முழு உடற் பதித்துப் படுத்திருக்கிற
வேலை இது !
வழக்கம் போலவே இன்றும்
என்னை வெறித்துப்
பார்த்துக்கொண்டே இருக்கிறது
வெள்ளைநிலா!
இன்று என்ன கவிதை எழுதி
என்னை அசிங்கப் படுத்தப்போகிறாய்
என்பது போல் சிலநேரம்
சிவந்து போகிறது கோபத்தில்!
"ச்ச்சீ போ வெள்ளைவட்டமே!"என்று நானும் முகம் திருப்பிக்கொண்டேன்!
இடப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்த நிலவு ,
வலப்பக்கச் சுவற்றில்
என் அமைதி நிலையை
கருப்பு நிழலாய் வெளிச்சம்
போட்டுக் காட்டிக்கொண்டிருந்தது !
செத்தவன் எப்படி படுத்திருப்பானோ
அப்படி ஒரு தோற்றமாய் இருந்தது
அந்நிழல் ! நல்லது !
நாளை நான் உன் வார்த்தைகளால்
கொள்ளப்பட்டு சாகும் போது
ஒரு வேலை இப்படித்தான் படுத்திருப்பேனோ ?!!
No comments:
Post a Comment