Sunday, October 31, 2010

முத்தம் அன்பே சொல்லும் !


உன்னை முத்தமிட்டதாய் 
கவிதை எழுதுகிறேன் ,

கவிதையில் பொய் எழுதுவதை 
அப்போது மட்டும் 
நிறுத்தி வைக்கிறேன் .!

என் பொய்களை  ரசிக்கிற உலகம் 
ஏனோ உண்மையை படித்து 
முகம்  சுழிக்கிறது !

அப்போது தான் நினைத்தேன் :
பேசாமல் நமக்கு வயசு 
ஏழாகவோ , இல்லை எழுபதாகவோ  
இருந்திருக்கலாம் ! 

நம் முத்தத்தின் ஈரத்தில் கசிகிற 
அன்பை மட்டும் உலகம் கவனித்திருக்கும் ! 

சரி விடடி., 
முத்தத்திற்கு அர்த்தம் - " அன்பு " என்று சொல்பவனுக்கு 
மட்டும் நம் காதல் கண்டிப்பாய் புரியும் அழகி ...!

L o v e y o u  s o m u c h d i !


11 comments:

  1. //அப்போது தான் நினைத்தேன் :
    பேசாமல் நமக்கு வயசு
    ஏழாகவோ , இல்லை எழுபதாகவோ
    இருந்திருக்கலாம் ! //

    நச்

    ReplyDelete
  2. முத்தத்தின் அர்த்தம் அன்பு தானே?

    ReplyDelete
  3. அன்பு அண்ணா @ ரொம்ப நன்றி ! அந்த வரிகள் மட்டும் தான் கவிதையே..!! நல்ல ரசனை .. என்னைப் போலவே ..

    ReplyDelete
  4. உயர்திரு.மா.அ. Naga'cholan அவர்களே... @ அண்ணா... என்ன சந்தேகம் ? ( தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை ) அன்பு மட்டுமே !

    ReplyDelete
  5. //நம் முத்தத்தின் ஈரத்தில் கசிகிற
    அன்பை மட்டும் உலகம் கவனித்திருக்கும் ! //

    :)

    ReplyDelete
  6. "அப்போது தான் நினைத்தேன் :
    பேசாமல் நமக்கு வயசு
    ஏழாகவோ , இல்லை எழுபதாகவோ
    இருந்திருக்கலாம் !"

    அழகிய வார்தைகளுக்கு என் வாழ்த்துகள் !!!
    Really awesome. Great thinking...

    ReplyDelete
  7. தனி காட்டு ராஜா @ // நம் முத்தத்தின் ஈரத்தில் கசிகிற அன்பை மட்டும் உலகம் கவனித்திருக்கும் ! //

    // .அன்பை கவனித்தமைக்கு நன்றிங்கனா !

    ReplyDelete
  8. Hema @ Thanx for ur wonderful support too!
    அழகிய வார்தைகளுக்கு என் நன்றி ! !!!

    ReplyDelete
  9. NILAA @ " :) " ..... உங்கள் சிரிப்பிற்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை வாழ்த்தாக பெறும் கவிதை இது இல்லை என்பது மட்டும் தெரிகிறது ! உணர்வுகளை வார்த்தைகளில் உயிர்க்கும் கவிதையை இனி இன்னும் சிறப்பாகச் சொல்லி உங்கள் வார்த்தைகளை பரிசாகப் பெற முயற்சிக்கிறேன் ..!! ஒருவார்த்தை சிரிப்பிற்கு நன்றி !

    ReplyDelete
  10. மன்னிக்கவும்... கவிதை மிகவும் அழகாய் இருக்கிறது... அந்த நினைப்பில் பின்னூட்டத்திற்கு வார்த்தைகள் அமையவில்லை... அதனால்தான் வெறும் சிரிப்பு... மேலும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நிலா @ உங்கள் கவனத்தைப் பெறுவதற்கும் சிரிப்பை பெறுவதற்குமே நான் கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் .... உங்கள் சிரிப்பிற்குள் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமற் போன என் இயலாமையை நான்தான் கொஞ்சம் செப்பணிட்டுக் கொள்ள வேண்டும் !
    சிலநேரம் சிரிப்பு சிதறடிக்கும் வார்த்தைகள் சொல்லும் அர்த்தத்தை ; வார்த்தைகள் சொல்லத் தவறிப் போகிறது ! அந்தத் தவறுதல்கள் எனக்குள்ளும் தவறாமல் நடந்தேறுகிறது ! Watever it is ... thanxalot for ur supporting words nila ...

    ReplyDelete