Monday, February 28, 2011

காதல் 25 - The Refined Definitions

பூக்களின் நடுவினில் பயணம் போகிறேன் !
உன் புன்னகை நிறம் மஞ்சலென உணர்கிறேன் !
இது காதல் !




* நாம் கட்டியணைத்துக்  கொள்ளும் போது,
இடையினில் நிறைந்திருக்கும்
அத்தனைக் காற்றிற்குள்ளும்
ஒளிந்திருப்பது காதல் !
ஒளித்து வைத்தது நாம்!



  இரு வேறு தீச்சுடரின் கோபம் - காதல் !
ஒன்றும் இன்னொன்றும் எரிகிற வேலையில்
பளிச்சிடும் ஒளியில்
மிளிர்வது காதல் !
 

நீ ஏமாந்திருக்கும் வேலையில் உன்
பின்னின்று
உச்சந்தலையில்
முத்தமிடுவது காதல்!


* உன்னை சுவாசித்து
என்னை வெளியேற்றும்
செயல் காதல் !


* என்னைப் பிடிக்குமா என்று நீ
கேள்வி கேட்பது காதல் ,
"பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
பதில் சொல்வது
காதலோ காதல் !


* ஊருக்கு நாம் எப்படியோ ?
உனக்கு நான் அழகு !
எனக்கு நீ அழகோ அழகு !
இது காதல் !


கவிதை எழுதத் தெரியாதவன்
எழுதிக் கிழிக்கும்
அத்தனை காகிதங்களுகுள்ளும்
எத்தனையோ காதல்
செத்துக் கிடக்கிறது !
உண்மை எதுவோ .,
அதை சொல்ல முடியாத
வார்த்தைகளில் ஒளிந்திருப்பது
காதல் !



என்னைப் பிரிவதற்கு நீ போட்ட
அத்தனை  நாடகங்களிலும்
கதாநாயகியை காமெடியன் வென்றான் !
அது நான் !
அது காதல் !


நான் உன் அளவிற்கு அழகில்லை
என்று புலம்புவது காதல் !
" சோ வாட்" என்று நீ
சூப்பராய் பதில் சொல்வது 
காதலோ காதல் !


என் இரு கைகளையும்
இணைத்துப் பார்க்கிறேன் !
இதய வடிவம் சரியாய்
வர மறுக்கிறது !
"அடப்போடா" என்று
கவலைப்படுவது காதல்!


 காமத்திற்கும் அன்பிற்கும் இடையில்
ஊர் வாயில் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கும்
அத்தனையும் காதல் !
அது பாவம் !


நீ எனக்கானவள் இல்லை
என்ற போதும்
உன்மீது கொண்ட அன்பில்
நிலைத்தே இருப்பது
நிசமான காதல் !


உன்னைப் பெற்றவர்களிடம்:
" பூமியில் எங்கும் இலாத அன்பை
நான் மட்டுமே உங்கள் மகளுக்குக்
கொடுக்க முடிந்தவன்"
என்று சொல்லியே தீருவேன்
இந்த இனிமையான தலைகனத்தில்
நிறைந்திருப்பது
அத்தனையும் காதல் !
காதலுக்குள் அன்பு ! 



* நிறைவான காதலில்
நிறைந்திருப்பது காதல் !
நிறைவான காமத்திலும்
கலந்திருப்பது காதலே !



* உணர்வுகள் உணர்ச்சிகளை
அன்பால் கொல்கிறது !
அது காதல் !


* கலைந்து கிடக்கும் மேகக்
கூட்டங்களில்
ஹார்ட்டின்  சின்னங்களை
தேடுவது காதல் !



* ஒரு சராசரி ஆணாய்
உன் உடல் பிடிக்கும் !
ஏன் என்று கேள் !
என்னை சுமக்கிற
இதயத்தை சுமப்பது
உன் உடல் தானே ?!
அது காதல் !


என் கைகளில் உன் பெயரை எழுதிப்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!
உன் கைகளில் என் பெயரை
எழுதிக் கொண்டு சிரித்துக் கொண்டே
இருக்கிறாய் !
என் அன்பிற்குப் பெயர் காதல் !
உன் பைத்தியகாரத் தனத்திற்கும்
பெயர் காதலே!



* இருப்பது நினைவிலோ கனவிலோ ..
பேனா கிடைத்தால்
என்னை மறந்து உன் பெயரை
கிறுக்கி தள்ளுவது காதல் !



