Saturday, October 13, 2012

மழையில் நனை... காதல் வரட்டும்...


காற்றடைத்த
மெய்யில்
காதலுடை
நெஞ்சில்
துடிப்பெல்லாம் நீ
வாழ்வதெல்லாம் 
நான் !


அத்தனை நிமிட
அலைபேசி
உரையாடல்கள்
முடிந்ததும்
அனுப்பப்படும்
ஒரு "லவ் யூ" 
ஒரு பானைக்
காதலுக்கு
ஒரு சோறு
பதம்
என்பதைப் போல் !

That Cute-n-Short "Love you"
and "Mis you"
Speaks Everything.


இலக்கில்லா
பயணத்தில்
உன் பாதையை
தேர்ந்தெடுத்ததும்
என் இலக்கு
உன் சிரிப்பானது !


என் பயணத்தின்
எல்லா 
வழியிலும்
குறுக்கிட்டுச் 
செல்லும்
செல்ல மியாவ் நீ .. 
எனக்கான
தடங்கல்
இல்லை நீ ..
என் வழிகாட்டி !


வெண்ணிலா 
கேக்கின் 
மேல் ஏறிய 
கருப்பு 
செர்ரிப்பழம் ! 
உன்
கன்னத்து 
மத்தியில் 
ஒற்றை 
மச்சம் !


அடிக்கடி 
நிலா
பார்க்கச்
சொல்லிக்கொண்டே 
இருப்பாள் ...
சொன்னவளைப்
பார்த்துக் 
கொண்டே 
இருப்பேன் ...
நிலாவாவது 
கிலாவாவது
அதெல்லாம்
எனக்கு அவ்வளவு
இஷ்டமில்லை !


மழையும்
நீயும்
கைகோர்த்து ஆடிய
நடனத்தின்
முடிவில்
சகதியாய்க்
கிடந்த 
என்நெஞ்சிலும்
கவிதைப் 
பூக்களாய்ப் 
பூத்துக் கிடக்கிறது!


எவ்வளவு
சொன்னாலும்
கேட்காமல்
நம் கவிதையில்
நனைந்துகொண்டே 
இருக்கிறது
மழை!


நீ,
நான்,
மழை,
இரவு,
காதல்,
கவிதை,
எல்லாம்
சேர்ந்த
பொழுதில்
கடவுளை
உணர்கிறேன்!


மழைதரும்
ஒவ்வொரு
முத்தத்திற்கும்
சப்தமிட்டுக்
கத்திக்களிக்கிறது
வெயிலில்
காய்ந்த
வீட்டுஓடுகள்!


மழையும்
நிலவும்
நட்சத்திரங்களும்
தனியாய்த்
தவிக்கிற
உயிர்களின்
காதலர்கள் !

மழை
கொட்டும்
இரவில்
நிலவுக்கு
விடுமுறை

அமாவாசை
இரவில்
அம்முவுக்கு
சோறூட்டவேனும்
கொஞ்சநேரம்
வந்துபோ நிலா!


கடலளவு
கோபப்பட்டபின்
வானளவு
நேசித்துக்
கிடப்பாய்....
நூறுமுறை
சண்டையிட்டால்
ஆயிரம்முறை
முத்தமிடுவாய்!
என்னை
ஜெயிக்க வைக்க
உன்னிடம் நீயே
எத்தனைமுறை
தோற்றுப்போகிறாய்..!
உன்னை ஜெயிக்கவைக்க
என்னசெய்யப் போகிறேனோ
அழகி!போ போ 
என்றால் 
எவ்வளவு 
சீக்கிரம் 
முடியுமோ
அவ்வளவு 
சீக்கிரம்
என்னிடம்
வந்துவிடு
என்றர்த்தம்
.
.
காதலில் மட்டும் !நீ வேண்டுமென்று 
உன்னிடமே 
கேட்கமுடியாத 
நேரத்தில் 
உன்னைவிட்டு 
கொஞ்சம் 
விலகிஇருக்க 
உன்னிடமே 
வரம்கேட்கிறேன் !


உன் 
கோபமும் சரி
என் 
கோபமும் சரி..
என்னை 
இன்னும்
கொஞ்சம்
அதிகமாய்
காதலிக்கத் தான்
சொல்கிறது !


பத்துநொடிகள் 
நெஞ்சில்
சுமந்து நான் 
பிரசவிக்கும்
கவிதையானாலும்,
பயப்பட்டுக்
கொண்டேதான் 
இருப்பேன்...
எங்கே அவைகள் 
தொட்டணைத்து
உன் உதடுகளால்
ஆசீர்வதிக்கப்
படாமல்
போய்விடுமோ 
என்று !
When You read it, 
wat else Do I need emm? 
Everything I have. 
Evvvvvverything.


எல்லா பொய்க்
கவிதைகளையும் 
நான்
ஒரேமூச்சில்
எழுதித்தீர்ப்பது ,
பிரபஞ்சத்தின்
ஒரே ஒரு 
நிஜக்கவிதையை
கைப்பிடிக்கத்தான் !
வேறெதற்கு ?


வாழ்தலில்
காதல் 
வரங்களின் 
திரட்டு !

காதலில்
வாழ்தலும்
வரங்களின் 
திரட்டு !

ஒரு இரவில்
ஒட்டுமொத்த
அதிசயங்களும்
நடந்துமுடிந்து
விடிந்தது...

நீ என் கைகளில்
கிடந்தாய் !

ஆக,
வாழ்தலும் இனிமை..
காதலும் இனிமை..
வேறொன்றும் இல்லை !ஓய்ந்தது உன் 
பெருமழைப்பேச்சு!
ஓடிவந்து 
மனசோரமாய்க் 
குத்திக்கொண்டது
கோடிவண்ண
காதல் வானவில்!

10 comments:

 1. /// நீ வேண்டுமென்று
  உன்னிடமே
  கேட்கமுடியாத
  நேரத்தில்
  உன்னைவிட்டு
  கொஞ்சம்
  விலகிஇருக்க
  உன்னிடமே
  வரம்கேட்கிறேன் !///
  இத்தனை நாட்கள் நீ எழுதிய கவிதையில் எனக்கு பிடித்தது ;மனதிற்கு நெருக்கமான உன் வார்த்தைகளுள் இதுவும் ஒன்று <3

  ReplyDelete
  Replies
  1. Thank you divya :) thanks a million again .. <3

   Delete
 2. Awesome work bro:) i wish i cud fall in love to experience yor feelins of love:):):)

  ReplyDelete
  Replies
  1. @ Thanks : Mani ! :) Welcome to my Blog ! <3 Stay tuned with the updates ....

   Delete
 3. அனைத்தும் நல்லா இருக்கு

  ////மழையும்
  நீயும்
  கைகோர்த்து ஆடிய
  நடனத்தின்
  முடிவில்
  சகதியாய்க்
  கிடந்த
  என்நெஞ்சிலும்
  கவிதைப்
  பூக்களாய்ப்
  பூத்துக் கிடக்கிறது!///

  nice

  ReplyDelete
 4. காற்றடைத்தமெய்யில்காதலுடைநெஞ்சில்துடிப்பெல்லாம் நீவாழ்வதெல்லாம் நான் !

  Speechless,
  Just hats off bro...!

  ReplyDelete