Friday, August 21, 2009

கேட்காமல் கிடைத்த வரம்

பேசுவதற்கும் கேட்பதற்கும்
எத்தனையோ இருந்தும் கூட,
ஏனோ உன் இதழ் திறக்காத
மௌனங்களை
இரசிப்பதிலேயே என்
பாதிநேரம் ஓடிபோகிறது ..!!

கடமைக்குக் கொஞ்சநேரம்
வெட்கப்பட்டுவிட்டு,
கண்ணிமைக்கும் நேரத்தில்
வந்தமர்கிறாய் ...!!
உன்னுடல் என்னோடுரசி ..!!

கொஞ்சமாய் தீண்டத்தொடங்கி ,
நேரப்போக்கில் என் அத்தனை
விரல்களையும் பற்றிக்கொள்கிறது !
பூவிதழ் மிஞ்சும் உன் பிஞ்சு விரல்கள்..!!

அஞ்சுவிரல்கள் என்
உள்ளங்கை சிறையில்
அடைப்படிருக்கும் போழ்தும் .,
மீதமிருக்கும் அஞ்சு,
என் கண்ணகளை
வருடிக்கொண்டிருக்கிறது..!!

ஊடல்கொஞ்சம் கூடும்போது,
ஈரம்படாத இதழ்திறக்காத
முத்தம் கிடைக்கிறது..!!
என் கன்னங்களுக்கு வரமாய்..!!
நொடிகள் ஒவ்வொன்றிலும்
நீஎனை ரசிக்கும் போழ்துதான்
நெஞ்சினிக்கும் உண்மையொன்றை
உணர்கிறேனடி..!!

ஆம்... !

உன்னை போன்ற வரமொன்றை
இறைவனிடம் எத்தனை முறை
கேட்டாலும் கிடைக்காதடி ...!! அழகி !

Sunday, August 16, 2009

போர்வை இரகசியம்
'மணி ஆராச்சு ',
இன்னுமென்னடா தூக்கம் ?!

என்ற வேலைக்கு போகிற
அப்பாவின் அதட்டல்கள் ..!

'எதிர்த்த வீட்டு பையனெல்லாம்
குளித்து முடித்து கோயிலுக்குப் போகிறானாம்..!!
இது மட்டும் சோம்பேறிக்கனக்காய் சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது'..!!

என்ற அம்மாவின் கரிசல்கள் ...!!!

இதெல்லாம் உருப்படுவதாய் தெரியவில்லை !!

என்ற அண்ணனின் சாபங்கள்..,

இத்தனையும் கேட்டுக்கொண்டுதான்
விழித்திருக்கிறேன் ..!!

எங்கே போர்வை விலக்கினால் உன் பிரிவின் நினைவில் நான்
அழுதுகொண்டிருப்பதை யாரும் பார்த்திட நேருமோ என்று !!!!

நீயில்லாமல் !!


நீயில்லாமல்
நகர்கிற நொடிகளில்
நெருப்பாய்
வேகிறது
என்
இதயச்சுவர்கள் !!
இளைப்பாற உன்
தோள்கள் தாராயோ..!!?

கனவிலும் தொலைவு - காதல்


மழை மேகமும் இல்லை ,
அனல் வெயிலும் இல்லை ..!!
வந்து சேர்ந்த இரவில்
வழக்கம் போலவே வரவில்லை
தூக்கம் ..!
பூமியில் எந்த ஒரு மணிக்காட்டியும்
இப்படிச் சுழன்றதில்லை .!
அத்தனை விரைவாய் சுற்றியது
என் வீட்டுக் கடிகாரம்..!
இருள்விலகத் தொடங்கியதும் எப்படியோ
இமைகளை சூழ்ந்து கொண்டது
உறக்கம் ..!!
தூக்கம் தொடங்கியதுமே
துளிர் விடத்தொடங்கியது
கனவு ...!!
நேற்று ஏதோ மெல்லிடை பெண்ணொருத்தி
என் முழு கனவையும் ஆக்கிரமிதிருந்தாள் ..!!
எந்த ஒரு பெண்மையும்
எளிதில் பேசத்துனியாத
வார்த்தைகளை
என்னோடுபேசியிருந்தால்
அவள்..!!!
கனவிலும் நடந்திராத காதல்
நடந்து முடிந்தது நேற்றிரவு...!!
இன்று விடிந்து சூரியன்
சாய்ந்துவிட்ட போதிலும்
விலகாமல் நிற்கிறது
அவள்நினைவுகள்
நெஞ்சைவிட்டு நீளாமல் ...!!
நல்லது !
வழக்கம் போலவே மறந்து விட்டது ..,
கனவில் வந்தவளின் முகம்..!!
என்ன செய்வது ?
கனவில் கூட நமக்கு காதல் கொஞ்சம் தொலைவு தானே ..!!!?

முதற் பரிசு

365 உறுதிமொழிகள்

தினமும் உன்னை நினைத்து 
நான் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி :

நாளை முதல் உன்னை 
கண்டிப்பாக மறந்து விட வேண்டும் !

கண்ணீராய் நுழைந்தவள்


இமைகளை காற்று கூட நுழைய
முடியாதவாறு தான்
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!?
சாமர்த்யக்காரியடி-நீ ..!!
எப்படியோ கண்ணீராய்
நுழைந்துவிட்டாய்..!!!
-பிரபா

யார் சொன்னது ,?
உன்னை நான் மறக்கவில்லை
என்று ...?
இன்றும் கூட ,
ஒரு நாளுக்கு
நூருமுறைக்கு மேல்
மறந்துகொண்டு தானே இருக்கிறேன்..!!!!

அனாதை- தாய்


பத்து மாதம் உனை
வயிற்றில் சுமந்தவள்
" தாய் " ஆனாலே....!!
பத்து வருடத்திற்கு மேல்
உனை நெஞ்சில் சுமக்கு
நான் மட்டும் ஏன் "அனாதை "
ஆனேன்...!!!??


ஊரே பார்த்துக் கண்வைக்கும் போதெல்லாம் ,
மேகத்திறைக்குள் மறைந்து கொள்ளும்
நிலவை
பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ,
எனக்கு
நினைவிற்கு வருகிறதடி ...!!!!
பூப்படைந்த
போதுநீ
புதுசாய்
பட்ட வெட்க்கம்...!!!

முதற் பரிசு

காதலில் வெற்றியை விட
காதல் தோல்வியே
எனக்கு மிகவும் பிடிக்கும் ..!!!
ஏனெனில்.,
அதுதான் என் காதலி 
எனக்காகக் கொடுத்த
முதற் பரிசு ..!!