Sunday, September 27, 2009
சாய்ந்தகிலையின் சப்தமில்லாத உண்மை
"சாய்ந்து போன
மரக்கிளைகள் கூட
சப்தமின்றி ஓர்
உண்மை சொல்கிறது ,
வெறுத்தாலும்
கட்டியனைத்துகொண்டதே
மண் !!"
வெறுக்க தொடங்கும்
போதுதான் நம்மை
விரும்பி ஏற்கிறது-அன்பு !!
விட்டுகொடுக்கப்பட்ட உயிர்
இருவிதமானது என் வாழ்க்கை !
ஆம்,
ஒன்றில் உனக்காகக்
கொடுக்கிறேன் ..
மற்றொன்றில்
உன்னையே (விட்டு)
கொடுக்கிறேன் ..!!
அழகி.!!
Monday, September 7, 2009
உன் கண்ணீராய் பிறக்க ஆசை !
அடுத்த பிறவி என்று
ஒன்றிருந்தால் ,
அதில் உன் கண்ணீராய்
பிறக்க வேண்டும் !!
ஆம் ! ..... உன்
இதயத்தில் தோன்றி ,
கண்களில் பிறந்து ,
கன்னங்களில் உறைந்து,
இதழ்களுக்கிடையில்
இறந்துவிட வேண்டும் !!!
உலகிலேயே மிகப்பெரிய பாவி-நான்
உன்னை காதலிப்பது
பாவமெனில்,
நினைவில் வைத்துகொள் !
உலகம் அழியும் போது
என்னை விட அதிகமாய் இங்கு
பாவம் செய்தவர் எவரும்
இருக்கமாட்டார் !!!
மனங்கள் ஒருமித்ததை
மனிதம் வெறுத்துவிட்டது !!
மதக் கோட்பாட்டில்
ஒன்று சேர்ந்து ..!!
நம் எண்ணங்கள் எல்லாம்
கண்ணீரில் கப்பலானது !!
எல்லாம் இந்த எளவு சாதியால் ..!!
உனக்கான ஒருவன்
நானில்லை என்பது
எவ்வளவு உண்மையோ ?
அவ்வளவு உண்மை ..!!
உனக்காக
இல்லாதவர்க்குள்ளும்
நானில்லை என்பது ...!!!
அழ மறக்காத விழிகள் !!
நகர்கிற நொடிகளும் ,
நீள்கிற நாட்களும்,
உன்னை மறந்து விட்டதே ...?
ஏன் என் இமைகள் மட்டும்
இன்றும் உன் நினைவில்
அழ மறப்பதில்லை ..!!
எழுதப்படாத முடிவு !
தொடக்கத்திலேயே
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது!
முடிவு !
உனக்கொருநாள் - எனக்கொருநாள்
என்று....!!!
இருந்தும்
எத்தனை அதிசயம் ?
எழுதப்படாத முடிவாய்
இன்றும் தொடர்கிறதே ...!!
நம் காதல் !!
Sunday, September 6, 2009
விளையாட்டான நினைவுகள் !
நீ தூக்கி எறிந்த இதயத்தை
எப்படியோ தேடி எடுத்து
வைத்திருக்கிறேன் !!
உன்கைகளால்
மறுபடி ஒருமுறை
தொட்டுத்
தூக்கி ஏறி..!!
விளையாட்டாகவாவது உன்
நினைவுகள் என்னோடு இருந்து விட்டு போகட்டுமே...!!!
மின்னல் காதல்
தொலைவில் இருந்து
பார்க்கையில் அழகு !
தொட்டு பார்க்க நினைத்தால்
அழிவு!!
தூரத்து மின்னலை போல் காதல் !!
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூற்றுக்கள் :
- "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."
- 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'
- "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."
- "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
- "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."
- "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."
- "செய் அல்லது செத்துமடி."
Subscribe to:
Posts (Atom)