Showing posts with label Most lovable thoughts. Show all posts
Showing posts with label Most lovable thoughts. Show all posts

Thursday, March 29, 2012

என் இனிய தலையணையே...


என் அணைப்பிலேயே 
தூங்கும் தலையணையை 
எத்தனை தடவை 
உன் பெயர் சொல்லி 
அழைத்திருப்பேன்!

எத்தனை தடவை 
அதை கேட்டிருப்பேன் 
என்னைப் பிடிக்குமா 
என்று !? 
எத்தனை முறை 
முத்தமிட்டிருப்பேன் 
சப்தமில்லாமல் 
ஒவ்வொரு இரவும் !
எத்தனை முறை 
சிரித்திருப்பேன்,
எத்தனை முறை 
சினந்திருப்பேன்.., 

அத்தனை நொடியிலும்
அதுவும் சேர்ந்து
உன்னைப் போலவே  
மௌனப் புரட்சி
செய்கிறது !

கேட்பதை, கொடுப்பதை
எல்லாம்
வாங்கி கொண்டு , 
என் கேள்விகளுக்கும்
காதலுக்கும்
என்றைக்குதான்
பதில் சொல்லப்
போகிறதோ 
என் இனிய  தலையணை !!
  

Sunday, March 25, 2012

என்னை அவ்வளவு பிடிக்குமோ ?


எத்தனையோ வழிகளில்
எனக்குள் வந்து நிறைகிறாய் நீ 
உன்னைத் தடுத்து நிறுத்தினால் 
தான் என்ன ஆகிவிடப்
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
 தலையணை எடுத்தேன்
முகத்தில் கிடத்திப் புதைத்தேன்  
நிசப்தத்தில் திணறிக் கிடந்தேன் 
ஓரிரு நிமிடம் கடந்திருக்கும்...
     
உன்  ஒட்டுமொத்த ஆற்றலையும் 
திரட்டி எத்தனை  வீரியமாய்
என் கைகளைப் தட்டிவிட்டுத்
தலையணை தூக்கி எரிந்து 
எனக்குள் வந்து நிறைகிறாய்!

என் மூச்சே , 
என்னை அவ்வளவு 
பிடிக்குமா உனக்கு ?
 

Wednesday, March 14, 2012

பசித்தால் என்ன செய்யும் காதல் ?


என் எல்லா கவிதைகளுக்கும்
சொந்தக்காரி நீயாக மட்டுமே
இருக்கவேண்டும் என்றேன்  !

ஏன் உனக்கிந்த 
குழந்தைத்தனமான ஆசை 
என்றாய் ..

சரியாகச்சொன்னாய் அழகி !
குழந்தைகள் தான் அழுது 
முரண்டு பிடிக்கும் ! 

அழுதபிள்ளைதான்
பால் குடிக்கும் !

பாலூட்டாத அன்னையுமில்லை !
பசியெடுக்காத பிள்ளையும் 
எந்த உலகத்திலும் 
என்றுமே இல்லை !

Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !

Monday, February 28, 2011

காதல் 25 - The Refined Definitions

பூக்களின் நடுவினில் பயணம் போகிறேன் !
உன் புன்னகை நிறம் மஞ்சலென உணர்கிறேன் !
இது காதல் !




* நாம் கட்டியணைத்துக்  கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!



  இரு வேறு தீச்சுடரின் கோபம் - காதல் !
ஒன்றும் இன்னொன்றும் எரிகிற வேலையில்
பளிச்சிடும் ஒளியில்
மிளிர்வது காதல் !
 

நீ ஏமாந்திருக்கும் வேலையில் உன்
பின்னின்று
உச்சந்தலையில்
முத்தமிடுவது காதல்!


* உன்னை சுவாசித்து
என்னை வெளியேற்றும்
செயல் காதல் !


* என்னைப் பிடிக்குமா என்று நீ
கேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !


