Saturday, September 29, 2012

எப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்

01


மன்னித்துவிடு
என நீ கேட்கும்
போது
மரணித்து
விடலாம்
போலிருக்கிறது !
நான்
கொண்டிருந்த
கோபத்தை
எல்லாம்
கொன்றிடலாம்
போலிருக்கிறது !
When you are sorry,
I almost feel like Killing my anger out of my heart.
02


எங்கிருந்தோ 
வந்துஎன் 
செந்நிறக் 
குருதியில் 
திடுமென 
நீ ஆர்ப்பரிக்கும் போது 
தலைக்கும்
காலுக்குமிடையில்
தறிகெட்டு
ஓடுகிறது
காதல் வெள்ளம் !
Gushing stream of You, fills my heart everywhere.
Then, Its like a "PLETHORA of YOU" fills me in.
03


அன்பின்
உச்சி கோபுரம் 
சாமி என்றால்
நீ என் சாமி !
இல்லை 
விஞ்ஞானிகள்
நாளை ஏதேனும்
புதுசாய்க்
கண்டறிந்தால்
அதுவும்
எனக்கு நீ !
அதற்கு
மேலும் நீயே !
The Greatest findings of science cum spiritualism
is 'YOU' for me
04


ஆங்கே 
கரையோரத்தில் 
அமைதியாய்
கிடக்கிறேன் !
அடித்திழுத்துப் 
போகிறாய் 
அன்பின் 
பெருவெள்ளம் நீ !
கைகட்டி 
வாய்பொத்திக்
கூடவே
வருகிறேன் !
அது வரம் !
அதற்குமேல்
எனக்கென்ன
வேண்டும்?
அது வரம்
அது போதும் !
# To the world's most 
ravishing pretty gurl - Azhagi ! ♥

05


எந்தத் 
திருவிழாவும்
அத்தனை 
விமரிசையாய் 
கொண்டாடப்
படுவதில்லை...
என்னை நீயும்
உன்னை நானும் 
கொண்டாடுவதைப்
போல !
You are the Soul-filled Colorful Festival
that I have ever celeberated ... ♥

06

என்மேல்
கோபப்படு ;
சுடுசொல்லாய் 
வீசி ஏறி ;
பிரிந்து போ ; 
பேசாமலிரு ; 
அழவை ; 
ஏங்கவை ; 
இதில் 
எதையாவது
செய்து தொலை !
உன்னோடு
இருந்து இருந்து
எனக்கு
இதெல்லாம்
என்னவென்று
மறந்துகொண்டே
இருக்கிறது ! :)
You fill my heart so nicely,
that I have forgotten the meaning
of what is so called 'WORRIES'
07


தோன்றி
மறையும் 
மாய
நாடகத்தில்,
அன்பென்னும்
கதாப்'பாத்திரத்தில், 
நாம் பொங்கி 
வழியவேண்டும் !
Here goes, the Chronicle of the Thamizh Letters :
அ - ஆதி ;
ன் - அந்தம் ;
ப் : பாத்திர வடிவத்தை கொண்டுள்ள - 'ப்' - நம் உடல் ,
உ - உயிர் !
அ + ன் + பு !
That's Wat, the Entire life Deals with ... ! Love ! ♥

08


ஆழிவெள்ளப்
பாசக்காரி 

அன்பின் 
பிள்ளையார் சுழி 

அழவைக்கும்
குட்டிப் பிசாசு 

கோபப்பட
வைக்கும்
பைத்தியக்காரி

கொஞ்சிக்
கிறங்கடிக்கும்
வெள்ளிவண்ண
தேவதை

பேசவைக்கும்
மூச்சுக் காற்று

பேசாமல்
கொல்லும்
மௌனக்கள்ளி

சிரித்துக் கதை
பேசும் நடமாடும்
நிலவு !

சில்லெனக்
குளிர்கிற
வெள்ளை
மழைத்துளி !

"ம்" எனும்
நொடியில்
ஜனிக்கும்
கவிதை !

இப்போதைக்கு
இவ்வளவு தான்..
எல்லாம் நீ தான் !
நீதான் எல்லாம் !
Pretty chirpy "Hmm" Sound of you
is almost like a heaven to me 
09


ஏதும் பேசாமல்
என் தோள் சாய்ந்துகிடக்கிறாய்...
இதற்காக மட்டும்
தனியாக ஒரு
பிறப்பெடுக்க 
வேண்டும்
போலிருக்கிறது.
அழகி!

