Monday, March 19, 2012

காதலில் Ph.D பெறுவது எப்படி ?


உன் ஒன்பதாயிரம் 
சோதனைச் சாவடிகளிலும் 
நீ கேட்கும் 
விளக்கங்களுக்கெல்லாம் 
பதில் சொல்லி முடிந்ததும் 
வார்த்தைகளால் குத்தப் பட்டு 
சாகடிக்கப் பட்டிருக்கும் 
என் காதல்  ! 

அப்போதாவது ஏன் 
எப்படியென்று  
கேள்வி கேட்காமல் 
என்னைப்  நிம்மதியாய்த்  
தூங்க விடு !
அன்பின்  சேயாய் 
நானிங்கு கிடந்தேங்க , 
ஆராய்ச்சிக் கூடத்தில் 
என் காதலைப் போட்டு 
எரித்துக் கொண்டிருக்கிறாய் நீ ! 

உலகம் கண்டிராத அன்பை
நான்சொல்லித் 
தெரிந்துகொண்ட நீ 
காதலில் டாக்டர் பட்டம் 
பெற்றதும் !

சொல்லி கொடுத்த நான்
சிறந்த சர்வதேச 
நோயாளிப் பட்டம்
பெற்றதும் தான் 
இப்போது மிச்சம் ! 

3 comments:

  1. உலகம் கண்டிராத அன்பை
    நான்சொல்லித்
    தெரிந்துகொண்ட நீ
    காதலில் டாக்டர் பட்டம்
    பெற்றதும் !

    சொல்லி கொடுத்த நான்
    சிறந்த சர்வதேச
    நோயாளிப் பட்டம்
    பெற்றதும் தான்
    இப்போது மிச்சம் ! மிக அருமையான வரிகள்

    ReplyDelete
  2. சர்வதேச நோயாளிப் பட்டமும் உண்டா? simply superb.

    ReplyDelete