Friday, March 30, 2012

ஜெயிக்கவே பிறந்தது காதல்


செல்ல சண்டைகளில் 
நம் இருவரையுமே 
வீழ்த்திவிட்டு 
ஜெயித்துவிடுகிறது 
காதல் !

Thursday, March 29, 2012

என் இனிய தலையணையே...


என் அணைப்பிலேயே 
தூங்கும் தலையணையை 
எத்தனை தடவை 
உன் பெயர் சொல்லி 
அழைத்திருப்பேன்!

எத்தனை தடவை 
அதை கேட்டிருப்பேன் 
என்னைப் பிடிக்குமா 
என்று !? 
எத்தனை முறை 
முத்தமிட்டிருப்பேன் 
சப்தமில்லாமல் 
ஒவ்வொரு இரவும் !
எத்தனை முறை 
சிரித்திருப்பேன்,
எத்தனை முறை 
சினந்திருப்பேன்.., 

அத்தனை நொடியிலும்
அதுவும் சேர்ந்து
உன்னைப் போலவே  
மௌனப் புரட்சி
செய்கிறது !

கேட்பதை, கொடுப்பதை
எல்லாம்
வாங்கி கொண்டு , 
என் கேள்விகளுக்கும்
காதலுக்கும்
என்றைக்குதான்
பதில் சொல்லப்
போகிறதோ 
என் இனிய  தலையணை !!
  

Sunday, March 25, 2012

என்னை அவ்வளவு பிடிக்குமோ ?


எத்தனையோ வழிகளில்
எனக்குள் வந்து நிறைகிறாய் நீ 
உன்னைத் தடுத்து நிறுத்தினால் 
தான் என்ன ஆகிவிடப்
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
 தலையணை எடுத்தேன்
முகத்தில் கிடத்திப் புதைத்தேன்  
நிசப்தத்தில் திணறிக் கிடந்தேன் 
ஓரிரு நிமிடம் கடந்திருக்கும்...
     
உன்  ஒட்டுமொத்த ஆற்றலையும் 
திரட்டி எத்தனை  வீரியமாய்
என் கைகளைப் தட்டிவிட்டுத்
தலையணை தூக்கி எரிந்து 
எனக்குள் வந்து நிறைகிறாய்!

என் மூச்சே , 
என்னை அவ்வளவு 
பிடிக்குமா உனக்கு ?
 

Wednesday, March 21, 2012

இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் - பகுதி ஒன்று


# 01
நாள் முழுதும் உன் உள்ளங்கை மழையில் நனைந்துகொண்டிருக்கும் கைக்குட்டை நானாக இருந்திருக்கலாம் 
# 02
நீ கோபப்படும் போது உன் மூக்கின் மேல் முத்தமிட்டு சிரித்துக் கொண்டிருக்கும்  நாலு சொட்டு வியர்வைத் துளியாய் நான் இருந்திருக்கலாம் !
#03
உன் நாடித்துடிப்பை கட்டியணைக்கும் குட்டிக் கடிகாரம் நானாக இருந்திருக்கலாம் !
#04
யாருமில்லா பொழுதுகளில் நீ சிரித்துப் பார்த்தும் முறைத்துப் பார்த்தும் மகிழ்கிற நிலைக்கண்ணாடி நானாக இருந்திருக்கலாம் !
 #05
கழுத்தின் வழியாக நெஞ்சை கடந்து வயிற்றில் படுத்திருக்கும் 
சர்ப்பக் கூந்தல் நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு !


