Thursday, November 17, 2011

காதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்


இருவர் மீதும் தவறுகளிருந்தும் , 
இருவர்க்கும் அது தெரிந்திரிந்தும், 

என் தவறுகளை நீ 
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான் 
என் நம்பிக்கையில் மறைப்பதும்! 
 படைத்த சாமிக்கே 
கிடைக்கப் பெறாத வரம்  ! 

சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப் 
புரிந்து அணைக்காத ஆண்களும் 
காதலுக்கென்றே எழுதப்பட்ட 
சாபங்களாய் இருக்கையில் ! 

நீ சினந்து சிவக்கிறாய் ! 
நான் புரிந்து அணைக்கிறேன் ! 
♥ நாம்தான் காதலுக்கென்றே 
படைக்கப் பட்ட உண்மையான 
வரங்கள் அழகி !


The kinda trust which binds us is 
a heavenly treasure !
 I jus love it ♥ 

14 comments:

  1. //சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப்
    புரிந்து அணைக்காத ஆண்களும்
    காதலுக்கென்றே எழுதப்பட்ட
    சாபங்களாய் இருக்கையில் ! //

    அருமையான வரிகள் நண்பரே..

    தொடருங்கள் தொடர்கிறேன்..

    பிண்ணனி பாடல் வரிகளும் கூட..

    ReplyDelete
  2. என்னவோ பண்ணிட்டு வாங்கிக் கட்டியிருக்க..அதைக் கவிதையா சொல்லிச் சமாளிக்கிற.. எங்களுக்குத் தெரியாது ;)))

    Jokes apart,
    /*என் தவறுகளை நீ
    உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
    உன் தவறுகளை நான்
    என் நம்பிக்கையில் மறைப்பதும்!
    ♥ படைத்த சாமிக்கே
    கிடைக்கப் பெறாத வரம் ♥ ! */

    ரொம்ப ரசித்தேன்..

    ReplyDelete
  3. nyc lines da prabha
    luv ur words always<3

    ReplyDelete
  4. @ prabhu krishna : THNX FA UR KIND SUPPORT AGAIN PRABHU ....
    @ SAMBATH KUMAR : THANKS ALOT FOR UR SUPPORT ... welcome to my blog sir ...!!
    @ SUBHA : Thank you so much fa ur admiration dear :)
    @ anonymous : I cud feel it ..!! Thanx fa ur suport ji !

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

    கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

    ReplyDelete
  6. காதலின் வரிகள் இனிமை, அருமை சகா. . .வாழ்த்துக்கள். . .

    ReplyDelete
  7. Prabhu krishna : Thanx for you ve given a wonderful intro to my blog in yours ... thanx for ur support and comments !

    ReplyDelete
  8. கவிதை நிழலில் இளைப்பாறினேன்

    ReplyDelete
  9. இன்றுதான் தங்கள் பதிவுப் பூங்காவினுள் நுழைந்தேன்
    கவிதைகள் அருமையிலும் அருமை
    100வது பின்தொடர்பவராக என்னை இணைத்துக் கொள்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. Awesome post.. One small obligation ! Could you increase the font size of your content?

    ReplyDelete
  11. @ KOVAI NERAM : THANX FOR BEING HERE !
    @ RAMANI SIR : THANXALOT FOR UR WONDERFUL ADMIRATION.... AND COMMENTS SIR ... THANX FOR BEING THE CENTURION

    ReplyDelete
  12. @ SRINATH : // Increasae the font size : YEAH ... will do it for sure... thanx for ur comment and support sri ..

    ReplyDelete
  13. karan unga kavithaigal yellam romba nalla irku
    MANAMARNTHA VAZHTHUKAL................\

    ReplyDelete