தூங்கும் தலையணையை
எத்தனை தடவை
உன் பெயர் சொல்லி
அழைத்திருப்பேன்!
எத்தனை தடவை
அதை கேட்டிருப்பேன்
என்னைப் பிடிக்குமா
என்று !?
எத்தனை முறை
முத்தமிட்டிருப்பேன்
சப்தமில்லாமல்
ஒவ்வொரு இரவும் !
எத்தனை முறை
சிரித்திருப்பேன்,
எத்தனை முறை
சினந்திருப்பேன்..,
அத்தனை நொடியிலும்
அதுவும் சேர்ந்து
உன்னைப் போலவே
மௌனப் புரட்சி
செய்கிறது !
செய்கிறது !
கேட்பதை, கொடுப்பதை
எல்லாம்
வாங்கி கொண்டு ,
எல்லாம்
வாங்கி கொண்டு ,
என் கேள்விகளுக்கும்
காதலுக்கும்
என்றைக்குதான்
என்றைக்குதான்
பதில் சொல்லப்
போகிறதோ
போகிறதோ
என் இனிய தலையணை !!