#06
சர்ப்பத்தை சூழ்ந்திருக்கும் மொட்டு மல்லிகைக் கூட்டம் நானாக இருந்திருக்கலாம் !
#07
புத்தகப்பை இல்லாத நேரத்தில் உன் நெஞ்சோடு அணைக்கப்பட்டு சுமந்து போகும் புத்தகங்கள் நானாக இருந்திருக்கலாம் !
#08
நான்தான் இவள் கைகளை முத்தமிடவேண்டுமென்று சமயத்தில் சப்தமிட்டு  சண்டையிட்டுக் கொள்ளும் ஐந்து வலைகளும் நானும் ஒன்றாய் இருந்திருக்கலாம் !
#09
வைரங்களாலும் வைடூரியங்களாலும் ஆன ஊர்களை இணைக்கிற தங்கத் தொடர்வண்டி உன் கழுத்துக்கு நானாக இருந்திருக்கலாம் !
 #10
நீ முதன் முதலில் கட்டிய சேலையில் உன்னை தொட்டுரசிய நூல்கள் எல்லாம் நானாக இருந்திருக்கலாம் !
 #11
வெறும் மல்லிகையோடு இல்லாமல் ஒரு ஆரஞ்சு ரோஜாவும் வைத்தால் ரொம்ப அழகாக இருக்கும் என்று சொல்லுகிற உன் மனநிலை நானாக இருந்திருக்கலாம் !
#12
பன்னிரு  நரம்புகள் சங்கமிக்கிற நடுநெற்றியில் உன் செந்நிற குங்குமம் நானாக இருந்திருக்கலாம் !
 #13
உன் கைகளை விட்டுவிட்டால் நீ சிவந்து போகிறாய் . உன் கைகளை கட்டி அணைக்கிற மருதாணியாக நான் இருந்திருக்கலாம் !
 #14
வெளுத்துப் போயும் "இது சாமிக் கயிறு " என்று காலம் காலமாக உன் மணிக்கட்டை ஆக்கிரமிக்கும் ரெட்டை சுற்றுக் கயிறாய் நான் இருந்திருக்கலாம் !
 #15
உன் கைபேசித் தொடு திரையில் கன்னத்தில் கைவைத்து சிரித்துக் கொண்டிருக்கும் குட்டிக் குழந்தை நானாக இருந்திருக்கலாம் ! 
 #16
 நீ வெட்கத்தில் கைகளால் கண்களை மூடிக் கொள்ளும் போது , உன் கண்களுக்கும் கைவிரல்களுக்கும் இடையில் ஒளிந்துகொண்டு உன் அழகை ரசிக்கிற கறுப்புக் காற்றாய் நான் இருந்திருக்கலாம் !
 #17
வெகு நேரத்திற்குப் பின் கலையத் தொடங்கும் உன் முதல் முடிக்கீற்று நானாக இருந்திருக்கலாம் ! அது அழகு ! 
  #18
உன்னைக் கடித்துவிட்டு ஒளிந்துகொள்கிற சிற்றெறும்பாகவோ 
இல்லை கிச்சுகிச்சு மூட்டியதர்க்காக நீ மன்னித்து தரையில் இறக்கிவிடப் படுகிற சாமி எறும்பாகவோ நான் இருந்திருக்கலாம் ! 
 #19 
உன் சிரிப்பிலிருந்து சிதறி விழும் நட்ச்சத்திர துகள்கள் அத்தனையும் நானாக இருந்திருக்கலாம் !

#20 
நீ தூக்கிவைத்துக் கொஞ்சிகொண்டிருக்கும் பெயர் தெரியாத ஏதாவதொரு அழகுக் குழந்தையாக இருந்திருக்கலாம் !

Monday, March 19, 2012

காதலில் Ph.D பெறுவது எப்படி ?


உன் ஒன்பதாயிரம் 
சோதனைச் சாவடிகளிலும் 
நீ கேட்கும் 
விளக்கங்களுக்கெல்லாம் 
பதில் சொல்லி முடிந்ததும் 
வார்த்தைகளால் குத்தப் பட்டு 
சாகடிக்கப் பட்டிருக்கும் 
என் காதல்  ! 

அப்போதாவது ஏன் 
எப்படியென்று  
கேள்வி கேட்காமல் 
என்னைப்  நிம்மதியாய்த்  
தூங்க விடு !
அன்பின்  சேயாய் 
நானிங்கு கிடந்தேங்க , 
ஆராய்ச்சிக் கூடத்தில் 
என் காதலைப் போட்டு 
எரித்துக் கொண்டிருக்கிறாய் நீ ! 

உலகம் கண்டிராத அன்பை
நான்சொல்லித் 
தெரிந்துகொண்ட நீ 
காதலில் டாக்டர் பட்டம் 
பெற்றதும் !

