பூக்களின் நடுவினில் பயணம் போகிறேன் !
உன் புன்னகை நிறம் மஞ்சலென உணர்கிறேன் !
இது காதல் !
* நாம் கட்டியணைத்துக் கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!
இரு வேறு தீச்சுடரின் கோபம் - காதல் !
ஒன்றும் இன்னொன்றும் எரிகிற வேலையில்
பளிச்சிடும் ஒளியில்
மிளிர்வது காதல் !
நீ ஏமாந்திருக்கும் வேலையில் உன்
பின்னின்று
உச்சந்தலையில்
முத்தமிடுவது காதல்!
* உன்னை சுவாசித்து
என்னை வெளியேற்றும்
செயல் காதல் !
* என்னைப் பிடிக்குமா என்று நீ
கேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !
* ஊருக்கு நாம் எப்படியோ ?
உனக்கு நான் அழகு !
எனக்கு நீ அழகோ அழகு !
இது காதல் !
கவிதை எழுதத் தெரியாதவன்
எழுதிக் கிழிக்கும்
அத்தனை காகிதங்களுகுள்ளும்
எத்தனையோ காதல்
செத்துக் கிடக்கிறது !
உண்மை எதுவோ .,
அதை சொல்ல முடியாத
வார்த்தைகளில் ஒளிந்திருப்பது
காதல் !
என்னைப் பிரிவதற்கு நீ போட்ட
அத்தனை நாடகங்களிலும்
கதாநாயகியை காமெடியன் வென்றான் !
அது நான் !
அது காதல் !
நான் உன் அளவிற்கு அழகில்லை
என்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது
காதலோ காதல் !
என் இரு கைகளையும்
இணைத்துப் பார்க்கிறேன் !
இதய வடிவம் சரியாய்
வர மறுக்கிறது !
"அடப்போடா" என்று
கவலைப்படுவது காதல்!
காமத்திற்கும் அன்பிற்கும் இடையில்
ஊர் வாயில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கும்
அத்தனையும் காதல் !
அது பாவம் !
உன்னைப் பெற்றவர்களிடம்:
என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு !
" பூமியில் எங்கும் இலாத அன்பை
நான் மட்டுமே உங்கள் மகளுக்குக்
கொடுக்க முடிந்தவன்" என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு !
* நிறைவான காதலில்
நிறைந்திருப்பது காதல் !
நிறைவான காமத்திலும்
கலந்திருப்பது காதலே !
* உணர்வுகள் உணர்ச்சிகளை
அன்பால் கொல்கிறது !
அது காதல் !
* கலைந்து கிடக்கும் மேகக்
கூட்டங்களில்
ஹார்ட்டின் சின்னங்களை
தேடுவது காதல் !
* ஒரு சராசரி ஆணாய்
உன் உடல் பிடிக்கும் !
ஏன் என்று கேள் !
என்னை சுமக்கிற
இதயத்தை சுமப்பது
உன் உடல் தானே ?!
அது காதல் !
என் கைகளில் உன் பெயரை எழுதிப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
உன் கைகளில் என் பெயரை
எழுதிக் கொண்டு சிரித்துக் கொண்டே
இருக்கிறாய் !
என் அன்பிற்குப் பெயர் காதல் !
உன் பைத்தியகாரத் தனத்திற்கும்
பெயர் காதலே!
* இருப்பது நினைவிலோ கனவிலோ ..
பேனா கிடைத்தால்
என்னை மறந்து உன் பெயரை
கிறுக்கி தள்ளுவது காதல் !
கறுப்புக் கலர் கைகளில்
ஒளிந்திருக்கும் அன்பையும் ஈரத்தையும்
வெள்ளைக் கலர் கைகள்
கண்டுபிடித்து ரசித்தால் !
அந்த விளையாட்டிற்கு
காதல் என்று பெயர் !
* நீ யாரென்றே தெரியாத போதிலும் கூட
உனக்காகநான் விடும்
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஓராயிரம் டன் அன்பு
ஒளிந்து கிடக்கும் !
அது காதல் !
* என் கால்களில் நீ
ஏறி நிற்க நினைப்பது காதல் !
இனிமையான சுமையைத் தாங்கி
நான் சிரித்துக் கொண்டிருப்பது
காதல் !
* நீ வேறு திசை நான் வேறு திசை
போன போதிலும்
நாம் நம் ஸ்வாசங்களுக்குள் சத்தம்போட்டு
முத்தமிட்டுக் கொள்வது காதல் !
உன் பெயரெழுதி பக்கத்தில்
என்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !
PENNED BY KARUR PRABHAKARAN
//நான் உன் அளவிற்கு அழகில்லை
ReplyDeleteஎன்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது
காதலோ காதல் !
//
தலைவா எப்புடி இப்புடி.
எல்லாமே அருமை.
நான்தான் 25 ஆவது நபர்.
ReplyDeleteஎன்ன ஒரு பொருத்தம்.
PRabu @ thanxlot prabhu ji... You mean a lot here ....
ReplyDeleteஅத்தனை வரிகளிலும் காதல் ரசம் ..அருமை அருமை பிரபாகரன்
ReplyDelete-கவிதை ராஜா
KAVITHAI RAJA @ thanxlot raja ....!!
ReplyDeleteஎன்னைப் பிடிக்குமா என்று நீ
ReplyDeleteகேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !
really touchy prabha....
//உன் பெயரெழுதி பக்கத்தில்
ReplyDeleteஎன்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !//
இதுதான் என்னுடைய அனுபவம் பிரபா.......
நான் சொல்லனும்னு நெனைக்கிற எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா எப்படி?
அத்தனையும் அழகு.. அத்தனையிலும் காதல் கொட்டி கிடக்கிறது.. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.. ரசித்து ருசித்தேன்.. வெகு நேரம் படங்களை காதலித்துக்கொண்டிருந்தேன். அருமை நண்பா...
ReplyDelete* உன்னை சுவாசித்து
ReplyDeleteஎன்னை வெளியேற்றும்
செயல் காதல் !
நாம் கட்டியணைத்துக் கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!
அனைத்துமே அருமையான காதல் கவிதைகள்! சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்!
amazing da prabha,noone can give such a lovely definition for luv. each and every word of ur's tell us the luv u have for girl.let ur luv live a long life da prabha.keep loving and keep writing.<3...........
ReplyDeleteSuperb!
ReplyDeleteஉங்கள் ஒவ்வொரு கவிதையும் அவ்வளவு அழகு ...
ReplyDeleteஎதை விடுவது எதை படிப்பதென்றே தெரியவில்லை ...
எல்லாவற்றிலும் அப்படி ஒரு காதல் வழிகிறது ... கொஞ்சம் நிஜங்களும் ...!!!