விடியல் தொடங்கி முடியும் இரவு வரை
வெள்ளைப் பெட்டிக்குள் என்
உலகமே உறைந்து கிடக்கிறது !
செயர்க்கைகோள் விளையாட்டில்
சிகரமே அடைந்து கிடக்கையில் நம்
நன்றாகவே தெரிகிறது நீயும் நானும்
வாழ்ந்துகொண்டிருக்கும் தெருத்தடம்!
கூகுள் மேப்சில் இத்தனை ஊரிருக்க
குற்றமென்று நம் அன்பை சொன்ன
இந்த ஊரிலா நாம் பிறந்திருக்க வேண்டும்?
சாதிகளும் சண்டைகளும் இல்லாத
ஊரினில் பிறந்திருக்கலாம் .,
சாகும் போதும் உன்
மடியினில் கிடந்திருப்பேன்.!
அரிவாள்கள் அன்பை எதிர்க்கும் கொடுமை
எந்த ஊரினில் இல்லையோ அங்கு
பிறந்திருக்கலாம் நாம்..!!
அறுபது ஆண்டடுக்கு பிறகு
வரலாறாகி இருக்கும் நம் அன்பு .!
மானம் மரியாத சாதி சனம்
கோத்திரகுலமேன்று
சேற்றினில் கலக்க படுகிறதே ..!!
செந்தாமரைக் காதல்கள் .!
அது இல்லாத ஆயிரம் ஊரினில்
ஏதாவது ஒன்றினில் பிறந்திருக்கலாம்..!
மத்திய அரசு வேலையும்
மாதம் முப்பதாயிரமும் போதும்!
மாப்பிள்ளை தங்கமாமே.!??
காசும் பணமும் இல்லையெனில்
காதலும் குணமும் பித்தளையாம் ..!
ச்ச்ச்சீ !
இந்தக் கன்றாவிகள் இல்லாத ஊரினில்
நாம் பிறந்திருக்கலாம்!
ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்தால்
ஆட்டம் போடுது பார் " சிறுசுகள் "
என்கிறார்கள் - அந்தச்
சிறுசிலிருந்து வந்தப் பெருசுகள் .,
சில்லறைத்தனமாக பேசும் பேச்சுக்கள் நம்
செவிகளுக்கு எட்டாத
ஏதாவது தேசத்தில் பிறந்திருக்கலாம்!
சதை உணர்விலா அன்பு-அது
இது எனத்தெரிந்திருந்தும்
சவுக்கிலடித்துப் பிரித்துவைக்கும்
சாதிகள் இல்லாத நாட்டில்
சோறு தண்ணி இல்லையெனினும்
பரவாயில்லை .!
ஒருநாளேனும் வாழ்ந்துவிட்டுச்
மடிந்திருக்கலாம்.!
கணவன் மனைவியாய் !
சப்தமில்லாமல் எத்தனையோ
காதல்களை சாகடித்து !
ஒவ்வொரு வரியும் இந்தியாவின் இன்றைய நிலையும், உங்கள் காதலின் ஆழத்தையும் காட்டுகின்றன...
ReplyDeleteஉங்கள் இனிய கருத்திற்கு நன்றி வெறும்பய.ஜெயந்த் அண்ணா.!
ReplyDeleteNice
ReplyDeleteThanx alot for ur wonderful comment swati...
ReplyDeletekannan Thanx for ur comment frnd!
ReplyDelete