Showing posts with label A cup of love. Show all posts
Showing posts with label A cup of love. Show all posts

Saturday, June 23, 2012

அத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥




தெளிந்த நன்
மழை நீரை
மட்டும்
அருந்தி வாழும்
அது
சாதகப் பறவை !
தேனினும் இனிய
உன்னை மட்டும்
எழுதும்
நான்
சாதகக் கவிஞன் !


 
ஒரே ஒரு நாள்
நம் தூக்கத்தை
கலைத்து
எழுப்பியது
காதல்...
இன்று
ஒவ்வொரு
இரவிலும்
அதைத்
தூங்கவிடாமல்
கையிலும்
தோளிலும்
நெஞ்சிலுமிட்டுக்
கொஞ்சிக்
கொண்டிருக்கிறோம் !
நன்றாக
நம்மிடம்
மாட்டிக்கொண்டது
காதல் !
 
உனக்கான
கவிதைகளாய்
என் எல்லா
நோட்டுகளிலும்
எழுதி வைத்தேன் ...
நான் விரும்பி
செய்த ஒரே
வீட்டுப்பாடம்
நீ மட்டும் தான்
அழகி !!



என் மௌனம்
உன் பெரும்
தேவை
என்கிற போது
என்அன்பின்
மொழிகள்
அனாதையாகிப்
போகிறதே
அதை நான்
என்ன செய்ய ?
ம்ம் ? என்ன செய்ய ?






எண்ணற்ற
உறவுகளுடன்
தொடங்கிய
வாழ்க்கையின்
எல்லை
எங்கிருந்தாலும்
பரவாயில்லை
அங்கு நீ
மட்டும் நில் !
உன் மடியில் என்
எல்லா
மூச்சையும்
முடித்துக் கொண்டு
காற்றோடு
காற்றாகிவிட்டால்
சந்தோஷம் !
 
மண்ணை
மழை
முத்தமிடுகையில்
எழும்
வாசத்தையும்,
உன்னை
நான்
முத்தமிடுகையில்
எழும்
வெட்கத்தையும்
ஒன்றாய்க்
கலந்து
ஓர் உணவு
செய்து
அதற்கு
அன்பெனப்
பெயரிட்டுத்
தின்று கொழுக்க
வேண்டும்....
உயிரெல்லாம்
நீயாகவும்
உணர்வெல்லாம்
மழையாகவும்
சில்லெனக்
குளிர வேண்டும் !


வரம்
கேட்கவில்லை,
நீயாய்
வந்தாய் .
சாபமும்
கேட்கவில்லை,
வந்த வழி
சென்றாய் .
விதியை
நொந்து
கொள்ள
விருப்பமில்லை.
உயிரும் உடலுமே
இங்கு நிலை
இல்லை !
இருப்பினும்
தூக்கிக் கொஞ்ச
ஆளில்லாமல்
தனித்துக் கிடக்கும்
அன்பை
நினைத்தால்
தான்
கத்தி அழத்
தோன்றுகிறது !
பாவம் !
ஒத்தையாய்
நிற்கிற
அத்தனை
அன்பும்
பாவம் .

 ●
ஒவ்வொரு
எழுத்தும்
உன்னை
எழுதிவிட்டு
எங்கேயோ
இருக்கிற
ஏதோஒரு
பெண்ணுக்காக
எழுதியதாக
நடிப்பது
நம் காதலுக்கு
நான்
வேறு வழியின்று
இட்டுக்
கொள்ளும் சூடு !

உன்னைப்
பிரதி எடுத்து
இடது கையில்
வைத்துக் கொண்டு
வலது கையில்
எல்லா
அழகையும்
தத்ரூபமாய்
வரைந்துவிட்டது
இயற்கை ...
சப்தமின்றி
பின்னால்
நின்று ரசித்த
வகையில் நான்
இயற்கையைவிட
இன்னும்
கொடுத்தவைத்த
காதலனாகிவிட்டேன் ! !
 
நீ
பார்த்த
நொடியிலேயே
பிடித்துப் போன
பொம்மையும்
பார்க்கப் பார்க்கப்
பிடித்துப் போன
நானும் என
ரெண்டு பெரும்
கொடுத்து
வைத்தவர்கள் !
உன் அணைப்பிலேயே
ஒவ்வொரு இரவும்
தூங்க !

 
வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

 
என் கவிதை
வீட்டில்,
எல்லாம் "நீ"யாய்
நிறைத்துப்
பூட்டிவிட்டு,
சாவியை
எங்கேயோ
தொலைத்து
விட்டதைப்
போலிருக்கிறது
இந்த இரவு !
 


எங்கேயோ
பாறைகளின்
இடுக்குகளில்
பூத்திருக்கும்
ஒற்றை மலரைப்
பார்த்து
வேதனைப்
படாமல்
இருக்க
முடிவதில்லை !
அது நீ இல்லாத
நானாகவே
தெரிகிறது !
 
 
உன் மத்தாப்புப்
பேச்சு
எல்லோருக்கும்
பெருவரம் .
எனக்கும் உன்
மௌனமும்
சேர்த்து !

Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Friday, March 30, 2012

ஜெயிக்கவே பிறந்தது காதல்


செல்ல சண்டைகளில் 
நம் இருவரையுமே 
வீழ்த்திவிட்டு 
ஜெயித்துவிடுகிறது 
காதல் !

Friday, March 9, 2012

சொன்னால் கேள்... நான் உன் நிலவில்லை..



