கருப்பு நயாகராக்கள்
ஒளியில்லா ஒவ்வொரு
நடுநிசியிலும்
ஒரு கருப்பு
விழுந்து தொலைகிறேன் ..
தொலைத்தெடுக்கிற வாசத்தில்
சுவாசித்து ஜீவித்து
விடிந்ததும் கரை சேர்கிறேன்
|-கூந்தல்-|
விடிந்ததும் கரை சேர்கிறேன்
|-கூந்தல்-|
ரெட்டைப் புள்ளி ஓவியம்
சாமி தன் நெற்றியில்
தானே ஒரு ரெட்டைப் புள்ளி
ஓவியம் வரைகிறது !
ஒரு சிகப்புப் புள்ளியும் ஒரு
வெள்ளைப் புள்ளியும்
வைத்து முடித்ததும்
உலகினில் அதைப் போல்
அழகுண்டோ என்றாகிறது !
|-ஒப்பற்ற ஓவியம் -உன்
நெற்றிக் குங்குமமும்
குட்டித்திருநீறும் !-|
நித்திரையில் ரெண்டுவில்கள்
நித்திரையில் இருக்கும்
ரெண்டு வில்லும்
சப்த்தமில்லாமல்
பார்த்தெனைக் கொள்கிறது ...
அம்பே இல்லை
அங்கேயே எப்படியோ
வீழ்ந்துவிட்டேன் நான் !
வீழ்ந்துவிட்டேன் நான் !
|- நெற்றிப்புருவம் -|
மூன்று நிலவு
முன்னர் நடந்த
உரிமைப் போரில்
மூன்று நிலவு மட்டும்
உயிர்பிழைத்தது !
ஒன்று மேலேயே
தங்கிக் கொண்டது !
மற்றிரண்டும் உன் கண்களாய்
குடி பெயர்ந்துவிட்டது !
|- ரெண்டு கண்கள் -|
பூக்களுக்கான புன்னகைப் போட்டி
போட்டியில்
ரோஜாக்களும்
மல்லிகைப் பூக்களும்
எதிரெதிரே நின்று
சிரித்துவிட்டு மறந்தவாறு
அங்கேயே தூங்கிவிட்டது !
|- அதை இன்று உன்
கன்னங்கள் என்கிறார்கள் -|
.// நித்திரையில் இருக்கும்
ReplyDeleteரெண்டு வில்லும்
சப்த்தமில்லாமல்
பார்த்தெனைக் கொள்கிறது ...//
"கொல்கிறது" தானே?
காதல் ஸ்பெஷல்க்கு நான் கொஞ்சம் லேட் போல.
"கொல்கிறது" தானே? : முதலில் கொள்கிறது... கொண்டபின்னே கொஞ்சநேரத்தில் கொல்கிறது ! :) ஹீஹி..நீங்கள் சரிதான் !!
ReplyDelete