சொல்லி கொடுத்த நான்
சிறந்த சர்வதேச 
நோயாளிப் பட்டம்
பெற்றதும் தான் 
இப்போது மிச்சம் ! 

Wednesday, March 14, 2012

பசித்தால் என்ன செய்யும் காதல் ?


என் எல்லா கவிதைகளுக்கும்
சொந்தக்காரி நீயாக மட்டுமே
இருக்கவேண்டும் என்றேன்  !

ஏன் உனக்கிந்த 
குழந்தைத்தனமான ஆசை 
என்றாய் ..

சரியாகச்சொன்னாய் அழகி !
குழந்தைகள் தான் அழுது 
முரண்டு பிடிக்கும் ! 

அழுதபிள்ளைதான்
பால் குடிக்கும் !

பாலூட்டாத அன்னையுமில்லை !
பசியெடுக்காத பிள்ளையும் 
எந்த உலகத்திலும் 
என்றுமே இல்லை !

Friday, March 9, 2012

சொன்னால் கேள்... நான் உன் நிலவில்லை..



இன்றைக்கு ஏனோ நிலவையே 
 வானத்தில் காணோம் 
என்று புலம்பிக்  கொண்டிருந்தேன் !
கவலை வேண்டாம் நாளை
உனக்கேற்ற வேறொரு வண்ணநிலவு
உன் வானத்தை அலங்கரிக்கும்
என்று  எங்கிருந்தோ அசரீரி சொன்னது  
 என் சொந்த  நிலவு !
இரண்டு நிலவுகள் ஒரு வானில்
இருக்க வாய்ப்பே இல்லை
என்று கூடத் தெரியாத
பைத்தியமேன்றே நினைத்துவிட்டதோ
அந்நிலவு  என்னை !?
  ஒரே நிலவு தான் !
அது என்றுமே நீதான் அழகி !

(அசரீரி - வானில் உண்டாகும் ஒலி )
I was searching all over ,
 as today my moon was missing
in the milky way of my heart.
Suddenly,A sound from the sky boomed..
Oh my god , It's my moon 
hiding some where and 
withering these words ..
 " Prabha , Some nice moon would
Decorate your heart soon
and please wait till you get that man "  
U Sweet stupid Damn pretty moon,
Please Dont act smart ,
as i have a strong belief
that You are the Sole moon
of my life ! and none other
could replace moon in the world
other than itself!

Tuesday, March 6, 2012

அன்புள்ள அஃறிணைகள்


உயிரில்லா அஃறிணைகள் 
ஏன் இப்போழ்தெல்லாம்   
என் உயிரெடுக்கும் 
தொழிலை செய்து 
கொண்டிருக்கிறதோ 
தெரியவில்லை -உன் 

மின்னல் மூக்குத்தியாகட்டும்
கம்மல் தோடுகளாகட்டும்
கால்களின் கொலுசாகட்டும்
கைவளையாகட்டும் 
எதுவோ என்னமோ 

அத்தனையும் உன் அழகிற்கு 
அழகு சேர்க்கையில் 
ஏக கோபத்திலும் 
ஏக்கமாய் ஒரு ஆசையிலும்
மிதக்கிறேன் !

அவைகள் அத்தனையும் 
  நானாகவே  இருந்திருந்தால்
ஃறிணைகள் எல்லாம் 
 எத்தனை அழகென்று 
எழுதியிருப்பேன் ?

இருந்தாலும் சொல்கிறேன்
ஃறிணைகள் எல்லாம்  
சத்தியமாய் அழகுதான்
அது உன்னுடம்பை 
  தொட்டு நிற்கும் 
வரம் கிடைக்கும் 
போது மட்டும் ! 


Anklets , ear rings , nose screws ,
 & whatever the non living
ornaments are ...
They make me  jealous by all means , 
for they enrich you  24 /7 , 
No matter what color,size,
Or whatever their attributes are .


I  Wish i could be those things which 
touches your rosewood sweet skin !


Yet, i would declare them to be 
The most precious things in this world 
One and only when they are 
Destined to decorate your 
very own body theme !