Saturday, July 17, 2010

அழகி - நினைவுகள் நடத்தும் டூரிங் டாக்கீஸ்

என் நினைவுகள் கட்டிய  டூரிங் டாக்கீஸில் தினமும்  இரவு நேரக் காட்சி நீ ! மூன்று மணிநேரக் காதல் முடிந்ததும் சுவர்க்கடிகார முள் காட்டும் நேரம் " ஒன்று "!  நம் பிரிவை தாமதமாய் அறிந்த விதியும் இப்போது நம் அன்பைப் பார்த்தால் அழுதுவிட்டுப் போகும்! அப்படிப்பட்ட உன் பிரிவிற்குப் பின் என் இரவெனும் பகலை எப்படிக் கடக்கிறேனென்று நீயே பார் அழகி!


மணி 1 : 20  :  நான் இன்னும் தூங்கவில்லை

மணி 1 : 21 :  அனுமதி இல்லாமல் என் நினைவுகளை திரும்ப வந்து ஆக்கிரமிக்கிறாய்

மணி  1 : 22 :  நீ முதன் முதலில் என் விரல்களை பிடித்த நினைவுகளை அசைபோட நினைவு படுத்துகிறாய்! 

மணி  1 : 23 :  என் கறுப்புக் கைகளை உன் வெண்ணிறக் கரங்கள் பிடிக்கையில் நம் கண்கள் பேசிக்  கொண்ட மொழி எனக்கு ஞாபகம் வருகிறது!

மணி  1 : 24 :  நான் சிரிக்கிறேன்!  


மணி  2 : 00 : நான் உன்னோடு இருக்கையில் உனக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு! என் தொடைகளை  கிள்ளி வைப்பாய்!உனக்குப் பிடிக்கும் என்று வலியை மறைக்க நினைத்தாலும் வழி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறேன்! உன்விரல்கள் என்மேல்பட நான் எவ்வளவு வரம் வாங்கியிருக்க வேண்டும்!

மணி  2 : 25 :  மறுபடியும் உன் நினைவுகள்

மணி  2 : 45 :  உன் தோள்களில் சாய்ந்துகொண்டு உன் உதடுகளை வருடிக்கொண்டிருந்தேன்! என் விரல்களால்!

மணி  3 : 00 :  விழிப்பதற்கு சத்தியமாய் எந்தத் தெம்பும் இல்லை! தூங்கச் சொல்லும் அப்பாவின் அதட்டல்களை மீறி இன்னமும் நான் விழித்து தான்  இருக்கிறேன்!

மணி  3 : 45 :  சாமி சத்தியமாய் இன்னும் தூங்கவில்லை!


மணி  4 : 00 :  நீ !  நீ !  நீ மட்டுமே!
 
மணி  5 : 00 : என்னோடு நீயில்லை என்று இப்போது தான் நினைவிற்கு வருகிறது! கூடவே அழுகையும்!

மணி  6 : 05 :  எப்படியோ என் நினைவுகளை விட்டு வெளியேறி விட்டாய்! ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயக்கொட்டகையில் வந்தமர்ந்து கொள்கிறாய்!

மணி  7 : 00 :  அப்பாடா ! எப்படியோ தூங்கிவிட்டேன்!
 
 மணி  8 : 20 :  கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன் !


4 comments:

  1. அருமை சகோதரா..
    நித்திரைக்கு முந்தைய நினைவுகள் சொன்ன விதம் மிகவும் அருமை...
    தொடருங்கள்...

    ReplyDelete
  2. நித்திரை எங்கண்ணா நடக்குது ?? அதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு ! உங்க அன்புக்கு நன்றி வெறும்பய னா !!

    ReplyDelete
  3. very nice friend.........

    ReplyDelete
  4. உனது தூங்காத இரவுகளின் வர்ணனை நன்கு புரிகின்றது,
    அதன் காரண கர்த்தா யார் என்று அறியேன்
    ஆயினும் அவள் உன்னை தவறவிட்ட துர்திஷ்டசாலி!!!
    காதலிப்பதை விட அதை அனுபவிப்பதில் தான் சுகம் அதிகம்!!!
    நெருப்பை கொண்டு சுட்டாலும் நினைவுகளை
    அழிக்க முடியாது அல்லவா

    ReplyDelete