Monday, December 3, 2012

ஏவாளின் கவிதைகள்...உன் கோபம் 
என்னை கிச்சுகிச்சு 
மூட்டி சிரிக்க வைக்கிற 
ஆகச் சிறந்த
புன்னகைக்கருவி !உன் சினங்கள் சிதறும் 

பாவனைகளைப் 
பார்த்துவிட்டு 
நிமிர்ந்து நிலவைப் பார்த்தால் 
அதுவும் முகம் 
சிவந்து கிடக்கிறது !


எரிநட்சத்திரங்கள் :
-----------------------------
ஒரு நொடியில் 
நூறு நட்சத்திரங்களைப் 
பிடித்து என் நெஞ்சில் 
கோர்த்துவிட்டுப்போய்
எங்கோ தூரத்தில் 
அமர்ந்துகொண்டு 
வேடிக்கை பார்க்கிறாய்... 
அவை கவிதைகளாய் 
எரிந்து வீழ்வதை !


நான் யாரோ 
அது நான் அல்ல !
என் பிம்பம் 
எதுவோ 
என் உயிர் 
எதுவோ 
என் சுயம் 
எதுவோ 
அதில் எங்கும் 
ஊடுருவிக் கிடப்பது 

நீயும் உன் அன்பும் !
மற்றபடி
நான் யாரோ அது
நானல்ல !

என் 
இதயத்திலிருந்து 
தொண்டைக்குழியை 
எட்டிப் பிடித்து விரைந்து 
உதடுகளை முத்தமிட்டுத் 
தெறித்துக் கவிதையாய் வீழ்வதில் 
படுவேகம் காட்டும் 
வார்த்தைகள்.....
.
.
உன்னைப்பற்றியவை 
மட்டும் தான் !

எல்லாம் மாயை என்பது 
மெய்யாகவே 
இருந்துவிட்டுப் போகட்டும்..
எனக்கான நீ மட்டும் 
என்றும் நிஜமாக 
இருந்துவிடு..!
அவனியின் 
பேரதியசப் பூவே, அழகி...
நீ அன்பென்னும் 
உண்மையாய் 
என்னோடே இருந்திடு.. 
என்றென்றும் சிரித்திரு !


ஒரு பனிப்பூவின் 
புன்னகையில் 
பிரபஞ்சமே 
உறைந்து போகும் !
பிரபஞ்சம் 
என்பது நான்..
பூ நீ !

பிரபா

உன்னைக் 
காரணம்காட்டி
எழும் சிரிப்பும் 
கண்ணீரும் மட்டுமே 
மெய்யன்பின் 
ஆழத்தில்
வெகுவேகமாய் 
கொண்டு சேர்க்கிறது
என்னை !


பிரிவின் நாட்கள் 
நெருங்கும் போது 
பெருகிச் சிகரம் தொட்ட 
அன்பு 
அழுது அடம்பிடிக்கிறது...
தாயைப் பிரிந்திட்ட 
சேயைப்போல் !உனக்கு நான் 
எப்போதும் 
தவழும் குழந்தை.. 
நான் நடக்கத் 
தொடங்குகையில் 
என் 
தடுமாற்றத்தை
குறைகூறாமல்
முன்னேற்றமென
தட்டிக்கொடுப்பாய் !
மன்னிக்கிற கடவுள் நீ !
உன்னைப் போன்ற
துணையைப் பெற்ற
எந்தக் குழந்தையும்
அன்பால் எழுந்து
அருமையாய் வெற்றிநடை
போடும் !


இத்தனை மைல்கள் 
கடந்து நான் 
இங்கிருந்து 
பேசும் போதே 
இப்படிக் குதித்துக் 
களிக்கிறாய் !
இங்கேயே இருந்து
இந்நொடியே உன்
கரம்பற்றிக்
கொஞ்சிப் பேசினால்
என் செய்வாயோ
என்றேன் !
நீ என்
கைகளைப் பிடித்துக்
கொண்டால்
பின் என்னைக்
கையிலேயே
பிடிக்க முடியாது போ
என்றாய் !
கவிதை கவிதை ! :)


மொழியற்ற
சப்தங்களும்
உன் உதட்டிலிருந்து
தெறித்து
வீழ்கையில்
செம்மொழி 
அந்தஸ்துப் 
பெற்றுவிடும் 
அழகி !


ஏவாளின்
அச்சசல் குரல்
உன்னுடயதைப் 
போலத்தான் 
இருந்திருக்கும் !
அதைக் கேட்டு 
மயங்கிய ஆதாம்
நானாகத் தான் 
இருந்திருப்பேன் !நாளை 
என்பது
உன்னை
இன்னும் 
அழகாய்
அதிகமாய் 
நேசிக்கப்
பிறக்கும்
மற்றொரு 
நாளே !


எனக்கு நீ
பரிசளிக்கும்
பொருள்கள் 
எதுவாயிருப்பினும்
அதை வாங்கிக் 
கொள்ளத்
தயக்கம் தான் !
உன் பார்வையோ
உன் தீண்டலோ
உன் சிரிப்போ
உன் அணைப்போ
சொல்லாத எந்த
விஷயத்தை
பரிசுப் பொருள்கள்
சொல்லிவிடப்
போகிறது ?