You are lying on my shoulders
Should I find any other valid reason to dwell in ?
10


எதையோ 
பேசிக்கொண்டிருக்கும்
போது
இடையில்
குறுக்கிட்டு
நான் சொல்லும்
லவ்யூ'வை
நீ கண்டுகொள்ளாததைப்
போல் கடந்து 
செல்வது
என்னை
இன்னொரு தடவை
சொல்ல வைக்கும்
யுக்திகளில்
ஒன்றாகத் தான்
இருக்கும்
When I Interrupt you between 
the unstoppable chat , 
and Kiss you a love you. 
You will act like you didn't notice it.
I know , its the trick to get one 
more love you from ME ! <3 span="span">
11


ஆயிரம்
கவிதைகள்
எழுத
நேரம் கிடைத்தும் 
ஏதும் செய்யாமல் 
உன்னைப் 
பார்த்துக்கொண்டு
மட்டும் இருந்தேன் !
நெஞ்செல்லாம்
கவிதையாய்
நிரம்பி
வழிந்தோட
வழியில்லாமல்
மூச்சு முட்டிப்
போனது !
When I get time to write even Thousand poems.
I choose not to do it. and I simply Stare at you.
 accumulated poems overflows the heart.
12


நீ கொட்டும் 
'ம்ம்' எல்லாம்
என் செவிவழி 
நுழைந்து
இதயத்தில் 
தங்கிக்கொண்டு
இரவானால்
நட்சத்திரங்களாகி
மின்னிச்சிரிக்கிறது!
நானும் 
'ம்ம் ம்ம்'
சிரி சிரியென்று
ரசித்துக்கிடப்பேன்!
# awesome poems ur 'hmm's are!
ardent fan of those , I am!

13

பூமியில்
எல்லாம்
நாடகமென்று
தோன்றும் போது...
நீயும் உன் 
அன்பும்
நிஜமென்று
கொஞ்சநேரம்
சொல்லிக்கொண்டிருப்பேன்! 
நெஞ்சு கொஞ்சம்
நிசப்தத்தில்
இளைப்பாறும்!

You are the top most Virtue and Truth that Exists in the world
Which I surrender when I have no hope Left for living.
14


இயற்கை 
எழுதிவைத்த 
அழிக்கமுடியாத
விதி
காதல் !
நரம்புகளில்
குருதியில்
திசுக்களில்
எங்கே நீ 
இல்லை என
மறுத்தாலும்
அங்கெல்லாம்
வாழ்கிறது
காதல் !
Into the nerves, Deep inside the tissues
Lives the LOVE <3 p="p">
15


ஹ்ம்ம் ! 
நிலா
இன்று 
அழகாகத் 
தான்
இருக்கிறது
நீ
என்னை
பார்க்கச்
சொன்னதும் !

Moon Looks pretty more luminous,
When YOU asks me to see it.
16

Chemistry of Love : 

காதல் வேதியல் : 
டெஸ்ட்டோஸ்டீரோ'னும் 
ஈஸ்ட்ரோஜென்'னும் 
சேர்ந்து 
உன்னை 
என் கண்களுக்கு 
அழகு தேவதையாக்கிக்
காட்டினார்கள் ...
ரசித்தேன் !

அட்ரினலின்,
டோபமைன்,
செரட்டோனின்,
மூவரும் சேர்ந்து
எனக்குள்
பிரியத்தை
விதைத்தார்கள்...
பிரிய முடியாமல்
காதலிக்கத்
துவங்கினேன்!

ஆக்சிடோசினும்
வேசோபிரஸ்சினும்
நம் மூளைக்குள்
முத்தமிட்டு
கொள்ளட்டுமென்று
காத்திருக்கிறேன்...

ஊடல் கூடல்
கடந்து
காதல் வேதிப்
பொருள்கள்
நம்மை காலத்திற்கும்
கூடவே
வைத்திருக்கட்டும் ...
நாம் வாழ்க !
நம் காதல் வாழ்க !
Read about the above Harmon-es to 
get the intense meaning of the poem.
17


என்
வரம்
எதுவென்று
எங்கேயோ
தேடத் தேட
ஒரு குரல்
கேட்டுத்
திரும்பி
நின்றால்
நீ நான் நானென்று
சிரித்துக்
கொண்டிருக்கிறாய் !
♪ அட நீதானா
அந்தக் குயில் ♪

In the search of my Boon, an Instant voice hit me
with its chiseled coolness and when I turn to it
I See YOU ! Wao ! <3 it="it" love="love" span="span">
18


உன் தேவை 
நானாக 
இருக்கவேண்டும்
என்பதைத் 
தவிர 
என்தேவை 
வேறேதும் 
இல்லை !
Sort of world's sweetest selfishness !

