பள்ளிக்கூடம் போகிற வழியில்
பாழடைந்த மண்டபத்தின்
தூசு படிந்த சுவற்றில் ,
குளத்தை ஒட்டிய
குறுகிய பாலத்தின் ஓரங்களில்,
என் சுற்றப்புறம் தென்படும்
பாறைகளிலும் , பள்ளிக்கூட சுவர்களிலும்,
இளைப்பாற மரநிழல் தேடிப்போகையில்
வேப்பங்குச்சியின் கிறுக்கல்களில்,!
சாமி படம் போட்டஎன் நோட்டு புத்தகங்களில்,
பிள்ளையார் சுழிக்கு பதிலாய்,
இதயம் போட்டு அம்பு விட்டு
பட்டினத்து கடற்கரை மணலில்,
என்று
எங்கெங்கோ உன் பெயரை
கிறுக்கி வைக்கும் போதே தெரியுமடி..!
உன் நியாபகார்த்தமாய் கடைசி வரை
என்னோடு நிலைக்கப் போவது
உன் பெயர் மட்டும் தான் என்று .!