Saturday, July 28, 2012

வளையல்கள் ஏன் உடைகிறது ?


*--------------------*---------------------*

என்னைப் பிரிந்து
உன் தலையில்
அடித்துக்கொண்டழுவாய் !

உன்னைப்
புரிந்துகொண்டுன்
வளையல்களும்
உடைந்து
அழும் !

உன்னையும்
உன் கைகளையும்
புரிந்துகொண்டு
எனக்குமுந்தி
வருவான்
வளையல்காரன் !

அவனுக்குப் பின்
வருவேன் நானும் !

ஆரம்பிக்கும் கச்சேரி!
ஆசையாய்ப்
பார்த்துவிட்டு
"நீபோப்பா"
வேண்டா'மென்றவனைத்
துரத்தி என்னைப்
பார்த்தால்...

அரைடஜன்
வாங்கிக்கொடென்று
அர்த்தம் !

"இங்க வாப்பா" என்று
இருடஜன்
வாங்கித் கொடுப்பேன்

பின்,
"வேண்டாம் என்று
யாரோ சொன்னார்கள்"?
என்பேன் !

"போடா" என்றெடுத்துக்
கைகளில்
அணிந்துகொள்வாய் !

நினைத்துக் கொள்வேன் !
நானிப்படி..

உடைந்துபோகிற ஒவ்வொரு
வளையல்களும்
நம்மை இன்னும்
நெருக்கமாய்
ஒட்டவைப்பதற்காகவே
படைக்கப்பட்டவை !
அழகி
 

6 comments:

  1. அழகான வரிகள். அருமையாக முடித்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. எப்பவும் போல இப்பவும் ரொம்ப புடிச்சுருக்கு பிரபா! நல்லாருக்கு கொடுத்து வாய்த்த வளையல்கள்
    ~திவ்யா

    ReplyDelete
    Replies
    1. Thozhi Dhivya :) Vanakamnga :) nandreeee :)

      Delete
  3. அருமையான கவிதை. #உடைந்துபோகிற ஒவ்வொரு
    வளையல்களும்
    நம்மை இன்னும்
    நெருக்கமாய்
    ஒட்டவைப்பதற்காகவே
    படைக்கப்பட்டவை !
    அழகி#
    அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?
    http://newsigaram.blogspot.com/2012/07/innumsolven-01.html

    ReplyDelete
    Replies
    1. Thanks Sigaram barathi .. i will see to it ..

      Delete