19

மன்னித்துவிடு
என எத்தனையோ 
முறை
கேட்பதற்கு 
பதிலாக 
என் பெயர் 
சொல்லி 
ஒரு முறை 
அழை ..
இன்னும்
கொஞ்சம்
நேசிப்பேன்...
கொஞ்சம்
நிறையவே
நேசிப்பேன் !
Instead of being sorry, Call me by my name.
I will be chilled out then.
Its the cheapest trick ,
 by which my heart can be bought for.
20



எது
பேருண்மை 
என 
மதிப்பிட்டால் 
நூற்றுக்கு
தொண்ணூறு 
பெரும் அன்பு !
எதுவுமே 
நூறில்லை
எனினும்
அன்பே -
உண்மையின்
உயர்நிலை !
Top point of world
and profoundness 
sticked with it is
what we call
as 
.L.O.V.E.

Friday, September 7, 2012

ஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்


நான் யார்
எனக்
கேட்பவர்கள்
எல்லோரும்,
நீ யார் என
முதலில்
தெரிந்து
கொள்கிறார்கள்
அழகி !

# You are the Benevolent Source, 
from where My own Identity Starts


ஒருநிலையாய்
என்னை
வாழவைக்கும்
தத்துவங்கள்
எல்லாம்
உன் அன்பிலிருந்து
நான் பொறுக்கி
எடுத்து வைத்துக்
கொண்டவை !
அழகி
நான் அலைபேசியில்
பாடிக்கொண்டிருந்த 
ராத்திரியை
ஒருவழியாக
உன்வீட்டு
நாய் கர்ஜித்து
முடித்துவைத்துவிட்டது!
 


தூங்கப் போகும் முன்
ஒரு கவிதையும்
நூறு முத்தமும்
வேண்டுமென்கிறாய்...
ஒரே கவிதையில்
நூறு முத்தம்
கொடுத்தனுப்புகிறேன் !
வேறென்ன செய்ய ?

Distant factor dominates ME, and all I can do is.. 
Just write out few lines and send some how-much-I-Love-you stuffs 
to you and feel happy inside. . . 
Missing you !

 
உன் ஒவ்வொரு
குட் நைட்
ஸ்வீட் ட்ரீம்ஸ்
டேக் கேரும்,
ஒரு பெரிய
பிரிவுக்கு
தினமும் ராத்திரி
ஒத்திகை
பார்ப்பதைப்
போலிருக்கிறது

I Could not defy your non-presence with me , 
even for a single Stupid Night !
 
சப்தமிட்டு
சண்டை
பிடிக்கிறாய்
முத்தமிட்டு
நானதை
முடித்து
வைக்கிறேன் !
 
நீயும்
தமிழும்
முகம்பார்த்துப்
பேசிக் கொள்கையில்...
கேட்டுக்கொண்டே
குனிந்துகொண்டு
நான்
எதை எழுதினாலும்
அது கவிதை !
 
ஒளிரும்
மெழுகுவர்த்தியின்
ஒளியில்
உன் கண்களும்
என் கண்களும்
காற்றில்
முத்தமிடுவதைப்
பார்த்த
நட்சத்திரங்கள்...
நிலவை
மேகங்களுக்குள்
கூட்டிச்சென்று
நூறுமுத்தம்
கொடுத்துத்
திருப்பி
அனுப்புகிறது !
பாரேன்...
நம்மைப்
பார்த்துத் தான்
நட்சத்திரங்களும்
காதலித்துக்
கொண்டிருக்கிறது !
அழகி

நூறு நிமிடம்
நீ என்னை
நினைத்திருந்தால்
அதை ஒரு
நிமிடத்தில் எழுதி
ஒரே ஒரு கவிதை
உன்னிடம் தருகிறேன் ...
அதைப் படித்துவிட்டு
நாள் முழுதும்

என்னையே
நினைத்துக்
கொண்டிருக்கிறாய் ...
இப்படியே நீ செய்து
கொண்டிருந்தால்
வருடம் முழுதும்
நான் கவிதை
மட்டும் தான்
எழுத வேண்டி
இருக்கும் !
காதல் மட்டும் தான்
செய்ய வேண்டி
இருக்கும் !
பார்த்துக்கொள்

நீ கவிதை
கேட்டால்...
நிலவிற்கு
மேலேறி
நெடுநேரம்
யோசித்துவிட்டு
அங்கிருந்து
உன்னைக்
கைகாட்டுகிறேன் !!
நிழலின்
பிம்பங்களுக்குள்
ஒளிந்திருக்கிற
உன்னை,
அவ்வளவு
சுலபமாய்
யாரும்
திருடிவிட
முடியாது...

