Friday, July 23, 2010

ஒரு ஊஞ்சலின் புலம்பல்!

உயிருக்குள் உணர்வாகவும் 
உணர்வுகளுக்குள் உயிராகவும்
என் விதிக் கவிதையில் 
கடைசி வரை நிலைக்கப் போகும் 
முற்றுப்புள்ளியே ! 
என் முழுநிலவு அழகியே! கேள்..!!

நீயும் நானும் ஊருக்கு தெரியாமல்
ஓடிபிடித்து விளையாடிய இடத்திற்கு 
நெடுநாட்களுக்கு பின் 
நேற்றுதான் சென்றிருந்தேன்!

ஆலமர விழுதில் 
அன்று யார் முடிச்சோ?
அந்த ஒற்றை ஊஞ்சல்
வாழ்வதற்கு பயந்து 
தொங்கிவிட்டது கயிற்றில்!

உயிரில்லாத ஊஞ்சல்களின் 
அருகில் நின்று பார்த்தேன்!
லேசாக அசைந்த ஊஞ்சல்., 
தான் உயிரோடிருக்கும் சேதியை
என் செவிகளுக்குள் 
காற்றாகிச் சொன்னது..!

காற்றில் அசைந்த கட்டை ஊஞ்சல் 
என் நினைவுகளை இடித்து 
சட்டைக் காலரை பிடித்துக் கேட்டது..!

என்மடியில் அவளும் 
அவள் மடியில் நீயும் அமர்ந்து 
அழகு சேர்த்த நாட்களை 
எங்கே தொலைத்துவிட்டாய்?
"எங்கடா உன் அழகி..??" என்றது ..!

ஊஞ்சலின் கால்களில் வீழ்ந்து 
அவள் பாதச் சுவடுகள் அன்று 
உதைத்த மணல்களின் மடியில் 
இருவரி எழுதிவிட்டு எழுந்தேன் ....!

மன்னித்து விடு ஊஞ்சலே..! 
உன் கேள்விகளுக்கு!
என்னிடம் மௌனத்தில் கூட பதில் இல்லை..!    


4 comments:

  1. மன்னித்து விடு ஊஞ்சலே..!
    உன் கேள்விகளுக்கு!
    என்னிடம் மௌனத்தில் கூட பதில் இல்லை..!//
    அனைத்து வரிகள் அருமை கவிதை மட்டும் தானா?

    ReplyDelete
  2. நன்றி ... ! " க்ரியேடிவ் பிளாக்கர் " திரு.சௌந்தர் அண்ணா அவர்களே...

    ReplyDelete
  3. very nice friend........keep it up

    ReplyDelete
  4. நன்றி கார்த்திகா..!!

    ReplyDelete