Showing posts with label பதில். Show all posts
Showing posts with label பதில். Show all posts

Tuesday, October 13, 2009

மறைய மறுக்கும் நிலவு


கூப்பிடும் தொலைவில்
அலைபேசியில் என் அழகி..
இருவீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்தும்,
இவனும் அவளும்
நிலாரசிக்கும்
சன்னல் மட்டும் இன்னும்
திறந்தே இருக்கிறது...!!

முகத்திரையை கதவுகள் மறைப்பினும்,
மனத்திரையை சுக்குநூறாய்
கிழித்தெரிகிறோம் நாம்!-
பெயர் வைக்க தெரியாத ஓர்
உறவு ஜன்னலின் வழியே !!

கண்களில் சொருகும் தூக்கத்தை மறந்து
நிலாக்குளிர் நீளும் வரை நீள்கிறது
நம் உரையாடல்கள் !

உயிர் நடுக்கும் குளிரிலும் குளிர்காய்கிறோம்
நீ என் பேச்சிலும் நான் உன் மூச்சிலும் ..!!

விடியல்கள் தொடங்கும் முன்னொடி வரை
விடாமல் தொடரும் நம் பேச்சை
ரசித்துக்கொண்டே மறைய மறுக்கும் நிலவிற்கு
நான் என்ன பதில் சொல்ல முடியும் !?
"ச்ச்ச்ச்சீ" ரசித்துவிட்டுப்போ
என்பதைத் தவிர?