Monday, July 11, 2011

எது காதல் ?

அரங்கேற்றம் தொடங்கட்டும் !
ஓடிப்போய் நீ எங்கோ ஒளிந்துகொள் !
உனக்கெதிரில் நானெங்கோ
ஒளிந்து கொள்கிறேன் !

என்னைக் கண்டுபிடித்தால்
நீயும் சொல்லவேண்டாம் !
உன்னைக் கண்டுபிடித்தால்
நானும் சொல்லிடமாட்டேன் !

ஞாபகம் வைத்துக் கண்டுபிடித்து
விளையாடிக் கொண்டிருந்தது ஊர் !
நாமோ கண்டுபிடித்து மறந்து
விளையாட வேண்டிய நிலைமை !

பொல்லாத காதல் விளையாட்டில் 
பொழுது சாய்ந்தால் ஒரு விதி 
விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !
எவன்தான் செய்கிறான்
காதலர்களுக்கு இப்படி விதி ?

நேற்று, பொழுதுக்கும் என் பெயரை
காற்றில் வாசித்தவள் !
இன்று கற்பனையில் கூட வாசிக்காமல்
போன வழி எங்கே ?

எத்தனையோ அன்பினை படித்து முடித்து
எது காதலென்று மறந்து
போகும் நிலைக்குப் பெயர் தான்
ஒருவேளை காதலில் டாக்டர் பட்டமோ !?

5 comments:

  1. உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //பொல்லாத காதல் விளையாட்டில்
    பொழுது சாய்ந்தால் ஒரு விதி
    விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !
    எவன்தான் செய்கிறான்
    காதலர்களுக்கு இப்படி விதி ?//

    அது தானே ???
    கவிதை நல்ல இருக்கு பிரபா:)

    ReplyDelete
  3. ஓMG!!!!
    awesome lines!!!
    i can feel every word of your work!!!
    especially the lines
    பொல்லாத காதல் விளையாட்டில்
    பொழுது சாய்ந்தால் ஒரு விதி
    விழித்து எழுந்தால் ஒரு விதியா ? !

    ReplyDelete
  4. @ Venus Murugan : Thanx ji !
    @ harini nathan : THanxalot HARINI !
    @ Bale prabhu : Thanx prabhu!
    @ Manibharathi : Thank you so much for ur feel , and comment bharathi ! Welcm to my blog !

    ReplyDelete