Tuesday, August 24, 2010

ஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது


சம்பவம் நிகழ்ந்த இடம் : திருச்சி மலைக்கோட்டை இரயில் நிலையம்   

நேரம் : ஒரு மணி வண்டிக்கு ஐந்து நிமிடம் இருக்கிறது !


"ஊரெங்கும் முடிந்து விட்டதாம் 
அரங்கேற்றம்! என்னை
உயிரெடுக்க வந்துவிட்டது
காற்று "

என்று புலம்பிக் கொண்டிருந்தது 
மரநிழலில் ஒடிந்து கிடந்த 
ஒற்றை வேப்பங்குச்சி!

என்னைப் பார்த்ததும் அது
மண்ணை ஈரமாக்கி 
மேலும் அழ ஆரம்பித்தது..

அட நிறுத்தடி! கிறுக்குபய குச்சியே,
என்று சொல்லிக்கொண்டே புழுதித்  
தரையில் அமர்ந்தேன்.!

விதி ஒடித்த தன் நிலையை   
வேதனையாய்க் கதை சொன்னது ..!!

எல்லாம் விதிதான் எதற்கிந்தப் புலம்பல் ?
விடுவிடுவென ஆறுதல் சொல்லி 
விறுவிறுவென 
ஏந்திய குச்சியில் 
கட கடவென எழுதி முடித்தேன் 
மண்ணில்!

"அழகி " 
என்று உன் பெயரை 
அழகு  கொஞ்சமும் குறையாமல்..!
அப்பாடா..!
வேப்பங்குச்சியின் விதி 
புதுபிக்கப்பட்டது!
உன் பெயரெழுதிய காரணத்தால் 
அது 
என் மர(அலமாரியில்)   
பொக்கிசமாக்கப் பட்டது ! 



DESTINY is that which tries to DIVIDE us!

DIVINE LOVE is that which dies to UNITE us!

6 comments:

  1. பொக்கிசமாக்கப்பட்ட வேப்பங்குச்சி...நல்லயிருக்கு நண்பா..

    ReplyDelete
  2. வெறும்பய// ஜெயந்த் னா .. நன்றி நன்றி..

    ReplyDelete
  3. விதி ஒடித்த தன் நிலையை
    வேதனையாய்க் கதை சொன்னது ..!!
    super da....

    ReplyDelete
  4. தீயசக்தி சதீஷ் :- ரொம்ப நன்றி நண்பா !

    ReplyDelete
  5. dont know wat to say....but i can say one thing super.......i will keep on checkng blog.....regularly hereafter.....

    ReplyDelete
  6. Thanks for your wonderful support Praveen . you realy Dono wat to say ? hmm..!! Tats fyn... Very happy with your comment.! its my pleasure to get such a response. Thanx alot dude.

    ReplyDelete