கறுப்புக் கலர் கைகளில்
ஒளிந்திருக்கும் அன்பையும் ஈரத்தையும்
வெள்ளைக் கலர் கைகள்
கண்டுபிடித்து ரசித்தால் !
அந்த விளையாட்டிற்கு
காதல் என்று பெயர் !



* நீ யாரென்றே தெரியாத போதிலும் கூட
உனக்காகநான் விடும்
ஒரே ஒரு சொட்டுக் கண்ணீரில்
ஓராயிரம் டன் அன்பு
ஒளிந்து கிடக்கும் ! 
அது காதல் !


 


* என் கால்களில் நீ
ஏறி நிற்க நினைப்பது காதல் !
இனிமையான சுமையைத் தாங்கி
நான் சிரித்துக் கொண்டிருப்பது
காதல் !


 

* நீ வேறு திசை நான் வேறு திசை
போன போதிலும்
நாம் நம் ஸ்வாசங்களுக்குள் சத்தம்போட்டு
முத்தமிட்டுக் கொள்வது காதல் !



உன் பெயரெழுதி பக்கத்தில்
என்பெயர் எழுதுவது
காதல் !
அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
போட்டதற்குப் பெயர்
வாழ்க்கை !


PENNED BY KARUR PRABHAKARAN



12 comments:

  1. //நான் உன் அளவிற்கு அழகில்லை
    என்று புலம்புவது காதல் !
    " சோ வாட்" என்று நீ
    சூப்பராய் பதில் சொல்வது
    காதலோ காதல் !
    //

    தலைவா எப்புடி இப்புடி.

    எல்லாமே அருமை.

    ReplyDelete
  2. நான்தான் 25 ஆவது நபர்.
    என்ன ஒரு பொருத்தம்.

    ReplyDelete
  3. PRabu @ thanxlot prabhu ji... You mean a lot here ....

    ReplyDelete
  4. அத்தனை வரிகளிலும் காதல் ரசம் ..அருமை அருமை பிரபாகரன்

    -கவிதை ராஜா

    ReplyDelete
  5. KAVITHAI RAJA @ thanxlot raja ....!!

    ReplyDelete
  6. என்னைப் பிடிக்குமா என்று நீ
    கேள்வி கேட்பது காதல் ,
    "பிடிக்கவே பிடிக்காது" என்று நான்
    பதில் சொல்வது
    காதலோ காதல் !

    really touchy prabha....

    ReplyDelete
  7. //உன் பெயரெழுதி பக்கத்தில்
    என்பெயர் எழுதுவது
    காதல் !
    அதை அடித்துபோட்டுக் கிழித்துப்
    போட்டதற்குப் பெயர்
    வாழ்க்கை !//
    இதுதான் என்னுடைய அனுபவம் பிரபா.......
    நான் சொல்லனும்னு நெனைக்கிற எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா எப்படி?

    ReplyDelete
  8. அத்தனையும் அழகு.. அத்தனையிலும் காதல் கொட்டி கிடக்கிறது.. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.. ரசித்து ருசித்தேன்.. வெகு நேரம் படங்களை காதலித்துக்கொண்டிருந்தேன். அருமை நண்பா...

    ReplyDelete
  9. * உன்னை சுவாசித்து
    என்னை வெளியேற்றும்
    செயல் காதல் !

    நாம் கட்டியணைத்துக் கொள்ளும் போது,
    இடையினில் நிறைந்திருக்கும்
    அத்தனைக் காற்றிற்குள்ளும்
    ஒளிந்திருப்பது காதல் !
    ஒளித்து வைத்தது நாம்!


    அனைத்துமே அருமையான காதல் கவிதைகள்! சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  10. amazing da prabha,noone can give such a lovely definition for luv. each and every word of ur's tell us the luv u have for girl.let ur luv live a long life da prabha.keep loving and keep writing.<3...........

    ReplyDelete
  11. உங்கள் ஒவ்வொரு கவிதையும் அவ்வளவு அழகு ...

    எதை விடுவது எதை படிப்பதென்றே தெரியவில்லை ...

    எல்லாவற்றிலும் அப்படி ஒரு காதல் வழிகிறது ... கொஞ்சம் நிஜங்களும் ...!!!

    ReplyDelete