நேற்றடித்த ஆசைமழையில்
இன்றெழுந்த எல்லாம் காதலாம் !
பார்க்க முடிகிற அன்பிலும்
கேட்க நேர்கிற காதலிலும்
உணர முடிகிற உண்மைகள் யாவிலும்
உடல்களின் வாசமே
உண்மைப் பிரதானம் !
அது காதலாம்!
ஓஹோ !
அப்படியானால் இதற்குப் பெயர் என்ன ?
கனவில் விதி எழுதி ,
நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோ
சென்றுவிட்ட போதும் ,
காற்றில் அன்பெழுதி
சப்தமிட்டு வாசிக்கிறேன் !
அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !
தோள் இல்லை - நான்
சாய்ந்துகொண்டுதா னிருக்கிறேன்-உன்
மடியில்லை - நான்
தூங்கிக் கொண்டுதா னிருக்கிறேன் !
விதியை மீறி விண்ணை எட்டிய
நம் உணர்வுகள் இன்று !
நட்சத்திரங்களுக்கு நடுவினில்
உலவிக் கொண்டிருக்கும் காற்றோடு
கைகோர்த்து காதலித்துக் கொண்டிருக்கிறது !
இதை விட ஒரு பெரிய காதலை
நான் பார்த்ததில்லை அழகி !
Thanx, that you are here to accredit my love !
Love you so much !
awesome...!!!
ReplyDeleteஆகா அருமை பிரபா..
ReplyDeleteஅருமை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteCrazyidiot : Saran : Thanxalott yaar !
ReplyDeleteBale Prabhu @ Romba nandri ya ...
ReplyDeleteMadurai saravanan ji @ Thanx .. and welcum to ma blog ...!
ReplyDeleteLovely , the punch line at the last line ..click :)
ReplyDeleteuma @ thanxllot akka ...!!
ReplyDeletenice
ReplyDelete@ ragavan : Thanx ji !
ReplyDelete