Showing posts with label மடியினில் முடியட்டும் மரணநொடி. Show all posts
Showing posts with label மடியினில் முடியட்டும் மரணநொடி. Show all posts

Sunday, April 4, 2010

மடியினில் முடியட்டும் மரணநொடி

உன் அன்பு பேசும் மொழிகளை
என்னோடு பகிர்ந்துகொள் !

என்னோடு உனைசேர்த்த
வாழ்வொன்றை நினைத்துப்பார் !
ஒருநொடியில் சிறுகனமாவது .!!

களவு போகாமல் பத்திரபடுத்திவை -
என்னை பைத்தியமாக்கிய  உன்
கண்களின் நட்சத்திரத்தை !!

எப்படியேனும் தொலைத்துவிடு
என்னை கலங்கவைத்த உன்
கண்ணீர் துளிகளை !!  

தனிமைக் கரைக்கு வந்துவிடு -
என்னோடு கைகோர்த்து கால்நனைக்க!!

புது அர்த்தம் தேடிக்கொடு ,
பழைமை மாறாத என் இன்பங்களுக்கு !!

எந்நேரமும் பிரிந்திருந்து
என்னசெய்ய போகிறது பாவம் !
இணைத்து வைக்க உதவி செய் .,
நம் இரு கைகளையும் .,



கோடி துன்பங்களும் 
கால் தூசி தான்-
உன் மூச்சுக்காற்று என்னை 
முத்தமிடும் போது ..!!

அழவை ,அசிங்கப்படுத்து ,
ஆத்திரப்படுத்து , இன்னும் செய்துகொள்
என்னவேண்டுமோ ..!

எத்தனை செய்தாலும்
மறக்காமல் வைத்திரு!
என் மரண நொடிகளில்
உன் மடியினை கடன்கேட்க
வருவேன் !!