நிஜத்தின் உச்சமாய்
அதற்குள்
ஒளிந்திருக்கும்
என்னைத் தவிர !

--பிரபாகரன் சேரவஞ்சி
 
ரசிக்கத்
தெரியாதவள்
கண்ணில்
என் வார்த்தைகள்
பட்டால் என்ன
படாவிட்டால் என்ன?
நீ படி
நீ சிரி
நீ ரசி

நீ காதலி
அது போதும் !

 ♥
மாதத்தின்
ரெண்டாம்
பௌர்ணமி
இன்று !
இதுவே
அதிசயமாம்...
வருடமெல்லாம்
ஒளிரும்
பௌர்ணமி நீ !
என் நெஞ்செங்கும்
நிறைந்துகிடக்கும்
வெண்ணிறப்
பேரதிசயம் !!

ஊருலகம்
என்மேல்
கண்டுபிடிக்கும்
குறைகள்
எல்லாம்
உனக்கு மட்டும்
அழகாய்த்
தெரிவதில்
வாழ்கிறது
நம் காதல் !
சிலநேரம்
இருள்சூழ்
மௌனக்
கதவுகளுக்குள்
அடைந்து
கிடப்பேன் !
அப்போதெல்லாம்
என்னைத்
தட்டித் திறக்க
ஒற்றை மணி
ஓசை போலிருக்கும்..
உன் குரலுக்கு
மட்டும் தான்
அனுமதி உண்டு !

கைப்பிடித்துத்
தோள்களுரசி
கொஞ்சமும்
விலகாமல்
கொஞ்சிக்
கொஞ்சிக்
கூடவே வருகிறாய் ..
ஏ...நிழலுக்குள்
படர்ந்திருக்கும்

நிஜமே..
நித்தியத்
தனிமையே ,
நீ என்னை
விட்டு
விலகுவதுமில்லை,
என்னைக்
கைவிடுவதுமில்லை !

# In Love with Loneliness !

நிமிடத்திற்கு
நூறு கவிதை
அளக்கும் அளவு
என்னிடம்
காதல் இல்லை..
ஆனால்
நொடிக்குக் கோடி
முறையாவது
உன்னை

நினைக்கும்
காதல் இருக்கிறது
என்னிடம்..
அது மட்டும்
சத்தியம் !

மாதா
பிதா
குரு
நீ !
 

அவனிக்குள்
என் அவனி -
அவள் நீ !
அன்பையும்
அழகையும்
கொட்டி
செய்த
அற்புத
சண்பணி
நீ !

நீ பூ வைக்கிற
நாளில் மட்டும்
செத்துப் போய்,
பூவாய்ப் பிறந்து,
ஒருநாள் உன்
சிகைக் கோவிலில்
வசித்துவிட்டு,
வாடிப் போய்
வீழ்ந்தெழுந்து,

மனிதனாய்ப்
பிறந்து மறுபடி
உன்முன் நிற்க
ஆசை !

# Then You ll Ask...ஆமா நேத்து நீ எங்க போன ?

நீ சிரிக்கிறாய்...
நீ வாழவைக்கிறாயா ?
சாகவைக்கிறாயா ?
எதுவோ என்னவோ
It Enthralls me 
 ♥ !
 

Pic Courtesy : Sowmya Photography.Com

நீயாய்
மாறின
உயிரணுக்களை
எல்லாம்
நிலவுக்கு
அனுப்பி
குளிரூட்டினாலோ
உன் தாய் ?

 
வேறொருவரின்
நூறு வண்ணம்
வேண்டாம்
நீ தொட்டு
நான்கு
வர்ணம் பூசு,
காலம் கடந்து
என் காதல்
மின்னும் !

Penned By :

பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha)

 

Thursday, August 16, 2012

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்



நீதான்
என் வரமென்றும்
இல்லை இல்லை
நான்தான்
உன் வரமென்றும்
இருவரும்
செல்லமாய்
மாறி மாறி
சண்டையிட்டுக் 
கொள்ளும்
தருணங்கள்..
வரங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
குட்டி வரம் ! 



● 
நாம்
பகிர்ந்துகொண்ட
முத்தங்களை
யார் ஞாபகப்
படுத்தினாலும்
அதுவும்
கொண்டாடப்
படவேண்டிய
நிமிடங்கள்தான் !
 
