நாள் முழுதும் உன் உள்ளங்கை மழையில் நனைந்துகொண்டிருக்கும் கைக்குட்டை நானாக இருந்திருக்கலாம்
# 02
நீ கோபப்படும் போது உன் மூக்கின் மேல் முத்தமிட்டு சிரித்துக் கொண்டிருக்கும் நாலு சொட்டு வியர்வைத் துளியாய் நான் இருந்திருக்கலாம் !
#03
உன் நாடித்துடிப்பை கட்டியணைக்கும் குட்டிக் கடிகாரம் நானாக இருந்திருக்கலாம் !
#04
யாருமில்லா பொழுதுகளில் நீ சிரித்துப் பார்த்தும் முறைத்துப் பார்த்தும் மகிழ்கிற நிலைக்கண்ணாடி நானாக இருந்திருக்கலாம் !
#05
கழுத்தின் வழியாக நெஞ்சை கடந்து வயிற்றில் படுத்திருக்கும்
சர்ப்பக் கூந்தல் நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு !
#06
சர்ப்பத்தை சூழ்ந்திருக்கும் மொட்டு மல்லிகைக் கூட்டம் நானாக இருந்திருக்கலாம் !
#07
புத்தகப்பை இல்லாத நேரத்தில் உன் நெஞ்சோடு அணைக்கப்பட்டு சுமந்து போகும் புத்தகங்கள் நானாக இருந்திருக்கலாம் !
#08
நான்தான் இவள் கைகளை முத்தமிடவேண்டுமென்று சமயத்தில் சப்தமிட்டு சண்டையிட்டுக் கொள்ளும் ஐந்து வலைகளும் நானும் ஒன்றாய் இருந்திருக்கலாம் !
#09
வைரங்களாலும் வைடூரியங்களாலும் ஆன ஊர்களை இணைக்கிற தங்கத் தொடர்வண்டி உன் கழுத்துக்கு நானாக இருந்திருக்கலாம் !
#10
நீ முதன் முதலில் கட்டிய சேலையில் உன்னை தொட்டுரசிய நூல்கள் எல்லாம் நானாக இருந்திருக்கலாம் !
#11
வெறும் மல்லிகையோடு இல்லாமல் ஒரு ஆரஞ்சு ரோஜாவும் வைத்தால் ரொம்ப அழகாக இருக்கும் என்று சொல்லுகிற உன் மனநிலை நானாக இருந்திருக்கலாம் !
#12
பன்னிரு நரம்புகள் சங்கமிக்கிற நடுநெற்றியில் உன் செந்நிற குங்குமம் நானாக இருந்திருக்கலாம் !
#13
உன் கைகளை விட்டுவிட்டால் நீ சிவந்து போகிறாய் . உன் கைகளை கட்டி அணைக்கிற மருதாணியாக நான் இருந்திருக்கலாம் !
#14
வெளுத்துப் போயும் "இது சாமிக் கயிறு " என்று காலம் காலமாக உன் மணிக்கட்டை ஆக்கிரமிக்கும் ரெட்டை சுற்றுக் கயிறாய் நான் இருந்திருக்கலாம் !
#15
உன் கைபேசித் தொடு திரையில் கன்னத்தில் கைவைத்து சிரித்துக் கொண்டிருக்கும் குட்டிக் குழந்தை நானாக இருந்திருக்கலாம் !
#16
நீ வெட்கத்தில் கைகளால் கண்களை மூடிக் கொள்ளும் போது , உன் கண்களுக்கும் கைவிரல்களுக்கும் இடையில் ஒளிந்துகொண்டு உன் அழகை ரசிக்கிற கறுப்புக் காற்றாய் நான் இருந்திருக்கலாம் !
#17
வெகு நேரத்திற்குப் பின் கலையத் தொடங்கும் உன் முதல் முடிக்கீற்று நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு !
#18
உன்னைக் கடித்துவிட்டு ஒளிந்துகொள்கிற சிற்றெறும்பாகவோ
இல்லை கிச்சுகிச்சு மூட்டியதர்க்காக நீ மன்னித்து தரையில் இறக்கிவிடப் படுகிற சாமி எறும்பாகவோ நான் இருந்திருக்கலாம் !
#19
உன் சிரிப்பிலிருந்து சிதறி விழும் நட்ச்சத்திர துகள்கள் அத்தனையும் நானாக இருந்திருக்கலாம் !
#20
நீ தூக்கிவைத்துக் கொஞ்சிகொண்டிருக்கும் பெயர் தெரியாத ஏதாவதொரு அழகுக் குழந்தையாக இருந்திருக்கலாம் !
ம்ம்ம்.. எத்தனை கற்பனைகளாடா... அதில்தான் எத்தனை உணர்வுகளடா...
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
அடுத்த பகுதிய சீக்கிரம் போடு தல .. :)
ReplyDeleteகவிதைக்காதலன் : தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நன்றி !
ReplyDeleteகார்த்திக் : கண்டிப்பாக ... வெகு விரைவில் வெளியிடப் படும் ! :) நன்றி :)
ReplyDeletePrabha: Nee sonnadhil edhilume nee illamal pogalam...aanal...un varthaigalil, un karpanaigalil, un ninavil..aval irukiral..
ReplyDelete@ hemalatha : Obviously ! As you said , she is always there with me ! :) Thanks for your comment !
ReplyDeleteWow congrats prabha.......nalla irukku :)
ReplyDelete@ thanks sudha :)
ReplyDelete