* ஊருக்கு நாம் எப்படியோ ?
உனக்கு நான் அழகு !
எனக்கு நீ அழகோ அழகு !
இது காதல் !


கவிதை எழுதத் தெரியாதவன்
எழுதிக் கிழிக்கும்
அத்தனை காகிதங்களுகுள்ளும்
எத்தனையோ காதல்
செத்துக் கிடக்கிறது !
உண்மை எதுவோ .,
அதை சொல்ல முடியாத
வார்த்தைகளில் ஒளிந்திருப்பது
காதல் !



என்னைப் பிரிவதற்கு நீ போட்ட
அத்தனை  நாடகங்களிலும்
கதாநாயகியை காமெடியன் வென்றான் !
அது நான் !
அது காதல் !


நான் உன் அளவிற்கு அழகில்லை
என்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது 
காதலோ காதல் !


என் இரு கைகளையும்
இணைத்துப் பார்க்கிறேன் !
இதய வடிவம் சரியாய்
வர மறுக்கிறது !
"அடப்போடா" என்று
கவலைப்படுவது காதல்!


 காமத்திற்கும் அன்பிற்கும் இடையில்
ஊர் வாயில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கும்
அத்தனையும் காதல் !
அது பாவம் !


நீ எனக்கானவள் இல்லை
என்ற போதும்
உன்மீது கொண்ட அன்பில்
நிலைத்தே இருப்பது
நிசமான காதல் !


உன்னைப் பெற்றவர்களிடம்:
" பூமியில் எங்கும் இலாத அன்பை
நான் மட்டுமே உங்கள் மகளுக்குக்
கொடுக்க முடிந்தவன்"
என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு ! 



* நிறைவான காதலில்
நிறைந்திருப்பது காதல் !
நிறைவான காமத்திலும்
கலந்திருப்பது காதலே !



* உணர்வுகள் உணர்ச்சிகளை
அன்பால் கொல்கிறது !
அது காதல் !


* கலைந்து கிடக்கும் மேகக்
கூட்டங்களில்
ஹார்ட்டின்  சின்னங்களை
தேடுவது காதல் !



* ஒரு சராசரி ஆணாய்
உன் உடல் பிடிக்கும் !
ஏன் என்று கேள் !
என்னை சுமக்கிற
இதயத்தை சுமப்பது
உன் உடல் தானே ?!
அது காதல் !


என் கைகளில் உன் பெயரை எழுதிப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
உன் கைகளில் என் பெயரை
எழுதிக் கொண்டு சிரித்துக் கொண்டே
இருக்கிறாய் !
என் அன்பிற்குப் பெயர் காதல் !
உன் பைத்தியகாரத் தனத்திற்கும்
பெயர் காதலே!



* இருப்பது நினைவிலோ கனவிலோ ..
பேனா கிடைத்தால்
என்னை மறந்து உன் பெயரை
கிறுக்கி தள்ளுவது காதல் !



கறுப்புக் கலர் கைகளில்
ஒளிந்திருக்கும் அன்பையும் ஈரத்தையும்
வெள்ளைக் கலர் கைகள்
கண்டுபிடித்து ரசித்தால் !
அந்த விளையாட்டிற்கு
காதல் என்று பெயர் !



* நீ யாரென்றே தெரியாத போதிலும் கூட
உனக்காகநான் விடும்
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஓராயிரம் டன் அன்பு
ஒளிந்து கிடக்கும் ! 
அது காதல் !


 


* என் கால்களில் நீ
ஏறி நிற்க நினைப்பது காதல் !
இனிமையான சுமையைத் தாங்கி
நான் சிரித்துக் கொண்டிருப்பது
காதல் !


 

* நீ வேறு திசை நான் வேறு திசை
போன போதிலும்
நாம் நம் ஸ்வாசங்களுக்குள் சத்தம்போட்டு
முத்தமிட்டுக் கொள்வது காதல் !



உன் பெயரெழுதி பக்கத்தில்
என்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !


PENNED BY KARUR PRABHAKARAN