Thursday, August 16, 2012

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்நீதான்
என் வரமென்றும்
இல்லை இல்லை
நான்தான்
உன் வரமென்றும்
இருவரும்
செல்லமாய்
மாறி மாறி
சண்டையிட்டுக் 
கொள்ளும்
தருணங்கள்..
வரங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
குட்டி வரம் ! ● 
நாம்
பகிர்ந்துகொண்ட
முத்தங்களை
யார் ஞாபகப்
படுத்தினாலும்
அதுவும்
கொண்டாடப்
படவேண்டிய
நிமிடங்கள்தான் !
 
கவிதையோ,
அழகோ,
எதையும் நாம்
புதிதாய் 
படைக்கப் 
படவேண்டிய
அவசியமில்லை
அது
இயற்கைக்குள்ளேயே
ஒளிந்திருக்கிறது !
நமக்கு
ரசிக்கத் தெரிந்தால்
மட்டும் போதும் 

  
மண்ணை
முத்தமிட்டுத்
திரும்பும் வழியில்
என்மீது படும்
சாரல்கள்
அனைத்திலும்
உன் வாசமே
கலந்திருக்கிறது!
.
மீதமிருக்கும்
மழையிலும்
நீதான்
நிறைந்திருப்பாயோ ?
.
ஒரு நாள்
எப்படியாவது
ஓட்டமாய்
ஓடிப்போய்
எல்லா மழையிலும்
நனைய வேண்டும்
நனைந்தே
ஆக வேண்டும் !
● 


மழைக்கவிதை
அவ்வளவு தானா?
என்கிறாய்...
மழைவிட்டாலும்
தூவானம்
விடாததைப் போல்
யார் விட்டாலும்
என்னை நீ
விடுவதே இல்லை!!


நேயர்
விருப்பமாய்
நீ ஒரு கவிதை
கேட்கையில்
மட்டும்
நான் ஒருநிமிடம்
கம்பனையும்
கண்ணதாசனையும்
விடப் பெருங்கவியாக
உணர்கிறேன் !என்றென்றும் என்
தமிழில் கொட்டிக்
கிடக்கிற
எல்லா வாசமும்
நீதான் !
அன்று சொன்னேனே..
அதேதான் இன்றும் !


செவ்வாய்
கிரகத்திற்கு
மட்டும் ரெண்டு
நிலவு..
அதென்ன பூமிக்கு
மட்டும் ஒன்று ?
என கடவுளைப்
பார்த்து கேள்வி
கேட்பவர்களுக்கு
என்ன தெரியும் ?
இன்னொரு
நிலவைத்தான்
நான் திருடிக்
கொணர்ந்து
விட்டேனே....
என் வீட்டிற்கு
வேண்டுமென்று !உன் தோள்
சாய்ந்து
கிடப்பதே
அன்பின்
பெருவரம்தான் ! உன் இதழ்களைப்
பிய்த்து என்னைச்
சுற்றிலும்
நிரப்பிக் கொள்வேன்,
பின் உன்
மகரந்தங்களின்
மடியில் கிடந்தது
தூங்குவதைப்போல்
நடிப்பேன்...
பின் தூங்கிவிடுவேன்...
அதிகாலை ஆறு
மணிக்கெல்லாம்...!


நீ தூங்கும்
அழகைப் பார்க்க
இரவில் மட்டும்
வந்து போகும்
நிலவு
ஒரு இனிய
திருட்டுக்
களவாணி !
  

தனிமை
என்பது
எனக்கும்
காற்றுக்கும்
நடக்கும்
பெரும்யுத்தம் !
உள்ளே இழுக்கிற 
ஒவ்வொரு காற்றிலும்
உன்னை இழுத்துக்

கொள்வேன்!
இமைப்பதற்குள்
இன்னொருபுறம்
காற்றுன்னை
இழுத்துச் செல்லும் !
தொடர்கிற
யுத்தத்தில்
தோற்ப்பேனோ
ஜெயிப்பேனோ
இருக்கிற
நிமிஷத்தில்
எல்லா மூச்சும் 
நீயாய் இருக்கிறேன்..
அது போதும் !
● 
பூ...க்...க...ள்
என்று சொல்லி
முடிப்பதற்குள்
முதல் ஆளாக
வந்து
என் நினைவில்
ஒட்டிக்கொள்பவள்
நீ


எந்த ரோஜாவுக்குத் தான் 

உன் கூந்தலில் 
உறைந்து மயங்க 
ஆசையில்லை 
சொல் ?
பூக்களின் 
குலதெய்வம் நீ ! 
அவைகளின் 
கோயில் உன் 
கூந்தல் !


Photo Copyrights : Hemalatha Gopalakrishnan


எல்லா குழந்தைகளுக்குள்ளும்
உன் சிரிப்பை புகுத்தி
ஒளித்து வைத்த இறைவன்
ஆகச் சிறந்த படைப்பாளி !
அதை எப்படியோ
கண்டுபிடித்து ரசிக்கும்
நான் ஆகச்சிறந்த
காதல் விஞ்ஞானி !

  My Dear Readers!  Thanks for Your Wonderful support all the way You shower 
Whenever I write something.  
New Readers,  Get me @ my Facebook ID  for
 Instant Updates as well : 
பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha)  . 


11 comments:

 1. அருமை அருமை
  வஸந்த காலத்தில்
  அழகிய நந்தவனத்தில் நுழைந்த சுகம்
  உங்கள் பதிவு தந்த சுகம்
  மனம் கவர்ந்த அருமையான கவிதைகள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை (படங்களும்)... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. காதல் காதல் காதல்
  காதல் இல்லையேல் காதல்

  அருமை ..........

  ReplyDelete
  Replies
  1. Sarala , Thanks a million... Welcome to my blog :)

   Delete
 4. அன்பும் காதலும் ஆகிய மழையே இங்கு பொழிந்து கொண்டு இருக்கிறது (நில்லாது !!!<3)
  நின்றாலும் செடியில் மீதமிருக்கும் ஒரு சொட்டு நீரிலும் நிறைந்திருக்கும் உனது அழகியின் வாசம் (நேசம் <3<3<3)
  அருமை பிரபா
  ~~உன் தோழி திவ்யா......

  ReplyDelete
 5. super kavitha nanba
  எல்லா குழந்தைகளுக்குள்ளும்
  உன் சிரிப்பை புகுத்தி
  ஒளித்து வைத்த இறைவன்
  ஆகச் சிறந்த படைப்பாளி !
  அதை எப்படியோ
  கண்டுபிடித்து ரசிக்கும்
  நான் ஆகச்சிறந்த
  காதல் விஞ்ஞானி !

  ReplyDelete
 6. சிறப்பு சிறப்பு சிறப்பு

  ReplyDelete
 7. good morning brabha nalama awesome your all post

  ReplyDelete