Tuesday, September 14, 2010

அகர அகராதியில் காதல்


ந்தமில்லா மெய்யுறைந்த 
அர்த்தமுள்ள ஆதியே 

ர் தந்த என் அத்தனை சுவாசமே, 
அழகி!

ன்றைக்கு இன்னொடியில் 
இதயத்தில் உதிரமாகத்தான் 
என்றைக்கோ எங்கிருந்தோ 
 வந்து சேர்ந்தாயோ வான்மதியே!

இருமதி சுமந்த
புருவத்தின் நிழற்குடைக்காரி !

டனோ ஏழையோ 
இந்தப் பித்தன் எப்படியோ ,
பிரபா ,
இன்பன் நீஎன்றால் 
ஈராட்டி நானென்றாய்! 

மையவள் தேவிஎன் 
அழகிநீ பார்வதி !

னைவந்து மேவியது
ஏ ழுசென்மப் புண்ணியமோ !?

கித்தேன் உனைதினமும்
ஒருநொடியும் விடவில்லை !

உயிர்மெய்யின் ஊசிவேரில்
ஒவ்வோரிடமும் நீதானே ..!!

கினன் எழுதிய எழுதாக்கிளவியே !
அன்பிற்கும் அழகிற்கும் 
அத்தனைக்கும் நீதாண்டி!!

சிநீ! என்னவள் நீ !
 எதைநான்சொல்வேனோ 
அதைநீயும் சொல்லிடுவாய்!

துநீ ! ஐஞ்ஞைநீ!
ஐந்தாம் வேதம் 
காணாத அழகி நீ!

ட்டினர் எல்லாம் 
போற்றிடும் பெண்மைநீ !
ஒப்பில்லா ஒருமதிநீ 
உண்மையான அன்பழகி!

தியுரைந்து வேண்டினாலும் 
ஒருநூறு உலகம் தேடினாலும் ,
ஒருவர்க்கும் எட்டாத அன்புசாமி - நீ!

எனக்குமட்டும் கிடைத்த
என்னழகு செல்லக் கிறுக்கி!

வியம் பேசாதோர்
யார்தான் எவர்தான் !
அழகு தேசத்து மகராணிநீ! 
அடியேன் கிறுக்கன் 
என்னைப்போய் காதலித்தாய்!

தாவது  என் அன்பு செய்தப் புண்ணியம் !
  
* * * * * * * 
    அகராதி :   
* * * * * * *
 ர் - காற்று ,

டன் - பணக்காரன் , செல்வந்தன்

இன்பன் - கணவன் ,
 
ஈராட்டி - மனைவி  ,

மேவியது -ஆசைப்பட்டது ,

ஊகி - எண்ணுதல் , நினைத்தல்

ஊசிவேர் - ஆணிவேர்  (rootlet),

கினன் - பிரம்மன்  (lord brahmma),

எழுதாக்கிளவி- வேதம், 

சி- கிளி (parrot),

ஐது, ஐஞ்ஞை- அழகி, (beauty),

வியம் - பொறாமை,

8 comments:

  1. I have no words to say. How you did it. very nice Prabha

    ReplyDelete
  2. Rajini @ Thanx alot for ur comment ! You mean a lot to me...

    ReplyDelete
  3. அருமைங்க..
    கீழ உள்ள அகராதி அதை விட நன்று.
    தொடருங்கள்.

    ReplyDelete
  4. அன்பு @ உங்கள் அன்பிற்கும் புரிதலுக்கும் ரொம்ப நன்றி .....

    ReplyDelete
  5. prabha sathiyama chance eh illa... engeyo poita prabha...

    ReplyDelete
  6. Indu @ happy to hear from you ... Thnx for ur support ...

    ReplyDelete
  7. //ஈடனோ ஏழையோ
    இந்தப் பித்தன் எப்படியோ ,
    பிரபா ,
    இன்பன் நீஎன்றால்
    ஈராட்டி நானென்றாய்!

    உமையவள் தேவிஎன்
    அழகிநீ பார்வதி !

    ஊகித்தேன் உனைதினமும்
    ஒருநொடியும் விடவில்லை !

    எகினன் எழுதிய எழுதாக்கிளவியே !
    அன்பிற்கும் அழகிற்கும்
    அத்தனைக்கும் நீதாண்டி!!

    ஒருவர்க்கும் எட்டாத அன்புசாமி - நீ!//

    ரசிக்க வைத்த வரிகள் பிரபா.. அருமையான கவிதை!!

    ReplyDelete
  8. ராதை @ தங்கள் கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி ..

    ReplyDelete