Tuesday, July 13, 2010

காலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்

உன் நினைவுகளைக் 
கண்ணாடியில் காட்டிப்பார் !

என் கைகளைக் 
கட்டியணைத்துக் கொண்டு ,
'விடமாட்டேன்' என்பது போல்,

உன் வீட்டு கதவுகளை நீ  
அடைத்த நேரங்களின் பிம்பங்களை ,
நீஎனை  விட்டுப் போனபின்பும் 
இன்றும்கூட பிரதிபலித்துக்கொண்டு 
தான் இருக்கிறது ..!!

இது, 
கடந்துபோன காலக் கண்ணாடியில் 
முடிந்து போன காதல் பிம்பங்கள் !

2 comments:

  1. கடந்துபோன காலக் கண்ணாடியில்
    முடிந்து போன காதல் பிம்பங்கள் !

    yovv... supr ya...

    ReplyDelete
  2. நன்றி தீய சக்தி

    ReplyDelete