Wednesday, September 1, 2010

அழகி எழுதிய முதற் கவிதை

 ஏற்றமும் இரக்கமும்
மாற்றமும் வேண்டாம்

கோடியும் லட்சமும்
கொஞ்சமும் வேண்டாம்

சதையில் வேண்டாம்
சிவப்போ வெளுப்போ

சாதியிலும் வேண்டாம்
உயர்வோ தாழ்வோ

ஆறடி நீயோ
அரைஒன்று குறையோ

எப்படி இந்நொடி
இருக்கிறாய் நீயோ

அப்படி வேண்டும்
அத்தனை பிறப்பும் !

அரண்மனைப் பிறப்போ,
அனாதைப் பிறப்போ

எங்கு எப்படி
என்னிலை நானோ

எல்லாம் இழப்பேன்
எல்லாம் இழப்பேன்

சோறு வேண்டாம்
சுகம் வேண்டாம்

சொந்த பந்தம்
ஒன்று வேண்டாம்

அன்பு போதும்
அது போதும்!

எத்தனை பிறப்போ 
அத்தனை பிறப்பும் - நீ

அழகி அழகி
என்-றழைப்பது போதும்

அன்புக்கிருக்கா  
அழகுக்கிருக்கா .,

உன்னுடன் இருப்பது
நொடியோ நிமிடமோ
வாரமோ வருடமோ

ஒருசுகம் போதும்- நீ 
ஒருவனே போதும்

உன் தோளில் 
வெண்ணிலவாய்
உனக்கொருத்தி
நான் போதும் ..!!

என்நெஞ்சில்
ஒன்றோடொன்றாய்
உறவாட ஒரு சேய்
நீ போதும் பிரபா ...!!

Thanx for your wonderful lines azhagi..!!

11 comments:

  1. எப்போவும் போல இப்பவும் நன்று, நன்று, நன்று.... காமம் கடந்த உன்னதமான தேடல் காதல், இருபக்கமும் பூப்பது அபூர்வம், பூத்ததில் சந்தோசம்., அது வாடியதில் சிறு வருத்தம் இந்த தீயவனுக்கு... அருமையாய் எழுதியுள்ளாள் உந்தன் அழகி.....

    ReplyDelete
  2. VERUMPAYA @ Thanks for your support and comment na...

    ReplyDelete
  3. ANBARASAN @ annaa... Thanks for being a part of my blog... Thanks for your comments.!

    ReplyDelete
  4. SAKTHI @ வாடியதா ?? நீங்க வேற ..!! அது எப்போ நடந்துச்சு ??? We are still united... and ever will be... Don wory ... MY HEARTFUL GRATITUDE FOR YOU WONDERFUL COMMENT sakthi ...

    ReplyDelete
  5. Hi Prabha! Very nice

    ReplyDelete
  6. பிரபா.....

    சொல்றதுக்கு வார்த்தையே இல்ல. இதுக்குமேல காதல யாராலும் சொல்லமுடியாது பிரபா.

    My Hearty Wishes...

    ReplyDelete
  7. சொல்றதுக்கு வார்த்தையே இல்லையா?? ராதை ... ரொம்ப நன்றி தோழி.... Thanx alot my dear friend!! Nice to hear from you ...

    ReplyDelete
  8. ஜீவமானிய காதல்
    கவிதையும் அழகு கவி வடித்த தேவதையை போலவே :)

    ReplyDelete