Saturday, June 23, 2012

அத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥
தெளிந்த நன்
மழை நீரை
மட்டும்
அருந்தி வாழும்
அது
சாதகப் பறவை !
தேனினும் இனிய
உன்னை மட்டும்
எழுதும்
நான்
சாதகக் கவிஞன் !


 
ஒரே ஒரு நாள்
நம் தூக்கத்தை
கலைத்து
எழுப்பியது
காதல்...
இன்று
ஒவ்வொரு
இரவிலும்
அதைத்
தூங்கவிடாமல்
கையிலும்
தோளிலும்
நெஞ்சிலுமிட்டுக்
கொஞ்சிக்
கொண்டிருக்கிறோம் !
நன்றாக
நம்மிடம்
மாட்டிக்கொண்டது
காதல் !
 
உனக்கான
கவிதைகளாய்
என் எல்லா
நோட்டுகளிலும்
எழுதி வைத்தேன் ...
நான் விரும்பி
செய்த ஒரே
வீட்டுப்பாடம்
நீ மட்டும் தான்
அழகி !!என் மௌனம்
உன் பெரும்
தேவை
என்கிற போது
என்அன்பின்
மொழிகள்
அனாதையாகிப்
போகிறதே
அதை நான்
என்ன செய்ய ?
ம்ம் ? என்ன செய்ய ?


எண்ணற்ற
உறவுகளுடன்
தொடங்கிய
வாழ்க்கையின்
எல்லை
எங்கிருந்தாலும்
பரவாயில்லை
அங்கு நீ
மட்டும் நில் !
உன் மடியில் என்
எல்லா
மூச்சையும்
முடித்துக் கொண்டு
காற்றோடு
காற்றாகிவிட்டால்
சந்தோஷம் !
 
மண்ணை
மழை
முத்தமிடுகையில்
எழும்
வாசத்தையும்,
உன்னை
நான்
முத்தமிடுகையில்
எழும்
வெட்கத்தையும்
ஒன்றாய்க்
கலந்து
ஓர் உணவு
செய்து
அதற்கு
அன்பெனப்
பெயரிட்டுத்
தின்று கொழுக்க
வேண்டும்....
உயிரெல்லாம்
நீயாகவும்
உணர்வெல்லாம்
மழையாகவும்
சில்லெனக்
குளிர வேண்டும் !


வரம்
கேட்கவில்லை,
நீயாய்
வந்தாய் .
சாபமும்
கேட்கவில்லை,
வந்த வழி
சென்றாய் .
விதியை
நொந்து
கொள்ள
விருப்பமில்லை.
உயிரும் உடலுமே
இங்கு நிலை
இல்லை !
இருப்பினும்
தூக்கிக் கொஞ்ச
ஆளில்லாமல்
தனித்துக் கிடக்கும்
அன்பை
நினைத்தால்
தான்
கத்தி அழத்
தோன்றுகிறது !
பாவம் !
ஒத்தையாய்
நிற்கிற
அத்தனை
அன்பும்
பாவம் .

 ●
ஒவ்வொரு
எழுத்தும்
உன்னை
எழுதிவிட்டு
எங்கேயோ
இருக்கிற
ஏதோஒரு
பெண்ணுக்காக
எழுதியதாக
நடிப்பது
நம் காதலுக்கு
நான்
வேறு வழியின்று
இட்டுக்
கொள்ளும் சூடு !

உன்னைப்
பிரதி எடுத்து
இடது கையில்
வைத்துக் கொண்டு
வலது கையில்
எல்லா
அழகையும்
தத்ரூபமாய்
வரைந்துவிட்டது
இயற்கை ...
சப்தமின்றி
பின்னால்
நின்று ரசித்த
வகையில் நான்
இயற்கையைவிட
இன்னும்
கொடுத்தவைத்த
காதலனாகிவிட்டேன் ! !
 
நீ
பார்த்த
நொடியிலேயே
பிடித்துப் போன
பொம்மையும்
பார்க்கப் பார்க்கப்
பிடித்துப் போன
நானும் என
ரெண்டு பெரும்
கொடுத்து
வைத்தவர்கள் !
உன் அணைப்பிலேயே
ஒவ்வொரு இரவும்
தூங்க !

 
வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

 
என் கவிதை
வீட்டில்,
எல்லாம் "நீ"யாய்
நிறைத்துப்
பூட்டிவிட்டு,
சாவியை
எங்கேயோ
தொலைத்து
விட்டதைப்
போலிருக்கிறது
இந்த இரவு !
 


எங்கேயோ
பாறைகளின்
இடுக்குகளில்
பூத்திருக்கும்
ஒற்றை மலரைப்
பார்த்து
வேதனைப்
படாமல்
இருக்க
முடிவதில்லை !
அது நீ இல்லாத
நானாகவே
தெரிகிறது !
 
 
உன் மத்தாப்புப்
பேச்சு
எல்லோருக்கும்
பெருவரம் .
எனக்கும் உன்
மௌனமும்
சேர்த்து !

11 comments:

 1. <3 <3 <3 உன் உயிர்த்த கவிதைகளில் காதலுக்காய் வாழ உன்னிடம் தான் கற்றுகொண்டிருகிறேன் பிரபா <3
  lovey Brother

  ReplyDelete
 2. எழுதியே சாவடிக்ரடா பிரபா லவ் யு லவ் யு லவ் யு லவ் யு லவ் யு லவ் யு லவ் யு லவ் யு<3

  ReplyDelete
  Replies
  1. :) :) :) :) yaaro therilaya thank you .. ! :)

   Delete
 3. @ harini : THanks a lot ... HAppy for your comment da ...

  ReplyDelete
 4. Anonymous : Dont know who you are ... But Really Thanks.. :)

  ReplyDelete
 5. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_26.html) சென்று பார்க்கவும். நன்றி !

  வலைச்சரம் மூலம் தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.
  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.

  ReplyDelete
 6. //நான் விரும்பி
  செய்த ஒரே
  வீட்டுப்பாடம்
  நீ மட்டும் தான்


  காதல் உங்கள் கைகளுக்குள் சிக்கிக்கொண்டு
  தவிக்கிறது ...........

  அருமை அனைத்தும்

  என் கவிதைகளும்
  http://kovaimusaraladevi.blogspot.in/

  ReplyDelete
 7. அத்தனையும் அழகு...

  வலைச்சரத்தில் தங்களின் அறிமுகம்...

  ReplyDelete
 8. தெய்வமே யாரப்பா நீங்க... ரெம்ப நன்றி..

  ReplyDelete
  Replies
  1. :) :) :) THanks a lot pirasanth :) :) thanks for all your love :)

   Delete