விதி எழுதிய பிரிவுக்கவிதையில் ,
சோகம் சுமந்த சுகங்கள்
நீயும் நானும் தான் அழகி !
சிரித்துக்கொண்டே
பிரிவை ஏற்றோம் !
பிரிவிற்கு முன் ஒரு நாள் ...
எனக்குத் திருமணமான பின்பு
கண்டிப்பாய் பெண் குழந்தை
தான் பிறக்க வேண்டும் !
அதற்கு "அழகி" என்று
உன் பெயரையே
வைத்து விடுகிறேன் அழகி
என்றேன்!
ஏதும் பேசாமல் வாயடைத்தவள்
போல் நீயோ சொன்னாய் ...
" நான் மட்டும் தான பிரபா
உன் அழகி ...!???? "
என்று...!!
சரிதான் மன்னித்து விடு!
உன்னை ஒருநிமிடம்
பிரியப் பார்த்தேன் !
பெண்களின் உறவிற்கு
எத்தனை பெயர் இருக்கிறதோ
அத்தனை பெயரும் எனக்கு
நீமட்டும்தான் அழகி..!!
பெண்களின் உறவிற்கு
ReplyDeleteஎத்தனை பெயர் இருக்கிறதோ
அத்தனை பெயரும் எனக்கு
நீமட்டும்தான் அழகி..!//
ரொம்ப நல்ல இருக்கு. பிரபா நீதானே யார் அந்த அழகி.......
அழகி ! படத்துல வர்ற ., வசனம் மாதிரி'ங்க... என்னய எனக்கு எவ்ளோ பிடிக்குமோ அதுக்கு மேல அவளுக்கு பிடிக்கும் னா..! வெறும் அன்புக்காக மட்டும் என்கூட இருந்தவ... இருக்கவ .... நெனப்புல மட்டும் !! ஆயிரம் பேர் என்ன சுத்தி இருந்தாலும் அனாதைக்காதலன்' நான் என்னையே சொல்லிக்கறது... அவ என் கூட இல்லையென்ற ஒரே ஒரு காரணத்துக்காக தான்...!! என் அத்தனை கவிதைகளுக்கும் மொத்தமான சொந்தக்காரி ! நான் படித்த நல்ல காதல் இலக்கணம்! காதலியின் இலக்கணம்கூட!
ReplyDeleteநீ மட்டும் தான் அழகு ...கவிதை அழகு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி மதுரை சரவணன் அண்ணா !
ReplyDelete