Thursday, September 30, 2010

அன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்!


காற்றும் கனவும் 
களவாடிய-அப்  பொழுதினில்
தெரிந்தோ தெரியாமலோ 
இழந்திருக்கிறேன் .,
உனக்காக நான் எழுதிய 
எத்தனையோ கவிதைகளை !  

ன்பு ராஜ்யத்தின் 
அழகு நீதியரசி - நீ !
அகப்பட்டேன் உன்கவிஞன் 
கூண்டில் குற்றவாளியாய் !

மன்றாடி நின்றேன் ! 
மன்னிக்கக் கேட்டேன் !

ன்பொருட்டு எனை 
மன்னித்தும் 
அவள் பொருட்டு என்மேல் 
சினந்தும் எழுதினாள்
இரண்டு தீர்ப்பு !

தீர்ப்பு ஒன்று : 
( The World's most lovable judgement i ever heard)

அணைத்தாள்! ஆர்ப்பரித்தாள்! 
அருகில் வந்து சொன்னாள் ....

விடு பிரபா..

"எழுதத் தெரியாதவன் தான் 
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருப்பான் என்றாள் !"

அடேயப்பா !
எவ்வளவு உண்மையான தீர்ப்பு !!

தீர்ப்பு எண் இரண்டு : 
 ( The worlds Most beautiful Imprecation i ever heard of)

சினந்தும் சிவந்தும் போன 
தாமரையாள் 
அழுது முடித்தொறு
சாபம் சொன்னாள்!
 
" என்னை எழுதித் தொலைத்தவரே! 
இன்று முதல் நீங்கள் 
என்னைத் தவிர வேறெதையும் 
எழுதப் போவதில்லை !" என்றாள்

பெண் சாபம் பொல்லாத சாபம் தான் ! 

ஆயிரம் தமிழ் தெரிந்திருந்தும்!
அழகி!.....
உன்னை எழுதும் போதும் தான் 
வார்த்தைகள் கவிதைகள் ஆகிறது..!!

8 comments:

  1. ரெண்டுமே சூப்பர்

    ReplyDelete
  2. Very beautiful words..You are really talented !

    ReplyDelete
  3. //அன்பு ராஜ்யத்தின்
    அழகு நீதியரசி - நீ !
    அகப்பட்டேன் உன்கவிஞன்
    கூண்டில் குற்றவாளியாய் !
    //
    உண்மைலேயே கலக்கலா இருக்குது தம்பி ,
    எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ..?

    ReplyDelete
  4. //" என்னை எழுதித் தொலைத்தவரே!
    இன்று முதல் நீங்கள்
    என்னைத் தவிர வேறெதையும்
    எழுதப் போவதில்லை !" என்றாள்
    //

    வாய்ப்பே இல்லப்பா , அவ்வளவு அருமையா இருக்கு .
    கலக்கு ..!! உண்மையா சொன்னா ஒரு கவிதைலயே
    காதலையும் சொல்லிருக்க , எனக்கு பிடிச்ச மொக்கையும் போட்டிருக்க ..!!
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  5. Uma poems @ Uma .. THanx alot for ur words ... happy to recieve coment from a co blogger...

    ReplyDelete
  6. Wow என்னமா எழுதியிருகீங்க பிரபா.
    really Awesome as per ur love :)

    ReplyDelete
  7. Harini @ Is is so ? Nice of u to hear this much of wors from you realy ....!! thanxxx alottt harini ....!!

    ReplyDelete