பிரபா ..
எனக்காக ஒரு கவிதை சொல்லேன்
என்று கேட்டாய் நீ!
திடீரென்று கேட்டதால்
திக்குமுக்காடிப் போனேன் நான்!
( சரி எதாச்சும் மொக்க போடுவோம்)..
சொல்கிறேன் கேள்!
ஒன்றும் ஒன்றும் இரண்டென்றேன்!
சரி என்றாய் !
இரண்டும் இரண்டும் நான்கென்றேன்!
சரிசரி என்றாய்!
நான்கும் நான்கும் எட்டுடி நாயே என்றேன்
செல்லமாக!
"பிச்சுபுடுவேன்" என்றாய் அதற்குமேல்
செல்லமாக!
எட்டும் எட்டும் எத்தனடி என்று கேட்டேன் !
பதினாருடா பண்ணி என்றாய் !
முடிந்து போனது கவிதை
முத்தம் கித்தம் தர்றது
என்று கேட்டேன்!!
முரட்டுப் பார்வையில்
சிரித்தே சிதறடித்தாய்!
எனக்கு
முன்னூறு முத்தம்
பெற்றதைப் போல் இருந்தது!
கவிதைகள் எழுதுவது நான் மட்டும் தான் என்றால்
கிறுக்குத்தனத்தில் உறைந்து கிடக்கும்
அத்தனை காதலையும்
உணரக்கூடியவள் நீ மட்டும் தான் அழகி .!
"கிறுக்குத்தனத்தில் உறைந்து கிடக்கும்
ReplyDeleteஅத்தனை காதலையும்
உணரக்கூடியவள் நீ மட்டும் தான் அழகி .!"
இந்த எதார்த்தமான நடை., மிகவும் அருமையாக உள்ளது... சில கருத்துக்கள்., கவிதைகளை படிக்கும் பொழுது "ச்சே, நமக்கு ஏன் இது தோணாம போச்சுன்னு" இருக்கும்.... அந்த மாதிரி ஒரு எண்ணத்தை உருவாக்கியது இக்கவிதை... மேலும் வளர வாழ்த்துக்களுடன்., ஆதரவாக இருக்கும் தீயஷக்தி...
உங்களைப் போன்ற ஒரு கவிஞ்ஞரிடம் இந்த வாழ்த்தினைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சதீஷ்.. புரிதலுக்கும் அன்பிற்கும் நன்றி..!! உங்களுக்கு எனது எண்ணற்ற நன்றிகள் ...
ReplyDelete//சே, நமக்கு ஏன் இது தோணாம போச்சுன்னு" இருக்கும் //
இது உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது எனக்கும் எழுகிற உணர்வு தான்! வாழ்த்துகளுக்கு நன்றி.!
Karur kavi keep it up
ReplyDeletemugam theriyaadha ANONYMOUS nanbarin anbirkku nandri ..!!
ReplyDeleteஅருமை அருமை சுப்பரா எழுதுங்க நண்பா
ReplyDeleteகவி "யாதவன் /// உங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா.. கண்டிப்பாக எழுதுகிறேன்!
ReplyDeleteநண்பா இப்படியெல்லாம் கூட கவிதை சொல்லலாமா... நானும் ட்ரை பண்றேன்...
ReplyDeleteவெறும்பய ஜெயந்த் அண்ணா // ஏதோ என்னால முடிஞ்சுது...!! என் அனுபவத்தையும் உண்மையையும் சொல்றேன்! அது எனக்கும் என்னை பிடிச்ச ஒரு சில பேருக்கும் கவிதையா தெரியுது ..!! அவ்ளோதான்'ங்கனா ! உங்க அளவுக்கு அறிவு புலமை நமக்கு இல்லிங்க ... சின்ன கவிஞன் தான் நானு.! ஏதோ ஊருக்குள்ள ஒன்னு ரெண்டு கவித சொல்லி பேர் வாங்கிகிற்றுக்கேன் .!!
ReplyDeleteTHANKS FOR UR COMMENT ANNA...
nalaruku prabha luv ur kavidhai always...
ReplyDelete