கவிதையோ,
அழகோ,
எதையும் நாம்
புதிதாய் 
படைக்கப் 
படவேண்டிய
அவசியமில்லை
அது
இயற்கைக்குள்ளேயே
ஒளிந்திருக்கிறது !
நமக்கு
ரசிக்கத் தெரிந்தால்
மட்டும் போதும் 

 



 
மண்ணை
முத்தமிட்டுத்
திரும்பும் வழியில்
என்மீது படும்
சாரல்கள்
அனைத்திலும்
உன் வாசமே
கலந்திருக்கிறது!
.
மீதமிருக்கும்
மழையிலும்
நீதான்
நிறைந்திருப்பாயோ ?
.
ஒரு நாள்
எப்படியாவது
ஓட்டமாய்
ஓடிப்போய்
எல்லா மழையிலும்
நனைய வேண்டும்
நனைந்தே
ஆக வேண்டும் !
● 


மழைக்கவிதை
அவ்வளவு தானா?
என்கிறாய்...
மழைவிட்டாலும்
தூவானம்
விடாததைப் போல்
யார் விட்டாலும்
என்னை நீ
விடுவதே இல்லை!!


நேயர்
விருப்பமாய்
நீ ஒரு கவிதை
கேட்கையில்
மட்டும்
நான் ஒருநிமிடம்
கம்பனையும்
கண்ணதாசனையும்
விடப் பெருங்கவியாக
உணர்கிறேன் !



என்றென்றும் என்
தமிழில் கொட்டிக்
கிடக்கிற
எல்லா வாசமும்
நீதான் !
அன்று சொன்னேனே..
அதேதான் இன்றும் !


செவ்வாய்
கிரகத்திற்கு
மட்டும் ரெண்டு
நிலவு..
அதென்ன பூமிக்கு
மட்டும் ஒன்று ?
என கடவுளைப்
பார்த்து கேள்வி
கேட்பவர்களுக்கு
என்ன தெரியும் ?
இன்னொரு
நிலவைத்தான்
நான் திருடிக்
கொணர்ந்து
விட்டேனே....
என் வீட்டிற்கு
வேண்டுமென்று !



உன் தோள்
சாய்ந்து
கிடப்பதே
அன்பின்
பெருவரம்தான் ! 



உன் இதழ்களைப்
பிய்த்து என்னைச்
சுற்றிலும்
நிரப்பிக் கொள்வேன்,
பின் உன்
மகரந்தங்களின்
மடியில் கிடந்தது
தூங்குவதைப்போல்
நடிப்பேன்...
பின் தூங்கிவிடுவேன்...
அதிகாலை ஆறு
மணிக்கெல்லாம்...!


நீ தூங்கும்
அழகைப் பார்க்க
இரவில் மட்டும்
வந்து போகும்
நிலவு
ஒரு இனிய
திருட்டுக்
களவாணி !
  

தனிமை
என்பது
எனக்கும்
காற்றுக்கும்
நடக்கும்
பெரும்யுத்தம் !
உள்ளே இழுக்கிற 
ஒவ்வொரு காற்றிலும்
உன்னை இழுத்துக்

கொள்வேன்!
இமைப்பதற்குள்
இன்னொருபுறம்
காற்றுன்னை
இழுத்துச் செல்லும் !
தொடர்கிற
யுத்தத்தில்
தோற்ப்பேனோ
ஜெயிப்பேனோ
இருக்கிற
நிமிஷத்தில்
எல்லா மூச்சும் 
நீயாய் இருக்கிறேன்..
அது போதும் !
● 
பூ...க்...க...ள்
என்று சொல்லி
முடிப்பதற்குள்
முதல் ஆளாக
வந்து
என் நினைவில்
ஒட்டிக்கொள்பவள்
நீ


எந்த ரோஜாவுக்குத் தான் 

உன் கூந்தலில் 
உறைந்து மயங்க 
ஆசையில்லை 
சொல் ?
பூக்களின் 
குலதெய்வம் நீ ! 
அவைகளின் 
கோயில் உன் 
கூந்தல் !


Photo Copyrights : Hemalatha Gopalakrishnan


எல்லா குழந்தைகளுக்குள்ளும்
உன் சிரிப்பை புகுத்தி
ஒளித்து வைத்த இறைவன்
ஆகச் சிறந்த படைப்பாளி !
அதை எப்படியோ
கண்டுபிடித்து ரசிக்கும்
நான் ஆகச்சிறந்த
காதல் விஞ்ஞானி !

  My Dear Readers!  Thanks for Your Wonderful support all the way You shower 
Whenever I write something.  
New Readers,  Get me @ my Facebook ID  for
 Instant Updates as well : 
பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha)  .