இன்றைக்கு ஏனோ நிலவையே 
 வானத்தில் காணோம் 
என்று புலம்பிக்  கொண்டிருந்தேன் !
கவலை வேண்டாம் நாளை
உனக்கேற்ற வேறொரு வண்ணநிலவு
உன் வானத்தை அலங்கரிக்கும்
என்று  எங்கிருந்தோ அசரீரி சொன்னது  
 என் சொந்த  நிலவு !
இரண்டு நிலவுகள் ஒரு வானில்
இருக்க வாய்ப்பே இல்லை
என்று கூடத் தெரியாத
பைத்தியமேன்றே நினைத்துவிட்டதோ
அந்நிலவு  என்னை !?
  ஒரே நிலவு தான் !
அது என்றுமே நீதான் அழகி !

(அசரீரி - வானில் உண்டாகும் ஒலி )
I was searching all over ,
 as today my moon was missing
in the milky way of my heart.
Suddenly,A sound from the sky boomed..
Oh my god , It's my moon 
hiding some where and 
withering these words ..
 " Prabha , Some nice moon would
Decorate your heart soon
and please wait till you get that man "  
U Sweet stupid Damn pretty moon,
Please Dont act smart ,
as i have a strong belief
that You are the Sole moon
of my life ! and none other
could replace moon in the world
other than itself!

Monday, February 6, 2012

இப்படியும் ஒரு கோபம்

Love <3 = Battlefield ! :)

என் ஊமைக் கோபங்களையும் சரி,
உண்மைக் கோபங்களையும் சரி,
நீ யார் மீதும்
போர்த்த விடுவதில்லை..
முகம் சிவக்கும் என்
சிறுபிள்ளைச் சினங்கள்
அத்தனையும்
உனக்கே சொந்தமாகிக் கொண்டு
" என்னங்க.... நீங்க இப்ப
என்னதான திட்டுனீங்க...!?"
என்று கேட்கும் போது
ஒரு காதல் ஹிட்லர் நான்
பூக்களின் இளவரசியிடம்
தோற்றுப் போகிறேன்!

Despite whatever Rage that i possess,
You Would grab that all for Your sake
and would ask me..
Prabha, " I am the one whom you are 
scolding about ! Right?"
Ah! Pretty crazy gurl, 
"YES", I acclaimed and chilled down !
Queen of masses of flowers, like you
Sometimes Defeats the Brave rages of 
Lovable Hitlers Like Me !
Love is pretty awesome !

Friday, February 3, 2012

அன்பின் கைப்பிடியில் - Love Leads


பல பொய்யான சுகங்களுக்கும்
உறவுகளுக்கும் முன்
சில உண்மையான அன்பு மட்டுமே 
வாழச்சொல்லி வற்புறுத்திக்
கூட்டிச்செல்கிறது....
வாழ்க்கையின் பாதையில்
என்னைத்தான் கையில்
இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு !
Before a plenty of  deceitful 
relationships and pleasures
some TRUE PROFOUND LOVE
which exists rarely in the world, 
is what is that obligates me to 
Sustain in this world !
Love, Rules My World, and Destiny !

Thursday, February 2, 2012

முன்னூறு டன் காதல்

from "PEARLS OF PLATONIC LOVE" My first book on air !

தேவையில்லாத வீண்வேலை காதல்
என்று அறிவு வழியப் பேசும்
இனிய மக்களே !
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்!
சுவாசிக்கத் தெரியாதவனுக்கு
மூச்சுக்காற்றும் முன்னூறு டன்
சுமையாகத் தான் இருக்கும் !
To the People who persuades
by saying  Love is an useless work
Dear people, you know what ?
For he who does not know 
how to breath properly 
It would be like 
a 300 ton weight even!

Wednesday, August 3, 2011

ஒரு பூ சிரிக்கிறது


அதிகமாக மலரை நேசிக்கிறவர்கள் 
அதைச் செடியிலேயே 
சிரிக்க விடுகிறார்கள் ! 

அழகி !,
நீ மலரில்லை என்று சொன்னாலும் 
அதைஊர் நம்பப் போவதில்லை !

நான் உனைப் பறித்துக் கொண்டுவிட்டேன் 
என்று சொன்னாலும் 
அது உண்மையாகப் போவதில்லை !

எங்கோ இருக்கிறாய் ! 
என்னமோ செய்கிறாய் !

இன்னும் நீ செடியில் பூதான் !
அழகி !
எங்கோ நீ 
சிரித்துக் கொண்டே இரு !
இங்கே  நான்
ரசித்துக் கொண்டே இருக்கிறேன் !

இந்தக் கவிதையும்  அன்புமே  
நம் காதல் வரலாறெழுதும் !
 L o v e  Y o u  A z h a g i !

Tuesday, November 30, 2010

ஒரு கோப்பைக் காதல்

KarurPrabha @ anaadhaikathalan

என் ஒரு கோப்பை நெஞ்சிற்குள் 
உயிருக்கும் உணர்வுக்கும் 
உனக்கும் சண்டை !

உயிரையும் உணர்வையும் 
தூக்கி எறிந்து விட்டு 
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ ! 
 ஆம் ! எல்லாம் நீயாக ! 

போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின் 
இதற்கு மேல் என்ன எழுத ?

உயிரற்று உணர்வற்றுநான் 
ஒன்றுமேயற்றுப்  போனாலும் ,

உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும் 
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??