Tuesday, June 12, 2012

இந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல ! - 11 குட்டிக் கவிதைகள் !



நேரடியாய்
கடவுளின்
தோட்டத்தில்
இருந்து நான்
ஆசைப்பட்டுத்
திருடிக் கொணர்ந்த
அன்பு மல்லிச்சரம்
நீ !



தேன்கூடு
நான் !
என்னை
இறுக்கமாகக்
கட்டிக்
கொண்டிருக்கிற
தேனீக்கள்
உன்
நினைவுகள் !



உன்னைப்
பார்த்துக்
கொண்டே
இருப்பது
மட்டும் தான்
என் நெஞ்சுக்குப்
பிடித்த ஒரே
இனிய தவம் !



என்னென்னவோ
எழுதும்
அறிவுப்புலமை
நிறைந்த
பெண்களின்
கவிதைகளை விட
என்னை
கிச்சுக் கிச்சு
மூட்டி சிரிக்க
வைக்கும் உன்
காமெடிக்
கவிதைகளே என்னை
அதிகம் ஈர்க்கிறது
அழகி :)



உன் சிரிப்பிற்கு
நான் காரணமாகும்
ஒவ்வொரு தருணமும்
கடவுள் - தான்
சேர்த்து வைத்திருக்கிற
வரப் பெட்டியிலிருந்து
ஒரு முத்தை
என் மனதிற்குள்
தவற விடுகிறான் !



அமைதியான
சப்தங்கள்
கைகோர்த்துக்
கொண்டு
பேசுகிற
பேரழகான
கவிதை
உன் மூச்சு !



எந்த
மொழியும்
செம்மொழிதான் ,
உன்னைப் போல்
ஒரு பேரெழில்
பெருங்கவிதையைப்
பெற்றெடுத்தால்
♥ 


அன்பிற்குத்
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே !
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

 
என் உள்ளே போகிற
மூச்சும் சரி ,
வெளியில் அனுப்பப்படுகிற
மூச்சும் சரி
எல்லா மூச்சின் முகப்பிலும்
உன் பெயரையே
முகவரியிட்டு
அனுப்புகிறேன் ! 
    


பூக்களின் இதழ்களைத் 
தொட்டுப் பார்க்கையில் 
எங்கிருந்து தான் 
ஆர்ப்பரித்து வருமோ 
உன் வாசம்... 
என்னை ஒட்டுமொத்தமாய் 
சுற்றிச் சூழ்ந்த 
கட்டித் தழுவிக் 
கொள்கிறது அழகி ! 

 

7 comments:

  1. each and every line is nice da prabha <3<3<3...

    ReplyDelete
  2. ///கண்ணைமூடிக்
    கொண்டு நான்
    உன் பெயரின்
    முதல் எழுத்தை
    எழுதி முடித்திருப்பேன் !///

    எப்படி இப்படிலாம் தோணுது உனக்கு சூப்பர் பிரபா <3

    ReplyDelete
  3. குட்டிக் குட்டிக் கவிதைகள் மனதுக்கு இதமாகத்தானிருக்கின்றன. திருடுவதற்கல்லாத இந்தப் பூக்களை நுகர விரும்பும் வண்டுகளுக்காய் வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன் நண்பரே.அதற்கான சுட்டி http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html

    ReplyDelete
  4. http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html
    இன்று தங்களின் பதிவு வலைச்சரத்தில் செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

    அனைத்துக் கவிதைகளும் மிகவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

    ReplyDelete