# you , and your presence is a 
greatest gift I can Ever Get.அன்னியோன்யத்தின் 
அழகுக் கோவில் 
நம் இதயம் , 
அதை சுமக்கும் 
கடவுள் நாம் !உன் கண்மூடித் தனமான 
நம்பிக்கை தான் 
கடவுள் என்றால் 
கண்ணை மூடிக்கொண்டு 
என் கைகளைப் 
பிடித்துக்கொள்...
கடவுள் யாதென்று
குறிப்பால்
உணர்த்துகிறேன் !

பிரபாகரன் சேரவஞ்சி
மென்மையாய்
வந்து நிறைகிறாயோ
ஆர்ப்பாட்டமாய் 
ஆக்கிரமிக்கிறாயோ...
காற்றாய்
சூறாவளியாய்
எப்படி எனக்குள்
வந்தாலும் வா...
நீ காற்று !
நீ தீண்டி நான்
வாழ்ந்தால்த் தான்
உண்டு
வேறு வழியில்லை !உயிர்தரும்
பெருங்காற்று நீ !
உன்னை இயற்கை
எப்படி எழுதித்
தூக்கி எறிகிறதோ
அப்படியே பிடித்து
சுவாசித்துக்
கொள்பவன் நான் !

Whatever you are, No worries, 
no regrets, 
no justifications, 
I Jus love you. Period.


இனம் புரியா சோகம் 
என் உயிரை அசைத்துப் 
பார்க்கையில் எல்லாம் 
எழுந்தமர்ந்து 
உன்னை அழைத்து 
தொண்டை ஈரம் 
வற்றும் வரை 
உன் அன்பைப் 
பற்றிப் பேசுவேன் !
ஹ்ம்ம்.... என் 
உயிர்செய்யும்
உதிரமெல்லாம்
உன் பெயர் கொண்ட
ஜீவநதி அழகி ..
எனக்குள் நீ
இருக்கும்வரை
நான் இருப்பேன் !
Good Night....


நிலவே தானாய் 
விரும்பித் தன் 
கைப்படச் செய்த 
விரல்கள் உனக்கு !

பிரபா


உன்னோடு 
சேர்ந்திருப்பது 
பொம்மைக்கரடிதான் 
என்றாலும் 
விட்டு வைக்காமல்
அதன்மீதும்
கோபப்பட்டுத்
தொலைக்கிறேன் !
அத்தனையும்
காதல் தான்...
அதைத் தவிர
வேறென்ன ?


அடித்துக்கொண்டே
அணைத்துக் 
கொள்கிறோம் ...
எரிமலை
அணைக்கும் 
குளிர்மழை நாம் !


● 
நீ சொட்டும் அன்பால் 
நிறைந்து கிடக்கும் 
கடல் நான் !
நீ சொட்டுவதை 
நிறுத்தினால்
பொங்கியெழுந்து
பூமியை விழுங்குவேன் !
பின் பூமியின்
உடம்பிலெல்லாம்
உன் அன்பாய்
ஒட்டிக்கொள்ளும் !
நிலம் யாவும்
நீயும் நானுமாய்
இருப்போம் !
நீயும் நானுமாய்
மட்டும் !

பிரபாகரன் சேரவஞ்சிபூமிக்கான ஒட்டுமொத்த
நேசத்தையும் 
நீ கொடுத்து 
நெஞ்சில் 
வைத்திருக்கிறேன் !
என்றேனும் 
எவர்க்கேனும் 
கொடுக்க 
எத்தனித்தால் 
உன்னையும் என்னையும் 
பொய்யாக்கிப் 
பார்க்கிறது உலகம் !
நான் என்ன செய்ய ?
நீ கொடுத்ததை 
நீயே எடுத்துக்கொள்!
நானும் அன்பில்லா 
அற்ப மனிதனாகவே 
இருந்துவிட்டுப் 
போகிறேன் !
பிரபாகரன் சேரவஞ்சிஅன்றாடம் கோடி 
நட்சத்திரங்களை 
இதயத்தில் 
கோர்த்துவிட்ட 
காதல், 
ஓரிரவில் 
தீவைத்துப்
போனால் 
நட்சத்திரங்களோடு 
சேர்ந்து இதயமும்
எரிந்து போகிறது !


2 comments:

 1. உன்னைக்
  காரணம்காட்டி
  எழும் சிரிப்பும்
  கண்ணீரும் மட்டுமே
  மெய்யன்பின்
  ஆழத்தில்
  வெகுவேகமாய்
  கொண்டு சேர்க்கிறது
  என்னை !
  ////நீ என்
  கைகளைப் பிடித்துக்
  கொண்டால்
  பின் என்னைக்
  கையிலேயே
  பிடிக்க முடியாது போ////
  என்றாய் !
  கவிதை கவிதை ! :)

  நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் அழகு தான் !!!!!
  நீ எழுதுவதால் மட்டும் !!!
  உன் எழுத்துக்களுக்கு உரியவள் மிகவும் கொடுத்து வைத்தவள் தான் அவள் உன்னுடையவளாய் இருப்பதால் மட்டும் !!
  அவள் உலகம் மிஞ்சும் அழகி தான் உன் அன்பை பெற்றதால் மட்டுமே !!!!
  லவ் யு பிரபா <3

  ReplyDelete