Monday, February 13, 2012

Fantastic 5 - February 14 Special

கருப்பு நயாகராக்கள்


ஒளியில்லா ஒவ்வொரு
நடுநிசியிலும்
ஒரு கருப்பு
விழுந்து தொலைகிறேன் ..
தொலைத்தெடுக்கிற வாசத்தில்
சுவாசித்து ஜீவித்து
விடிந்ததும் கரை சேர்கிறேன்


|-கூந்தல்-|


ரெட்டைப் புள்ளி ஓவியம்
  

சாமி தன் நெற்றியில்
தானே ஒரு ரெட்டைப் புள்ளி
ஓவியம் வரைகிறது !
ஒரு சிகப்புப் புள்ளியும் ஒரு
வெள்ளைப் புள்ளியும்
வைத்து முடித்ததும்
உலகினில் அதைப் போல்
அழகுண்டோ என்றாகிறது !
|-ஒப்பற்ற ஓவியம் -உன்
நெற்றிக் குங்குமமும்
குட்டித்திருநீறும் !-|


நித்திரையில் ரெண்டுவில்கள்


நித்திரையில் இருக்கும்
ரெண்டு வில்லும்
சப்த்தமில்லாமல்
பார்த்தெனைக் கொள்கிறது ...
அம்பே இல்லை
அங்கேயே எப்படியோ
வீழ்ந்துவிட்டேன் நான் !

|- நெற்றிப்புருவம் -|



மூன்று நிலவு


முதல் உலகப் போருக்கு
முன்னர் நடந்த
உரிமைப் போரில்
மூன்று நிலவு மட்டும்
உயிர்பிழைத்தது !
ஒன்று மேலேயே
தங்கிக் கொண்டது !
மற்றிரண்டும் உன் கண்களாய்
குடி பெயர்ந்துவிட்டது !

|- ரெண்டு கண்கள் -|


பூக்களுக்கான புன்னகைப் போட்டி


விண்வெளி நடத்திய
பூக்களுக்கான புன்னகைப்
போட்டியில்
ரோஜாக்களும்
மல்லிகைப் பூக்களும்
எதிரெதிரே நின்று
சிரித்துவிட்டு மறந்தவாறு 
அங்கேயே தூங்கிவிட்டது !


|- அதை இன்று உன்
கன்னங்கள் என்கிறார்கள் -|

2 comments:

  1. .// நித்திரையில் இருக்கும்
    ரெண்டு வில்லும்
    சப்த்தமில்லாமல்
    பார்த்தெனைக் கொள்கிறது ...//

    "கொல்கிறது" தானே?

    காதல் ஸ்பெஷல்க்கு நான் கொஞ்சம் லேட் போல.

    ReplyDelete
  2. "கொல்கிறது" தானே? : முதலில் கொள்கிறது... கொண்டபின்னே கொஞ்சநேரத்தில் கொல்கிறது ! :) ஹீஹி..நீங்கள் சரிதான் !!

    ReplyDelete