Showing posts with label Innocent love. Show all posts
Showing posts with label Innocent love. Show all posts

Monday, February 13, 2012

Fantastic 5 - February 14 Special

கருப்பு நயாகராக்கள்


ஒளியில்லா ஒவ்வொரு
நடுநிசியிலும்
ஒரு கருப்பு
விழுந்து தொலைகிறேன் ..
தொலைத்தெடுக்கிற வாசத்தில்
சுவாசித்து ஜீவித்து
விடிந்ததும் கரை சேர்கிறேன்


|-கூந்தல்-|


ரெட்டைப் புள்ளி ஓவியம்
  

சாமி தன் நெற்றியில்
தானே ஒரு ரெட்டைப் புள்ளி
ஓவியம் வரைகிறது !
ஒரு சிகப்புப் புள்ளியும் ஒரு
வெள்ளைப் புள்ளியும்
வைத்து முடித்ததும்
உலகினில் அதைப் போல்
அழகுண்டோ என்றாகிறது !
|-ஒப்பற்ற ஓவியம் -உன்
நெற்றிக் குங்குமமும்
குட்டித்திருநீறும் !-|


நித்திரையில் ரெண்டுவில்கள்


நித்திரையில் இருக்கும்
ரெண்டு வில்லும்
சப்த்தமில்லாமல்
பார்த்தெனைக் கொள்கிறது ...
அம்பே இல்லை
அங்கேயே எப்படியோ
வீழ்ந்துவிட்டேன் நான் !

|- நெற்றிப்புருவம் -|



மூன்று நிலவு


முதல் உலகப் போருக்கு
முன்னர் நடந்த
உரிமைப் போரில்
மூன்று நிலவு மட்டும்
உயிர்பிழைத்தது !
ஒன்று மேலேயே
தங்கிக் கொண்டது !
மற்றிரண்டும் உன் கண்களாய்
குடி பெயர்ந்துவிட்டது !

|- ரெண்டு கண்கள் -|


பூக்களுக்கான புன்னகைப் போட்டி


விண்வெளி நடத்திய
பூக்களுக்கான புன்னகைப்
போட்டியில்
ரோஜாக்களும்
மல்லிகைப் பூக்களும்
எதிரெதிரே நின்று
சிரித்துவிட்டு மறந்தவாறு 
அங்கேயே தூங்கிவிட்டது !


|- அதை இன்று உன்
கன்னங்கள் என்கிறார்கள் -|

Thursday, November 17, 2011

காதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்


இருவர் மீதும் தவறுகளிருந்தும் , 
இருவர்க்கும் அது தெரிந்திரிந்தும், 

என் தவறுகளை நீ 
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான் 
என் நம்பிக்கையில் மறைப்பதும்! 
 படைத்த சாமிக்கே 
கிடைக்கப் பெறாத வரம்  ! 

சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப் 
புரிந்து அணைக்காத ஆண்களும் 
காதலுக்கென்றே எழுதப்பட்ட 
சாபங்களாய் இருக்கையில் ! 

நீ சினந்து சிவக்கிறாய் ! 
நான் புரிந்து அணைக்கிறேன் ! 
♥ நாம்தான் காதலுக்கென்றே 
படைக்கப் பட்ட உண்மையான 
வரங்கள் அழகி !


The kinda trust which binds us is 
a heavenly treasure !
 I jus love it ♥ 

Monday, July 11, 2011

எது காதல் ?

அரங்கேற்றம் தொடங்கட்டும் !
ஓடிப்போய் நீ எங்கோ ஒளிந்துகொள் !
உனக்கெதிரில் நானெங்கோ
ஒளிந்து கொள்கிறேன் !

என்னைக் கண்டுபிடித்தால்
நீயும் சொல்லவேண்டாம் !
உன்னைக் கண்டுபிடித்தால்
நானும் சொல்லிடமாட்டேன் !

ஞாபகம் வைத்துக் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தது ஊர் !
நாமோ கண்டுபிடித்து மறந்து
விளையாட வேண்டிய நிலைமை !

பொல்லாத காதல் விளையாட்டில் 
பொழுது சாய்ந்தால் ஒரு விதி 
விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !
எவன்தான் செய்கிறான்
காதலர்களுக்கு இப்படி விதி ?

நேற்று, பொழுதுக்கும் என் பெயரை
காற்றில் வாசித்தவள் !
இன்று கற்பனையில் கூட வாசிக்காமல்
போன வழி எங்கே ?

எத்தனையோ அன்பினை படித்து முடித்து
எது காதலென்று மறந்து
போகும் நிலைக்குப் பெயர் தான்
ஒருவேளை காதலில் டாக்டர் பட்டமோ !?

Thursday, November 11, 2010

கடவுளுக்காகக் காத்திருக்கிறேன்


தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது 
தாய்மொழி வார்த்தைகள் !

தொலைவில் அவள் 
சென்றிடக்கூடுமென்று  
மறைந்தே கிடக்கிறது 
மனதிற்குள் அன்பு !

 சொன்னால் விதி  
என்ன ஆகும் ? 
சொல்லாமல் என் அன்பு 
எங்கு போகும் ?

ஒளித்து வைப்பதும் குற்றம் ! 
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் ! 
எங்கு தான் போகும் 
அனாதையான அன்பு ?

யாரேனும் கடவுளைப் பார்த்தால் 
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக் 
கேள்வி கேட்கவேண்டும்!