குடிக்கும் !
பாலூட்டாத அன்னையுமில்லை !
பசியெடுக்காத பிள்ளையும்
எந்த உலகத்திலும்
என்றுமே இல்லை !